|
நித்தியத்தில் நேரக்கூடிய
குறைகள் தீர அவ்வப்போது செய்யப் பெறுவன.
“சிறப்பொடு பூசனை“ திருக்குறள். 101-ம் பாட்டின் கீழ் உரைத்தவை காண்க.
ஏழிசைப் பாட லாடல்
- இவை நித்தியபூசையிற் பொதுவகையானும்,
சிறப்பிலே மிகச் சிறப்பு வகையானும் கொள்ளுதற்குரியன. ஏழிசையுடைய
பாட்டுக்களும், பாட்டுடன் கூடிய ஆடல்களும் என உம்மை விரிக்க. இவை
நித்திய நைமித்திகமெனும் இரண்டிற்கு முரியவாகலின் இரண்டிற்குமிடையில்
வைத்தார். 101-ம் பாட்டும் உரையும் காண்க. பாடலாடல் பூசைச் சிறப்பின்
அங்கங்களாம். ஏயர்கோனார் புராணம் - 271 - முதலியனவும் காண்க.
போற்றுதல் புரிந்து
வாழ்வார் - சிவாலய முதலாகக் கோயில்களைப்
போற்றுதல் அரசர்க்குரிய கடனென்பதனைப் பின்னர் நமிநந்தியார் புராணம்
19, 20 பாட்டுக்களில் விரித்து கூறியதும் காண்க. போற்றுதல்
- பாதுகாத்தல்.
புரிந்து - (போற்றுதலைச்) செய்து என்க.
இடைவிடாது சொல்லுதல்
என்றலுமாம். வாழ்வார் - அதனையே தமக்கு
வாழ்வாகவும் கொண்டவர்.
தங்கணாய்கனுக்கு அன்பர் தாள் அலால்
சார்பு ஒன்று இல்லார் -
தங்கணாயகர் - தாம் வழிவழிச் சிவனடிமைத் திறத்திலே வந்தாராதலின்
தமது நாயகராகக் கொண்ட சிவபெருமான் என்க. தங்கள் - வழிவழி உரிமை
குறித்தது. “மீளா வடிமை உமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே“ என்ற
நம்பிகளது தேவாரங் காண்க. “மாதொருபாக ரன்பின் வழிவரும்“ (467)
என்றதுங் காண்க.
சார்பு
- இறைவனது சார்பிலே வழிவழி வந்த இவர், இவ்வுலகிலே
வெளிப்படக் குலவும் சார்பாக அன்பர் தாள்களையே பற்றி ஒழுகினார்
எனவும், அந்தச் சார்பினைத் தவிர வேறு சார்பு ஒன்றினையுஞ் சார்பாகக்
கருதுவாரல்லர் எனவும் கூறியபடியாம். அன்பர் வேடத்தின்
வழிபாட்டினையே தமக்குத் தமதுயிரினுஞ் சிறந்ததாகக்கொண்ட வரலாறு
இச்சரிதம் என்ற முற்குறிப்புமாம். அன்பர் தாள்களைத் தம்மினுந் தமக்கினிய
சார்பாகக்கொண்டு வாழ்பவர் என்க. “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்
மற்றழித்துச், சார்தரா சார்தரு நோய்“ எனத் திருவள்ளுவநாயனார்
மெய்யுணர்தலுட் கூறிய உண்மையினையே மெய்ப்பொருளாகிய இந்நாயனார்
கடைப்பிடித்து ஒழுகினார் என்ற பொருத்தமுங் காண்க.
பாகமாக வைத்தவர்
- என்பதும் பாடம். 3
470. (வி-ரை.)
தேடிய மாடு - அறச்சார்பிலே
செலுத்திய அரசியலில்
தாம் தமது நாளிலே தேடி வைத்த நிதி. “மறத்தாறு கடந்த செங்கோல்
வழுதி! நின் பொருள்களெல்லாம் அறத்தாற்றி னீட்டப்பட்ட“ என்பது
திருவிளையாடற் புராணம்.
நீடு செல்வம்
- தமக்கு முன் முந்தையரசர் வைத்துப் பெருகி
நீடிவந்துள்ள சேமநிதி முதலியன. தேடியதால் நீடிய என்றலுமாம். மாடு -
பொன், மணி முதலியவையும், நீடு செல்வம்
- நிலம் முதலியவையும்
என்றுரைப்பாரு முண்டு.
தில்லை மன்றுள் ஆடிய
பெருமான் - தாம் தமது ஆன்மார்த்த
நாயகராகக் கொண்டு வழிபட்ட ஸ்ரீ நடேசப் பெருமான். “புரவலர்
மன்றுளாடும் பூங்கழல் சிந்தை செய்தார்“ (488) என்றதுங் காண்க. விரிவு
ஆண்டுக் காண்க.
அன்பர்க் காவனவாகும்
- செல்வ முதலியவை யாவும் அடியார்க்
காவனவேயாம். அன்பர்க்காவனவே ஆகும் - ஆகாதன பொருளல்லனவாம்
என்றுரைத்ததுமாம்.
நாடிய மனத்தினோடு
- கொடுத்துவந்தார் என்று முடிக்க. நாடிய
மனம் - உண்மையிலே நாட்டங்கொண்டு அதில் நிலைத்த மனம்.
நாயன்மார் - தம்மை ஆளுடைத் தலைவர்களாகிய அடியார்கள். நாயனார்
- சிவபெருமான் பெயர். அது அவனையே போன்றவர்களாதலின்
அவனடியார்களுக்காயிற்று. முன் உரைத்தவை காண்க.
கூடிய மகிழ்ச்சி
- அவர்களது பெறற்கரிய சேர்க்கை தம்பாற்
கூடப்பெற்றதால் உளதாம் மகிழ்ச்சி. கூடிய
- அளவிற் பெருகிக் கூடிய
என்றலுமாம். குறை
|