பக்கம் எண் :


560 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     முன்னே புலப்படும் காலத்தில் நீடிய வண்ணமுடைய மைக்குழம்பே
யிதுவாம் என்று கொண்டு வெளிப்புறப்பட இயலாதபடி இருள் செரிந்த
நடுயாமத்திலே,                                          16

     456. (இ-ள்.) வெளிப்படை. தமது உள்ளத்தை அன்பானது தன்
வசப்படுத்திக்கொண்டு ஊக்கந்தந்து செலுத்தத் தாம் வாரிக் கொணரும்
முளைநெல்லைக் கொள்ளத் தக்கதொரு பெரிய இறைகூடையைத் தலைமேற்
கவித்துக் கொண்டு குறிவழியே சென்று நீர்ப்பறவைகள் தூங்கும் அந்த
வயலுக்குட் புகுமாறு வள்ளலாராகிய இளையரின் குடிமாறனார்
போயினார். 17

     இந்த எட்டுத் திருப்பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுபடுத்திப்
பொருள் கொள்ளத்தக்கன. இவற்றுள், முதல் ஐந்து செய்யுட்களும் ஒரு
முடிபு கொண்டனவாகவும், ஆறாவது பாட்டுத் தனி முடிபு கொண்டதாகவும்,
ஏழாவது எட்டாவது பாட்டுக்கள் தனி முடிபு கொண்டனவாகவும் கொண்டு
உரைப்பாருமுண்டு.

     449. (வி-ரை.) ஈரமேனியை நீக்கி - மேனி ஈரத்தை நீக்கி.
இரண்டனுருபைப் பிரித்துக் கூட்டி மாற்றுக.

     இடங்கொடுத்து - வந்தவர் எழுந்தருளியிருத்தற்கு ஒரு இடம்
கொடுத்து. இதனைத் தாபனம் என்பது சைவ சம்பிரதாயம்.

     இன்னமுது ஆரஊட்டுதற்கு என்று மாற்றி யுரைத்துக்கொள்க. அவர்
மனமகிழ எனவும், தமது மனமார எனவும் இருவழியும் கூட்டி யுரைக்கத்
தக்கது.

     தாரமாதர் - தாரமாகிய அம்மையார். தாரம் - மனைவி, பெறற்கரிய
மாதரார் என்றலுமாம்.

     தபோதனர் தீரவே பசித்தார் - தபோதனர் - தவத்தையே தனமாக
உடையவர். தவமாகிய செல்வத்தை யுடையவர். தவம் - சிவபூசை. தீரவே
பசித்தார்
- அறப்பசித்தார் - மிகவும் பசியுடையராயினர். “தண்டறு
சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந், துண்டது மூன்று புவனமு முண்டது“
என்ற திருமூலர் திருமந்திரத்தின்படி, (ஏழாம் தந்திரம் - மாகேசுவரபூசை -
155), அடியார் உண்ட வுணவு மூவுலகத்தினும் உயிர்களுக்குப் பசிதீர்க்கும்.
என்னை? இவர்கள் உண்ணவே, இவர்களுக்குள்ளே நிறைந்த இறைவன்
உண்கின்றான்; அவன் உண்ணவே, அவன் உயிர்க்குயிராய் நிறைந்த
மூவுலகத்துயிர்களுக்கும் அவ்வுணவு ஆகின்றது என்க.

     தீரவே பசித்தார் - நாம் இனிப் பசிப்பிணி இல்லாமற் றீரும்படி -
அதாவது பசிப்பிணியுடன் கூடிய பிறவி யறும்படி என்ற குறிப்பும் காண்க.
அவர் மிகப் பசித்து வந்த விருந்தினர் என நாயனார் அறிந்த வகை
மேலே “பசிதலைக் கொள்வது“ (448) என்றதன் கீழ்க் குறிக்கப்பெற்றது.
 10

     450. (வி-ரை.) நமக்கு முன்பு இங்கு உணவு இல்லை ஆயினும் -
இதனைத் தெரிந்தே தாம் கேட்பதனை மனைவியார் அறியும்படி
முன்னுரையாக இதனைச் சொல்லி நாயனார் தொடங்கியவாறு. தாம்
கேட்கும் வினாவுக்கு இஃதே யோர் விடையாகக் கூடுமாதலின் அது
தவிர்த்து வேறு விடையினை எதிர்பார்த்தவராய் இதனை எடுத்துக் கூறினார்
என்ற குறிப்புமாம்.

     இமக்குலக் கொடிபாகர்க்கு இனியவர் தமக்கு - குலக்கொடி
- 418 - பாட்டுப் பார்க்க. இமம் - பனி. இங்குப் பனியால் மூடப்பெற்றதாற்
காரணப் பேர் பெற்ற இமயமலைக்காயிற்று. ஆகுபெயர். கொடி -
கொடிபோன்றார் - பார்வதியம்மையார். ஆகுபெயர். பாகர்க்கு இனியவர்
தமக்கு
- ஒரு பாகத்தே உடைய சிவபெருமானுக்கு இனியராயின
அடியார்க்கு. இனி இதனை இச்சரித நிகழ்ச்சி குறித்துப், பாகர்க்கு இனியவர்
தமக்கு என ஒரு பொருள் குறித்துத் தனித்தனி வேற்றுமை யுருபு விரித்த
இரண்டு தொடராகக் கொண்டு, இறைவனையே குறிப்பதாக உரைத்தலுமாம்.
பாகரும் இனியவரும் ஆகிய இவருக்கு என்க. “என்னிலும்மினி யானொரு
வன்னுளன்“, “தேனொத்தெனக் கினியான்“ என்பனவாதி