|
மன்னினார்
- அம்பலத்தில் அருளாகிய ஐந்தொழிற் கூத்தியற்றுபவர்.
மன்னினார் - நிலைத்துள்ளார். படைத்தல்
முதல் அருளல் வரை இவ்வைந்
தொழிலுமுடையானாதலின் முதலிற் செல்வம் மேவச் செய்த அவனே
அச்செல்வத்தை மாறவும் செய்தனன் என்பது குறிப்பு.
ஆரம்
- என்பு புனைந்த - (442) என்ற இடத்தும் தழைத்தலாகிய
ஆத்தியும் வறட்சியாகிய எலும்பும் உடன் கூறிய குறிப்பும் காண்க. 6
| 446.
|
இன்ன
வாறு வளஞ்சு ருங்கவு மெம்பி ரானிளை
யான்குடி
|
|
| |
மன்னன்
மாறன் மனஞ்சு ருங்குத லின்றி யுள்ளன
மாறியுந்
தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன
கொண்டுபின்
முன்னை மாறி றிருப்ப ணிக்கண் முதிர்ந்த
கொள்கைய
ராயினார்.
|
7 |
(இ-ள்.)
வெளிப்படை. இப்படியாகத் தமது செல்வங்கள்
சுருங்கியபோதிலும், எமது பெருமானும், இளையான்குடியின் தலைவரும்
ஆகிய மாறனார் மனநிலை சிறிதும் சுருங்காமல்
நின்று, தம்மிடம்
இருப்பனவற்றை மாற்றியும் தன்னை மாறிக்கொடுக்கத் தக்கனவாகிய
கடன்களை வாங்கியும், பின்னும், முன்னர்ச் செய்துவந்த ஒப்பற்ற அடியார்
பூசையாகிய திருப்பணியிலே மேலும் முறுகிய நிலைமையை
உடையவராயினார்.
(வி-ரை.)
இன்னவாறு - தில்லை மன்னினார்
உன்னுதலும் அதனால்
வளஞ்சுருங்கியதும் ஒன்றினொன்று இடையீடு பெறாது உடனிகழ்ந்தன.
இறைவனது நினைப்பே உலகப் படைப்பு மறைப்பு முதலிய செயலாதலின்,
அந்நினைப்பாகிய காரணத்திற்கும் அதன் காரியமாகிய மறைவுக்கும்
இடையில் காலதாமதம்முதலிய வேறெதுவுமில்லை. ஆதலின் உன்னினார்
- சுருங்கிற்று - சுருங்கவும் என்று சுருங்கிய செயலை வேறு பிரித்துக்
கூறாராயினர். மேலும் செல்வப்பெருக்கைப் பெருக்கிக் கூறுவாரன்றிச்
சுருங்கியது முதலிய செயல்களைத் தம் வாக்காற் பிரித்துக் கூறுதல்
ஆசிரியர் மரபுமன்று. சுருங்கிய செயல் முற்றாய்
நிற்காது. பின்னர்ப்
பெருகிய செயலாய் முற்றியதாகிறது (465). ஆதலின் அதனை முற்றிய
செயலேயாக வினைமுற்றாற் கூறாது எஞ்சிய செயலாகச் சுருங்கவும்
என
வினையெச்சமாக உரைத்துச் சென்றார் என்றலுமாம்.
இளையான்குடி மன்னன்
இளையான் குடிப்பதி - (440)
என்றதும் காண்க. மன்னன் என்றதனால் இவர்
அவ்வூரில் ஒரு
சிற்றரசராகவோ குறுநிலமன்னராகவோ இருந்தனர் என்றும், மாறன்
-
என்றது பாண்டிநாட்டு அரசின் வழக்குப் பெயரென்றும், பிறவும் இங்கு
ஆராய்ச்சி செய்வாருமுண்டு. மாறன் என்பது அந்நாள் வேளாளர் கொண்டு
வழங்கியதோர் பெயர்போலும். ‘வல்லங்கிழான் மாறன்' என்பது
வேளாளர்க்குரிய பெயராய்ப் பேராசிரியர் தொல்காப்பியம் - மரபியல்.
“ஊரும் பெயரும்“ (74) என்ற சூத்திர உரையில் உதாரணங் காட்டியதும்
காண்க. வளஞ்சுருங்கிக் கடன் வாங்கு நிலைமையிலே அவர்க்கு
ஊர்த்தலைமை சிறப்பாகப் பெறப்படாமை உணர்க. ஊரிற் பெரியார் எனக்
கொள்ளுதல் சிறப்புடைத்தென்பர். “கலையார் கலிக்காழியர் மன்னன்“,
“புகலி வேந்தன்“, “வளர்நா வலர்கோன் நம்பியா ரூரன்“
என்பனவாதி
திருவாக்குக்கள் காண்க. மன்னன் - முன்னர்
வளம் பெருகிய காலத்தன்றி
வளஞ்சுருங்கிய காலத்து இங்கு மன்னன் என்றதன்
காரணம் மனஞ்
சுருங்குதலின்றி என்றதனாற் கூறினார். “செல்வ மென்பது சிந்தையி
னிறைவே“ என்பது பெரியார் பாட்டு. ஆதலின் மனஞ் சுருங்குதலில்லாத
துணையானே எல்லாச் செல்வமுமுடையார் ஆதலின் மன்னன் எனப்
பெற்றதாம். எல்லா முடையாரும் செய்யலாகாத அரிய செய்கையினை இவர்
வளமில்லாக் காலத்துச்செய்ய வல்லராதல் இந்த மனத்தை
|