பக்கம் எண் :


558 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

இத்தனை இன்னல்களுக்கு மிடையிலே கதவுதிறந்து, வந்த விருந்தினை
உள்ளமும் முகமும் மலர்ந்து உரிய உண்மைவகையிலே வரவேற்று
எதிர்கெண்டார் எனவும் வருவித்துரைத்துக் கொள்க. பண்புற -
விருந்தோம்பலுக்கு ஏற்ற பண்பு பொருந்தும்படி. அகனமர்ந்த அன்போடு
முகமும் மலர்ந்து உரிய பண்பினாலே வரவேற்றல் குறித்தது. இதன்
இயல்புகளெல்லாம் நீதிநுல்களுட் காண்க.

     பண்பு உற - வீடுபெறும் பண்பு தன்மை உறும்படியாக -
அத்தன்மை தம்மை உற்றதனாலே - என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம்.

     இல்லம் அடைந்த பின் என்பது பாடமாயின் நண்ணிய தவசியார்,
ஓர் தயாரிப்புமில்லாது பசிதலைக்கொண் டதிகரிக்கப் பெற்றாராய் நாயனாரது
இல்லத்தையடையவே அவர் பண்புற அவ்விருந்தை எதிர் கொண்டனர்
என்றுரைத்துக் கொள்க. இப்பொருளில் தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது
என்பன நற்ற வத்தவர் நிலைகுறித்தது. இது பின்னர்த் தீரவே பசித்தார்
(449) என்றதனோடும் பொருந்துமாறும் காண்க. இப்பொருள் சிறந்ததாகக்
காண்கின்றது. ஆயினும் பெரும்பான்மை கொண்டுள்ள பாடத்துக் கேற்ப
முன்னர் உரைக்கப் பெற்றது.

     விருந்து - புதுமை; புதியராய் வந்தார்மே னின்றது. இங்கு முன்
எந்நாளும் கண்டிராத புதுநிலைமை குறித்தது. “இம்மடத்திற் காணும்
படியிலாத நீர்“ - (அமர்நீதி - புரா - 10) என்றது காண்க. முன்னெல்லாம்
அடியாருடன் கலந்து வந்தனரேயன்றித் தனித்துத் தாமே
எழுந்தருளியதில்லையாதலின் இது புதுமை என்பார் விருந்து என்றார் .
எதிர்கொண்டு வரவேற்றலை ஆவாகனம் என்பது வழக்கு.         9

449. ஈர மேனியை நீக்கி யிடங்கொடுத்
 
  தார வின்னமு தூட்டுதற் காசையாற்
றார மாதரை நோக்கித் “தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்“ னென்று,
10

450. “நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
 
  இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாமின் னடிசி றகவுற
வமைக்கு மாறெங்ங னே?யணங் கே!“யென;
11

451. மாது கூறுவண் “மற்றொன்றுங் காண்கிலேன்;
 
  ஏதி லாரு மினித்தரு வாரில்லை;
போதும் வைகிற்றுப்; போமிடம் வேறிலை;
தீது செய்வினை யேற்கென் செய?“ லென்று;
12

452. “செல்ல னீங்கப் பகல்வித் தியசெந்நென்
 
  மல்ல னீர்முளை வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலு மாகு; மற்
றல்ல தொன்றறி யே“ னென் றயர்வுற;
13

453. மற்ற மாற்ற மனைவியார் கூறமுன்
 
  பெற்ற செல்வ மெனப்பெரி துண்மகிழ்ந்
துற்ற காதலி னாலொருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத் தொடங்குவார்,
14