பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்559

Periya Puranam
454. பெருகு வானம் பிறங்க மழைபொழிந்
 
  தருகு நாப்ப ணறிவருங் கங்குறான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்,
15

455. எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
 
  துண்ணெ னும்படி தோன்றமுன் றோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாமென்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து,
16

456. உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
 
  கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லாரிளை யான்குடி மாறனார்.
17

     449. (இ-ள்.) வெளிப்படை. (முதலில்) அவரது திருமேனியின் ஈரம்
போக்கிப் பின் அவர் எழுந்தருளியிருக்க ஓர் இடங்கொடுத்து, அதன் பின்,
அவர் தம் மன நிறைவு கொள்ளுமாறு அமுதூட்டுதற்கு
ஆசைகொண்டமையினாலே, தமது தாரமாகிய அம்மையாரை நோக்கி,
“இந்தத் தபோதனர் தீரப்பசித்துள்ளார்; நாம் செய்வதென்னே“ என்று
பின்னரும்,  10

     450. (இ-ள்.) வெளிப்படை. “முன்னர் இங்கு நமக்கே உணவில்லை
என்பதுண்மையே யாயினும் இமயமலை பெற்ற குலக்கொடியாகிய
பார்வதியின் பாகர்க்கினியவர் தமக்கு நாம் இனிய உணவு தக்கபடி
அமைத்தல் வேண்டும்; அது செய்யும் வழி யாது? அணங்கே!“ என்று
நாயனார் கூற, 11

     451. (இ-ள்.) வெளிப்படை. அதற்கு அம்மையார் விடை கூறுவாராய்
“அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக்
கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும் சென்று
தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை; தீவினையேனுக்கு இனி
யென்ன செயலுளது?“ என்று சொல்லிப் பின்னரும், 12

     452. (இ-ள்.) வெளிப்படை. செல்லல் நீங்குமாறு “இன்று பகலில்
வயலிலே விதைத்த செழிய நீர் முளை நெல்லைத் தேவரீர் வாரிக்கொண்டு
வந்து கொடுப்பீர்களானால், அடியேன் வல்ல வகையாலே அமுது
சமைத்தலும் ஆகும்; இதனைத் தவிர்த்து வேறொரு வழியும் அறியேன்“
என்றுகூறி வருந்தினாராக; 13

     453. (இ-ள்.) வெளிப்படை. மற்று அம்மொழிகளை மனைவியார்
சொல்லக் கேட்டலும் நாயனார் முன்னே தேடிவைத்திருந்த செல்வம்
பெற்றவர் போன்று மிகவும் மனமகிழ்ந்து பொருந்திய ஆசையினாலே சுற்று
நீருடைய தமது வயலுக்கு முளை வாரிக் கொண்டுவரப் போவதற்கு
ஒருப்பட்டுத் தொடங்குவாராகி; 14

     454. (இ-ள்.) வெளிப்படை. வான வெளியிலே விளங்கப் பெருமழை
பொழிதலாலே பக்கங்களும் இடைவெளியும் அறிய இயலாதபடி இருண்ட
நள்ளிரவானது கருகிய மைபோன்ற இருட்கூட்டம் தனது செறிவு விட்டு
உருகுகின்றது போன்று அந்நேரத்தே உலகெலாந் தோன்றியதாகவே,   15

     455. (இ-ள்.) வெளிப்படை. அதனை எண்ணுகின்ற இவ்வுலகத்தவர்
வேறு எவரும் துண்ணென நடுக்கமுறும் வகைதோன்ற, அவ்வாறு
அவ்விருள் கண்