பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்581

Periya Puranam

மாதலின் அது வாராமற் காக்கும் ஒழுக்கத்தில் நின்றமையானும்,
இச்சரிதத்தில் இவர், பின்னர்த், தம்மை அடர்த்தானைப் பகைவன் என்று
காணாதுஅவன் தாங்கிய வேடத்தினையே மெய்ப்பொருளெனத்
தொழுதனராதலானும், அதுவே மெய்ப்பொருள் என்று கொண்டதே இவரது
சரித உண்மையாதலானும் வேடமே என்று தேற்றம் பெறக்கூறியவாறுமாம்.
மேலும் அரசாங்கத்திற்குரியதாய் விதித்த வேடந் தாங்கி வந்தோனை
அவ்வேடத்தினை நோக்கி இயல்பில் அவன்பால் அரசாங்கத்திற்குரிய
வணக்கம் செலுத்துவோமே யன்றி, அவனது குணம் குலம் முதலியவற்றைக்
கண்ட பின்னர் வணங்கும் வழக்கின்மைபோல, அடியவர் வேடமே சிந்தித்து
வழி படுதற்குரியது என்ற கொள்கை குறித்ததுமாம்.

     அரசியல் நெறியில் வந்த அறநெறி வழாமற் புல்லி என்றதனாலும்
இவர் சைவச் சார்புடையரேனும் தமது அரசின்கீழ் வாழும் எல்லா
வகையினரையும் கோட்டமின்றிக் காத்து வந்தார் என்க.

     “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது“ என்பது அப்பர் பெருமான்
தேவாரம். நமது ஆங்கில அரசர் தாம் கிறித்துவமதச் சார்புடையரேனும் பிற
எல்லாச் சமயங்களையும் காவல் புரிந்துவரும் அறநெறி முறையும் இங்கு
வைத்துக் காண்க. இதுவே நமது முந்தை நல்லரசர் கண்டு
கைக்கொண்டொழுகிய முறை என்பது அரசியல் நெறியின் வந்த
என்றதனாற் பெற்றாம். “அறங்காப்பான்“ (121) என்றதுங் காண்க.

     மாற்றலர் முனைக்கண் மாற்றி என்றதனாற் பகைவரால்
வரும்பயத்தை வாராமற் காக்கும் அரசர் கடமை குறிக்கப்பெற்றது (121)
எனவும், அது புறக் காவலினையும். நீதி ஓங்கும் நீர்மை என்றது அகக்
கரணத்தாற் செய்யும் உட்காவலினையுங் குறிக்கும் எனவும், வேடமே
சிந்தை செய்வார்
என்றது அவர் தம் உயிர்க்குச் செய்துகொண்ட
காவலினைக் குறிப்பதென்றும் கூறுவாருமுளர்.

     வந்திங் கறநெறி - என்பதும் பாடம்.  2

     469. (வி-ரை) மங்கையைப் பாகமாக உடையவர் -
சிவபெருமான். மன்னும் கோயில் எங்கணும்
- நிலைபெற்று
வெளிப்பட்டு அருளும் கோயில்கள் எங்கெங்கேயும் “எத்தானத்தும்,
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர், கலிவலி மிக்கோனைக்
கால்விரலாற் செற்ற கயிலாய நாதனையே காணலாமே“, “இந்துசே
கரனுறையு மலைகண் மற்று மேத்துவோ மிடர்கெடநின் றேத்து வோமே“,
“கள்ளார்ந்த கொன்றையா னின்றவாறுங், குளங், களங், கா வென
வனைத்துங் கூறுவோமே“ என்று பலவகையாலும் அப்பர் பெருமான் காட்டி
யருளிய கோயில்களும், நின்றதிருத் தாண்டகத்தில் “இருநிலனாய்த்
தீயாகி“ முதலியனவாக இறைவன் வடிவுகொண்டு நின்ற நிலைகளும்
இறைவனை வணங்கிப் பூசித்தற்குரியனவாம். திருமுருகாற்றுப்படையிலே
“வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட, ஆண்டாண் டுறைதலு மறிந்த
வாறே, ஆண்டாண் டாயினுமாக“ என உரைத்தபடியுங் காண்க.

     எங்கணும என்றதனால் “நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்,
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக“ என்றபடி சிவபெருமானை முதலாகவைத்துப் பிற எல்லாத்தெய்வக் கோட்டங்களும் உள்ளிட்டுரைத்துக்
கொள்ளலுமாம். அவ்வவர் நிலைக்குத்தக்கவாறு எல்லாத் தெய்வங்களுமாய்
நின்று வருபவன் சிவபெருமானே என்பது துணிபாதலின் இதனின்
முழுமுதற் கடவுள் வழிபாட்டுக்குப் போந்ததோர் இழுக்குமின்றென்க.
அரசனாவான் எல்லாக் கோயில்களையுங் காவல் புரியுங் கடமை
பூண்டவன் என்பது அறநூற்றுணிபாம். இதுபற்றி நமது முன்னோரரசில்
நிகழ்ந்தனவும், நம்நாட்டு இந்நாள் அரசியல் நிகழ்கின்றனவும் ஆகிய
அரசியல் முறைகளையும் இங்கு வைத்துக் காண்க.

     பூசை நீடி - நித்திய வழிபாடு தவறாமலும், காலங்கள் தவறாமலும்
நீடித்து நிகழ்ந்துவரச் செய்து. சிறப்பு - நைமித்திக மென்பர் -
திருவிழாக்கள். இவை