|
எவர்க்கும்
மிக்கான்
- முழுமுதல்வன் - சிவபெருமான். சோதியாக -
மயங்குவார்க்கு - சங்கரன் - எவர்க்கு மிக்கான் -மகிழ்ந்தே - தோன்றி -
நோக்கி - அன்பனே - நீ அணங்கினோடும் - உலகம் எய்தி -
கிழவன்றானே ஏவல் கேட்ப - இன்பமார்ந்திருக்க என்றே - அருள்
செய்தான் என இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடிக்க.
இருப்பீராமென்றருள்
- என்பதும் பாடம். 26
| 466.
|
இப்பரி
சிவர்க்குத் தக்க வகையினா லின்ப நல்கி
|
|
| |
முப்புரஞ்
செற்றா ரன்பர் முன்பெழுந் தருளிப்
போனார்
அப்பெரி யவர்தந் தூய வடியிணை தலைமேற்
கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன் செயலினை
விளம்ப
லுற்றேன்.
|
27 |
(இ-ள்.)
வெளிப்படை. இப்பரிசாக இவர்க்குத் தகுந்த வகையினாலே
இன்பங் கொடுத்துப் பின்பு திரிபுர மெரித்த இறைவனார் அன்பரின் முன்பு
தோன்றிய வெளிப்பாட்டு நிலையினின்றும் தமது வியாபக நிலைக்குள்
எழுந்தருளிப் போயினார். அந்தப் பெரியவராகிய இளையான்குடி மாற
நாயனாருடைய தூய திருவடியிணைகளை எமது தலைமேற் சூடிக்கொண்டு,
அத்துணைகொண்டு மெய்ப்பொருள் என்ற பேருடைய
சேதிநாட்டரசரது
செய்தியைச் சொல்லப் புகுகின்றேன்.
(வி-ரை.)
இது கலிக்கூற்று. இதுவரை சொல்லிவந்த சரிதத்தை
முடித்துக் காட்டி மேல்வருஞ் சரிதத்திற்குத் தோற்றுவாய் செய்தபடி.
இப்பரிசு
- மேலே சரிதத்திற் கூறியபடியாலே.
தக்கவகையினால் - இவர்செய்த திருத்தொண்டிற்குத் தகுந்த
வகையினாலே. அது மேற்பாட்டிற் காண்க.
முப்புரஞ் செற்றார்
- அடியாரது மும்மலங்களையும் நீக்கி
அடியவரை அளவில்லா ஆனந்தத்தில் வைக்க வந்த நிலையாதலின்
இப்பெயராற் குறித்தார். “முப்புரமாவது மும்மல காரியம்“ - என்பது
திருமந்திரம். முன்பு - முன்பு நின்றும் ஐந்தனுருபு
விரிக்க.
எழுந்தருளிப் போனார் - வெளிப்பாட்டு நிலையினின்றும் நிறைவு
நிலையினுள் மறைந்தனர். பெரியார் - செய்தற்கரிய
செயல் செய்தார்.
தலைமேற் கொண்டு
விளம்பலுற்றேன் - அடியார் புகழ்
அளவிடற்கரிதென்று கூறிய யான், இப்பெரியவரைத் துதித்து அவர் பாதந்
தலைவைத்த புண்ணியத்தின் துணைகொண்டு சொல்லலுற்றேன் என்பது.
சேதி வேந்தன் -
சேதி - நாட்டுப் பெயர். மெய்ப்பொருள் -
நாயனார் பெயர். செயல் - செய்கை; சரிதம். 27
சுருக்கம்
:- இளையான்குடியிலே வாய்மையில் நீடிய சூத்திர
நற்குலத்திலே மாறனார் என்ற பேருடைய பெரியார் அரனிடத்திலும்
அடியாரிடத்திலும் அன்பு மிகுந்து விளங்கினார். அவர் உழவுத் தொழிலால்
வரும் செல்வமும், அடியார் பூசைசெய்தல் வேண்டுமென்ற சிந்தையும் தாம்
பெற்றவர். அதுபோலவே உலகர் யாவரும் பெற்று வாழவேண்டுமென்ற
விருப்பமுடையராய், இவ்விரண்டும் பெற்றதனாலுளதாம் நீடுபயன்
கொள்வாராகிச், சிவனடியார்கள் யாவரேயாயினும் தம்முன்னர்
வருவார்களாயின் அவர்களடியார்களாவார் என்பதொரு திறத்தையே
நினைத்து, அவர்களை எதிர்கொண்டழைத்துத், தமது மனைக்குக்
கொண்டுவந்து, பாதம் விளக்கி, ஆசனத்தில் இருத்திப், பூசித்து, நான்கு
வகையாலும் ஆறு சுவையாலும் அமைத்த நல்ல உணவூட்டி வந்தார்.
இவ்வாறு நாளுநாளும் எண்ணில்லாத அடியார்கள் வந்து மாகேசுவர பூசை
கொண்டு மகிழ்ந்து ஆசிர்வதித்துச் சென்றதன் பயனாகக் குபேரன்போலச்
செல்வங்களெல்லாம் நிறையப் பெற்றவராய் மாறனார்
வாழ்ந்து
வருவாராயினார்.
செல்வம்மிக்க நாளிலே இப்படியாகச் செய்வதன்றியும்,
உண்மையாகவே வறுமை வந்து துன்பம் நேரிட்ட காலத்தும் இப்படியே
செய்ய இவர் வல்லவர் என்று உலகத்துக்கு அறிவிக்கும்
பொருட்டுச்
சிவபெருமான் இவரது செல்வங்களை
|