|
பண்பினால் ஒன்றேயாயின
ஒற்றுமை நிலைகுறித்து நின்ற அழகும் காண்க.
“விளைத்த அன்புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்“ (கண்
-
புரா - 123). ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை
மலையையேறி“ (மேற்படி புரா - 103), “கும்பிட்ட பயன் காண்பார் போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்“ (திருஞான - புரா - 1023)
என்பன வாதி வழக்காறுகளை இங்கு வைத்துக் காண்க. குறும்பயிர்கள்
வேரோடு பறிக்கப் பெற்றபடியால் பாசப் பழிமுதல் என்றார். 21
461. (வி-ரை.)
கொழுநர் - கணவர்
(459); மனமகிழ்கறிகள் -
இங்குத் திருவமுதுக்காக வேண்டப்பெறுவனவற்றுள் இறுதியான கறிவகையும்
முட்டுப் படாமற் கைகூடியமையாலே திருப்பணி முற்றுப் பெறக்
கிடைத்ததென்று எண்ணினார். ஆதலின் மனமகிழ்கறிகள்
எனப் பெற்றது.
ஆய்ந்து - குறும்பயிரின் பல பகுதிகளிலே
வேர் முதலிய ஆகாத
பகுதிகளும் கீரை முதலிய ஆகும் பகுதிகளும், இலைக்கறி முதலிய ஆகும்
பகுதிகளிலே நோய், பழுப்பு, புழுவெட்டு முதலியன இல்லாத பகுதிகளும்
ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து பாகுபடுத்தி. கழுவி
- இலைக்கறிகளைச்
செம்மையாகக் கழுவிய பின்னரே அடுப்பில் வேவிக்க வேண்டுமென்பது
பாக நூல் விதியும், மருத்துவநூல் விதியுமாம்.
தக்க புனித பாத்திரம்
- கறிவகைகளுக்கு ஒத்தனவும் அடுதலிலே,
கைப்பு முதலிய பகைப்பயன் படாதனவுமாகிய பாத்திரந் தெரிந்து
கொள்ளுதல் வேண்டுவதும் அந்நூல்களின் விதியாம்; ஆதலின் தக்க
-
புனித என அடை கொடுத்துக் கூறினார். பாத்திரம் புனித மற்றவழிக்
கறிகள் பகைப்பயன் படுவனவாம் என்க. தக்க என்றதனால் கறிகளின்
தன்மைக்கு மாறுபடாமல் ஒத்தது என்றும், புனித
என்றதனால்
அப்பாத்திரந்தானும் தூய்தாக்கப் பெற்ற என்றும் குறித்தபடி.
கைம்மை வினையினால்
- கைப்பழக்கத் தேர்ச்சித் திறத்தினாலே.
வேறு வேறு கறியமுது
- ஒரே வகைக் குறும்பயிர்களை இலைவேறு,
தண்டுவேறு, முதலியவாகப் பொரிக்கறி, துவட்டல், புளிக்கறி முதலிய
பலவகையாக ஆக்கின கறிகள்.
பண்டை நினைவினாற்
குறையைநேர்ந்து - முன்னர்ச் செல்வமுற்ற
காலத்திலே இன்னும் பற்பல வகையாக உண்டிகள் “நாலு விதத்தி லாறு
சுவைத்திறத்தன“ (443) வாகச் சமைத்து அடியார்க் கமுதளித்து வந்த
நற்பெரு நிலை நனைவிற்கு வர, அக்குறையை இப்போது உள்ள மட்டில்
கைம்மை வினையினாலே இத்தனைபடியாக இவைகளை அமைத்து
அடியார்க்கமுதாக்கப் பெற்றோமே என்ற மன நிறைவினாலே நிரப்பிக்
கொண்டு. 22
462. (வி-ரை.)
கரியமுதான காட்டி - கைம்மை
வினையினாற்
செய்த பலவகை யமுதுகளையும் வகைப்பட நாயனார்க்கு மனைவியார்
காட்டினார. அடியார்க்குப் படைக்கும் முன்னர் அவற்றைக் கணவர்க்குக்
காட்டி அவரது உடன்பாட்டைப் பெறுதலுடன் அவரது யோசனையுங் கலந்து
அவசியமாயின் திருத்த வேண்டியவற்றை முன்னெச்சரிக்கையாகத் திருத்திக்
கொள்ள எண்ணி அவர்க்குக் காட்டியபடியாம். இஃது இல்லறத்துக்குரிய ஒரு
நற்பண்பு. இக்காலத்து இல்வாழ்வார் எத்தனைபேர் இவ்வழி நிற்கின்றார்கள்
என்பதுணர்தற்பாலது.
இணையிலாதவர்
- “தனக்குவமை யில்லாதான்“ என்பது குறள்.
“ஒப்புடையனல்லன், ஒருவனல்லன்“, “ஒப்புனக்கில்லா ஒருவனே“,
“இணையொருவர்தாமல்லால் யாருமில்லார்“ முதலிய திருவாக்குக்களுங்
காண்க. ஒப்பற்றவன் இறைவன் ஒருவனேயாம். இங்கு நாயனார் வந்த
அடியவரைத் தம் நியதிப்படி ஆண்டவர் என்றே கொண்டு அமுதூட்ட
எண்ணினாராதலின் அடியவரை இணையிலாதவர்
எனக் கூறினார்.
உண்மையில் அவர் இறைவனேயாதலைப் பின்னரே உணரப் பெறுகின்றனர்.
ஈண்ட
- விரைவில். என்ன - என்று கொண்டு.
|