பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்555

Periya Puranam

உடைமையானேயாம் என்பது பின்னர்க் காண்க. வல்லர் என மேற்பாட்டிற்
கூறிய குறிப்பும் காண்க.

     மனஞ் சுருங்குதலில்லாமை - செல்வமில்லாமை கருதி அடியார்
பூசையைச் சுருக்க எண்ணாது, உள்ள காலத்துச் செய்தது போலவே,
செய்தல் வேண்டுமென்று மனத்தில் ஆர்வமிக வுடையராய்ச் செயல்
புரிதல். பூசலார் நாயனார் சரிதங் காண்க.

     உள்ளன மாறியும் - உள்ளவற்றை விற்றுப் பூசைக்கான
பொருள்களைப் பண்டமாற்று வகையாலே பெற்றும். மாறி - பண்டமாற்றுக்
குறித்தது. இது நெருங்கு செல்வ மென (444) முன்னர்க் கூறிய செல்வ
வகையைப் பற்றியது.

     இறுக்க உள்ள கடன்கள என்றது இவ்வாறு பண்டமாற்றுவகையில்
நேரே பூசைப் பொருள்களாக மாறுதலன்றி நிலம் முதலிய (444) மற்றைச்
செல்வத்தின்மீது கடன்கள் பெற்று அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டு
பூசைப் பண்டங்களை விலைக்குப் பெறும்வகை குறித்தது. மாறி இறுக்கத்
தக்கனவாய் உள்ள கடன்கள் எனமாற்றி உரைக்க. இவை குறிப்பிட்ட
வகையாலே திருப்பிக் கொடுக்க உடன்பட்டு நிலம் முதலியவற்றின்மீது
வாங்கப்பெறும் ஒற்றி முதலிய கடன்களாம். தன்னை மாறி இறுக்க -
கடன் இறுத்தலாவது கடன்பட்ட பொருளை மீளத் தருதல். மாறி
இறுக்கத்தக்கன
என்றது ஒற்றிவைத்த பொருளை ஒற்றி என்ற தன்மையை
மாற்றி அதன் உரிமை நீக்கி விலைப்பட்டது எனும் தன்மையையடையும்படி
மாற்றியும் அது கொண்டு கடனைத் திருப்பிக்கொடுத்தல். தன்னை -
பொருள் கொடுத்து மீட்கும் உரிமை தன்னை. (Right of redemption -
Right to redeem)

     மாறி - மாறியும் எண்ணும்மை தொக்கது. தன்னை மாறி -
அந்நாளில் அடிமைவிற்கும் வழக்குண்மையின், தன்னையும் விற்று என்று
உரை கூறுவாருமுண்டு. அடிமையாகத் தம்மை விற்றுப் பொருள்கொள்வதும்
கடனாதலின் அது மேலும் கடனாவதன்றிக் கடனிறுத்தலாகாது;
அடிமையாகத் தம்மை விற்றாற் பின்பு, சுதந்தரமின்மையின் முன்னைத்
திருப்பணி செய்தலு மியலாது; அன்றியும் இங்கு நாயனார்க்கு விளை
நிலமும் வீடும் எஞ்சியிருக்கக் காண்கின்றோ மாதலின் அவற்றை விற்றலின்
முன் தம்மை விற்றல் கூடாதாம். அவ்வுரையின் பொருத்தம் ஆராய்க.

     பின் - கடன்கொண்ட பின்னும். சிறப்பும்மை தொக்கது. பின்
தன்னை மாறி
எனக் கூட்டிக் கடன்கொண்டபின் என்றுரைப்பாரு முண்டு.

     முன்னை - முன்செய்த. மாறில் திருப்பணி - ஒப்பற்ற அடியார்
பூசை இங்கு இறைவன் பணியோடொப்பத் திருப்பணி எனப் பெற்றது
குறிக்க.

     முதிர்ந்த கொள்கையர் - உறைப்புடைய நிலையினர். இவரது
கொள்கையும் அதுபற்றி நிகழும் செயலும், வறுமை காரணமாகத்
தளர்ச்சியடையாது முதிர்ச்சியடைந்தது என்க. செய்கை குறையினும்
கோட்பாடு மிக்க உறைப்புற்றது என்பார் கொள்கையர் என்றார். மிகச்
சிறிய வருத்த முதலியவும் வந்தவுடனே தாம் செய்யும் இறைபணி அடியார்
பணிகளிற் பிறழ்ந்துவிடும் இந்நாட் பேதை உலகர்க்கு அறிவுறுத்திய வகை
காண்க. இதனை அறிவிக்கவே இறைவன் நினைந்தனன் என்றதும் காண்க.

     முதிர்ந்த செய்கையர் - என்பதும் பாடம். 7

447. மற்ற வர்செய லின்ன தன்மைய தாக மாலய                             னானவக்  
  கொற்ற வேனமு மன்ன முந்தெரி யாத                   கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வது மின்றி நீடிய பேதை யாளுட                           னின்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு ஞால முய்ந்திட                           நண்ணினார்.
8

     (இ-ள்.) வெளிப்படை. மற்று அந்நாயனாரது செய்கைகள்
இத்தன்மையினவாகி நிற்க; விட்டுணுவும் பிரமனும் ஆகிய அந்த
வெற்றியுடைய பன்றியும்