| விறன்மிண்ட நாயனார் புராணம் | 619 |
Periya Puranam
என்பன முதலிய எண்ணிறந்த
தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய்
அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன.
இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச்
சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை
விரித்துப் பாராட்டியிருத்தலை இங்குக் காண்க.
இனி, வேதம் முகமனால் பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின்
புகழ்களையும் பேசும். ஆனால் அவை இறைமைக் குணங்கள் முற்றும்
உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால் பொருள் சேராவாம்.
அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில்
சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.
பிரமனை, அயன் - அசன்
- பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற்
பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே
விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா - அவர்
சத்தியம் - அவர் முதலில் இருந்தவர் - அவரே இந்திரன் - என்றெல்லாம்
புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா - அவர் சத்தியம் - அவர்
முதலில் இருந்தவர் - அவரே இந்திரன் - என்றெல்லாம் புகழும். ஆயின்
முடிவில் நாராயண : பரோத்யாதாசுவேதாசுவதரம் அவர் தியானிக்கிறவர்;
சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப்படுபவர். சிவ ஏகோத்யேம்:
(அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள்
சேராவாம். பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்,
திருமாலகத்தான், தொழப்படுந் தேவர் தொழப்படுவானை,
சேர்ந்தறியாக்
கையான், தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே என்பனவாதி
எண்ணிறந்த தமிழ் மறைகளும் இக்கருத்தே பற்றியன. - இவை
திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.
சிவனார்
- ஆர் விகுதி உயர்வு குறித்தது.
செய்ய கழல்
- சேவடி அரவணையான் சிந்தித் தரற்றும்படி
என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க. கழல்
-
உபசாரம். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத்
திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க.
திருவடியே சிவசத்தியாம் - அதுவே தாரகமாவது. செய்ய
- செம்மையுடைய
- வீடுபேறுதரும் - என்ற பொருளில் வந்தது. செய்ய
- சிவந்த எனக்
கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலாற் சிவந்ததாம்.
தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே -
தாயுமானார்; நின்போ லமரர்கள்
நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன (அப்பர்
- திருவிருத்தம்).
அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.
சிறந்து வானோ,ரினந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற வின்மலர்கள்
போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி, நனைந்தனைய திருவடி (திருநல்லூர்த்
திருத்தாண்டகம்).
கழல்பற்றி எப்பற்றினையும்
அற எறிவார் - பற்றத்தக்கது
கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும்
அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம்.
திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும்
திருவருளால் உண்டாகவேண்டும் என்க. முதல்வன் பாதமே பற்றா
நின்றாரைப் பற்றா பாவமே என்ற தேவாரமும் காண்க. எப்பற்றினையும்
-
யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்க ளனைத்தையும்; தேவலோக
நாகலோக பூலோகப் பற்றுக்களையும். போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த
ராதியின்பமும், ஏக நின் கழலிணை யலாதிலேன் (திருச்சதகம் - 72) என்பது
திருவாசகம். உம்மை முற்றும்மை; கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப்
பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால்
வீடும் வேண்டா விறலின்
விளங்கினார், ஈசனோ டாயினு மாசை யறுமின் என்றபடி நிராசையாகிய
தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும். இந்நாயனார் இறைவனிடத்து வீடும்
வேண்டா விறலை உடை
|
|
|
|