பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்571

Periya Puranam

காட்டி அருண்மொழி அருளும் வகையும் பின்னர்க் கூறுதல் காண்க.
முன்னர் வந்தது இறைவனது சங்கமமாகிய திருமேனி. சோதியாய்க்கண்டதும்
“சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளி“ யுருவாம்
இலிங்கத் திருமேனி. பின்னர்க் காண்பது மகேசுர பேதமாகிய உருவத்
திருமேனி. இம்மூன்று திருமேனிகளையும் தாமே கொண்டு எழுந்தருளி
ஒரே காலத்தில் நாயனார்க்கு இறைவன் வெளிப்பட்டு அருள் புரிந்ததனாலே
நாயனாரது பெருமையும், அவர் செய்து வந்த அடியார் பூசைப் பயனும்,
அடியார் அளவிலார் உளமகிழப் பூசை கொண்டதன் பயனும் உலகம்
தேற்றம்பெற உணர்ந்துய்ய வைத்தலே இறைவன் றிருவுள்ளமாம்.
“அறிவிக்கவே“ (445) என்றதும் காண்க.  24

464. மாலயற் கரிய நாதன் வடிவொரு சோதி யாகச்
 
  சாலவே மயங்கு வார்க்குச் சங்கரன் றான்ம
                               கிழ்ந்தே
யேலவார் குழலா டன்னோ டிடபவா கனனாய்த்
                              தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை
                               நோக்கி,
25

465. “அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி
                                னோடும்
 
  என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன்
                                 றானே
முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி யேவல்
                                 கேட்ப,
வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தா
                      னெவர்க்கு மிக்கான்.
26

     464. (இ-ள்.) வெளிப்படை. திருமாலுக்கும் அயனுக்கும் அரியவராகிய
நாதர் கொண்டு எழுந்தருளி வந்த அடியார் வடிவமானது ஒரு சோதியாய்த்
தோன்றவே, அது கண்டு மயங்கி நின்ற திருத்தொண்டர்க்கு உணர்த்தும்
பொருட்டுச் சங்கரனார் தாமே மகிழ்ந்தவராகி, வாசனை பொருந்திய நீண்ட
கூந்தலையுடைய உமாதேவியாருடனே இடபவாகனத்தின்மீது வெளிப்படக்
காணும்படி எழுந்தருளி வந்து சீலம் பொருந்திய அடியார் பூசையினைச்
செய்துவந்த நாயனாரை நோக்கி,                               25

     465. (இ-ள்.) வெளிப்படை. “அன்புடையவனே! அன்பர்களது
பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உனது
மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன்றானே முன்னர்ப்
பெரு நிதிகளை ஏந்தி உன்சொல் வழியே ஏவல் கேட்டு நிற்க,
இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய் வாழ்க்கடவாய்“
என்றே யாருக்கும் மிக்காராகிய சிவபெருமான் அருளிச் செய்தார்.    26

     464. (வி-ரை.) மாலயற் கரிய நாதன் வடிவொரு சோதியாக -
நாதன் வடிவு - இறைவன் நாயனார் பொருட்டுக் கொண்டெழுந்தருளிய
அடியவர் திருவேடம். ஒரு - ஒப்பற்ற. வடிவு - சோதியாக - வடிவமே
மறைந்து சோதியாய்த்தோன்ற. மாலயற் கரிய என்றதனைச் சோதி
என்றதற்கடையாகச் சேர்த்தியுரைத்தலும் சிறப்பாம். முன் ஒருநாட் கொண்ட
“தகுங்லவு சோதித் தனியுருவம்“ மாலுக்கும் அயனுக்கும்
அறிதற்கரியதாயிற்று. இன்று கொண்டதும் சோதியுருவமேயாயினும்
அடியவராகிய நாயனார்க்கும் மனைவியார்க்கும் காண்டற்கெளியதாயிற்று.
“ஒளிகொள் மேனி யுடையாயும்ப ராளீயென், றளிய ராகியழுதுற் றூறு
மடியார்கட், கெளியா னமரர்க் கரியான்“ (காந்தாரம் - திருவெண்காடு -
6) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் முதலிய எண்ணிறந்த
திருவாக்குக்கள் காண்க. இக்கருத்தையே “மாலய னானவக் கொற்ற
வேனமும் அன்ன முந்தெரி யாத கொள்கைய ராயினார்“ (447) என்று
முற்குறிப்பாகக் கூறியருளியதுங் காண்க.

     ஆக - ஆயினதாலே. சாலவே மயங்குவார் - மயங்குதல் - அறிவு
வியாபரியாதிருத்தல். இது திகைப்பின் மிகுதியால் உண்டாவது. சங்கரன -
சுகத்தைச் செய்ப