| 491.
|
விரைசெய்
நறும்பூந் தொடையிதழி வேணி
யார்தங்
கழல்பரசிப் |
|
| |
பரசு
பெறுமா தவமுனிவன் பரசி ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின்
செழுவளனும்
வரையின் வளனு முடன்பெருகி மல்கு நாடு
மலைநாடு.
|
1 |
புராணம்
:- விறன்மிண்டர் எனும் பேருடைய நாயனாரது
சரிதவரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இச்சருக்கத்து
ஆறாவது விறன் மிண்ட நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- விரிகின்ற பொழில்கள் சூழும் திருச் செங்குன்றூரில்
அவதரித்தவராகிய விறன்மிண்டருக்கு நான்
அடியேனாவேன். விரி - சூழ்
- வினைத் தொகைகள்.
குன்றை
- திருச் செங்குன்றூர். குன்றையார் - அதில்
அவதரித்தவர்.
விரி பொழில் சூழ் - நகரச் சிறப்புக் குறித்தது. விறன்
மிண்டர் - இஃது
நாயனாரது இயற் பெயரோ? அன்றி அவர் செய்த திருத் தொண்டின் விறலும்
மிண்டும் கண்டு, அவை காரணமாக வழங்கிய பெயரோ? என்பது சிந்திக்கத்
தக்கது. இப்பெயரே சரிதங் குறிப்பதும் (497) காண்க.
வகை
:- பேசும் பெருமை - திருத்தொண்டர்களது
பெருமைகளைப்
பேசுவதாகிய பெருமை. இவையே பேசத் தக்கவற்றுட் சிறந்தனவாகலான்
என்பது. தேவர் முனிவர்களும் மற்றும் யாவர்களும் புகழ்ந்து பேசிப்
போற்றுகின்ற பெருமையுடைய என்றலுமாம். சரிதங் காண்க. அவ்வாரூ
ரனையும் - அகரச் சுட்டுச் சிறப்புக் குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு.
பிரானவனாம் ஈசன்றனையும் - ஆரூரரை ஆண்ட
தியாகேசராகிய
எல்லாருக்குமிறைவரையும். பிரான் - ஆரூரருக்குப்பிரான்.
ஆரூரருக்கு
என்பது வருவிக்க. இஃது சிறப்பின்மேற் சிறப்புக் குறித்தது. பேசும்
பெருமை
என்றதனைப் பிரான் என்பதனோடுங் கூட்டுக. “புறகுதட்டு
என்றவன்“-
இவர்கள் அடியார் திருக்கூட்டத்திற்குப் புறம்பாவார் என்று சொல்லிய
திண்மையுடையார். ஈசனுக்கே நேசன் - புறகுதட்டென்ற
அந்த
இறைவனுக்கே அன்புடையவர். புறகுதட்டென்றதற்குக் காரணம் அடியார்
பாலும் அவருள்ளிருக்கும் அவ்விறைவன்பாலுங் கொண்ட நேசம் என்பது.
முன்னர்ப் “புறகு“ என்றதன் பின் தியாகேசர் வெளிப்பட்டுவர அவரருள்
கொண்டு திருத்தொண்டத் தொகைபாடி அடியார்களைத் துதித்த பின்
ஈசனுக்கேயும் நம்பிகட்கேயும் நேசன் என உரைத்தலுமாம். ஈசனுக்கே
என்றதனால், தொடர்ச்சியும் சிறப்பும் பற்றி அடியார்க்கே என்பதனையும்
உடன் வருவித்துக் கொள்க. எனக்கும் பிரான் -
என்னையும் ஆண்ட
தலைவர். உம்மை இழிவுசிறப்பு. மனைக்கேபுக....விறன்மிண்டனே
-
மனைகளுக்குள்ளே புகும்படி நீடிய தென்றற் காற்று வீச ஆதரவாயுள்ள
பொழில் சூழ்ந்த ஊராகிய திருச்செங்குன்றூரில் அவதரித்த
விறன்மிண்டரேயாவர். நகரின் செல்வமும் சிறப்பும் குறித்தது. ஏகாரம்
இரண்டும் தேற்றம். விறன்மிண்டனே - என்றவன் - நேசன் - பிரான் - என
முடிக்க. பெயர்ப் பயனிலைகள் கொண்டு முடிந்தது.
இதனால் நகரும், நகரச் சிறப்பும், நாயனாரது பேரும்,
அவர் செய்த
திருத்தொண்டின் திண்மையும், வரலாறும், பண்பும் உரைத்தது காண்க.
விரிபொழில்சூழ் என்ற முதனூல் இங்கு மனைக்கே....பொழில்
எனவும்,
விரிநூல் 491-ல் கூறியபடியும் விரிந்தன. புறகு தட்டென்றவன்
எனும் சரித
வரலாறு 497 498-லும் நேசன் என்றது 494-
499-லும், எனக்கும் பிரான் -
என்றது 500-லும், விரிநூலில் விரிந்தன.
|