பக்கம் எண் :


582 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

வற - கொடையிற் குறைபாடின்றி. தமது பிறவியாகிய குறைவு அறும்படி
என்றலுமாம். அடியார்கள் “ஒன்றினாற் குறைவுடையோம் அல்லோம்“ என்ற
நிறைவுடையராதலின் அவர்களது குறைவு அறும்படி என்றுரைப்பது
பொருந்தாதென்க.

     கொடுத்து வந்தார் - கொடுத்தலைத் தமது நியதியாக மேற்கொண்டு
ஒழுகி வந்தனர். கொடுத்து உவந்தார் - “ஈத்துவக்கு மின்பம்“ என்றபடி,
கொடுத்து, அவ்வாறு கொடுத்ததினாலே மகிழ்வடைந்தார் என்றலுமாம்.

     இந்நான்கு பாட்டுக்களும் ஒருமுடிபுகொண்டன. நாட்டு - ஊரின் -
மன்னி - வரும் - மலாடர் கோமான் - பூண்டு செய்வார் - மாற்றி மிக்கார் -
செய்வார் - கோயில் - நீடி மல்கப் - புரிந்து வாழ்வார் - இல்லார் - என்று -
மனத்தினோடு - கொடுத்துவந்தார், எனத் தொடர்ந்து முடித்துக்கொள்க.

     செய்வார் - மிக்கார் - வாழ்வார் - இல்லார் என்பன அவரது
மனநிலையான கொள்கையின் இயல்பையும், கொடுத்துவந்தார் என்பது
அக்கொள்கையின்படி அவர் செய்துவந்த திருத்தொண்டின் செயலையும்
குறித்தன. வேத உள்ளுறை அரன் பூசையும் அடியார் பூசையும் போற்றுதலே
யாமென அதன் வாய்மை விளங்கிட மேன்மை பூண்ட நாயனார் செய்த
அவ்விரண்டிலே, அரன் பூசை போற்றுதல் கோயில் எங்ஙணும் மல்கப்
போற்றுதல் புரிந்து என்றதனாலும், அடியார் பூசை போற்றுதல் நாயன்மார்
அணைந்தபோது கொடுத்து வந்தார் என்றதனாலும் உரைக்கப் பெற்றன.
இவ்விரண்டினுள்ளும் அன்பர் பூசையிலே திருவேடத்தினையே சிறக்கச்
சிந்தனையில் வைத்து “நேய மலிந்தவர் வேடமும் அரனெனத் தொழுமே“
என்ற விதிக்கிணங்கத் தொழுதனர் என்பதும், அது இச்சரித விளைவாகிய
உள்ளுறையாமென்பதும் குறித்து ஏவல் செய்வார் - சிந்தை செய்வார் என
முதலில் விதந்து எடுத்துக் காட்டப்பெற்றதாம். சிந்தை செய்வார் என்றது
மனத்தாலும், போற்றுதல் புரிந்து வாழ்வார் என்பது வாக்கினாலும், ஏவல்
செய்வார் - கொடுத்துவந்தார்
என்பன காயத்தாலும் நிகழ்ந்த குறிப்பும்
காண்க.

     கொடுத்து வாழ்ந்தார் - என்பது பாடம்.  4

471. இன்னவா றொழுகு நாளி லிகற்றிறம் புரிந்தோர்
                                மன்னன்
 
  அன்னவர் தம்மை வெல்லு மாசையா லமர்மேற்
                               கொண்டு
பொன்னணி யோடை யானை பொருபரி காலாள்
                                 மற்றும்
பன்முறை யிழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப்
                               போனான்.
5

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு இவர் ஒழுகி வருகின்ற காலத்திலே ஓர்
அரசன் இவருடன் பகை கொண்டு இவரை வெல்லும் ஆசையினாலே, போரில்
எதிர்த்து வந்து தன்னுடைய பொன்னாலியன்ற முகபடாம் அணிந்த யானை,
போர்க்குதிரை, காலாள் முதலிய பலவற்றையும் பலமுறை இழந்தவனாய்த்
தோற்று அவமானமடைந்து போயினான்

     (வி-ரை.) இகல் திறம் புரிந்து - உண்மையில் இகலுக்கு எவ்வித
நேர்மையான காரணமுமின்றி இகலும் நிலையைத்தானே வருவித்துக் கொண்டு.
468-ல் கூறியபடி நாயனார் மாற்றலரைப் போரில் வெற்றி கொண்டது
அறத்தின் காரணம் பற்றி எழுந்ததாம். இங்குக் குறித்த ஓர் மன்னன் இகல்
திறம் புரிந்து
அவ்வாறின்றி, வலிந்தசெயல் மேற்கொண்டமை குறித்தது.
புரிந்து
- அறவழி நில்லாது இகலும் திறத்தையே சிந்தித்தவனாய் நின்றான்
என்பது குறிப்பு. இதற்கு அறம் பற்றாத மண்ணாசையே காரணம் என்பார்
பின்னர் ஆசையால் என்றார். அறவழி நிற்கும் செங்கோலரசரைப் பிற அரசர்
நேசப்பான்மை பூண்டொழுகுதல் அரசநீதி யியலாம்.

     “புல்லாதார் முரணடக்கிப் பொருள்கவர்வா ரென்பதெவன்?
     செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை