| அமர்நீதி நாயனார் புராணம் | 637 |
Periya Puranam
| 505.
|
முக்கணக்கரா
முதல்வனா ரவர்திரு நல்லூர் |
|
| |
மிக்க
சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க வன்பர்க ளமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர்
தூயோர்.
|
4 |
504.
(இ-ள்.) வெளிப்படை.
(அவர்) தமது மனத்தினுள் எஞ்ஞான்றும்
வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்று
மில்லாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய சிவபெருமானுக்கே
உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து
அதற்கேற்பக் கந்தையுங் கீளும் உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால்
வந்த செல்வத்தினது வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று
வருதலாலுளதாகிய உறுதிப் பயனைக் கொள்வாராய், 3
505. (இ-ள்.)
வெளிப்படை. மூன்றுகண்ணுடையராய், நக்கராய் உள்ள
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது திருநல்லூரிலே மிகுந்த சிறப்புவளரும்
திருவிழாவை விருப்பத்துடன் சேவித்து, அடியார்கள் அமுது செய்தற்குத் தக்க
திருமடத்தை அமைத்தார். (அதன்பின்,) கூடிய சுற்றத்தாரும் தாமுமாய்த்,
தூயவராகிய நாயனார் திருநல்லூரினை வந்து அடைந்தனர். 4
504. (வி-ரை.)
இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப்
பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது
- சிந்திப்பது.
கழல் அல்லதொன்றில்லார்
- இரண்டு எதிர்மறைகள் தேற்றப்
பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள் குறித்தன. “அதுவல்ல
தூதியமில்லை யுயிர்க்கு“ (குறள்) என்றாற்போற் கழலினையல்லாது
வேறொன்றினையும் இல்லாதவர். இதன் திறத்தை 544-ம் பாட்டில் விரிவாய்க்
காண்க.
அந்தி வண்ணர் -
அந்தி - மாலை. அது அக்காலத்திற்றோன்றும்
செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர். “செவ்வான வண்ணர்“ -
தேவாரம். தீ என்பது தி எனக் குறுகிநின்ற தென்று கொண்டு அம்
தீ
அழகிய தீ - நிறம் என உரைத்தலுமொன்று. “அழல் வண்ண வண்ணர்“,
எரிபோன் மேனிப் பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர்
திறம்“ முதலிய
திருவாக்குக்கள் காண்க.
கந்தை
- பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக வைத்து
நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வை வஸ்திரம். கீள்
-
அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பர் காஞ்சிபுரம்
வித்வான் சபாபதி முதலியார். கந்தை -
கிழிந்த ஆடை என்றலுமாம்.
“கந்தை மிகையாங் கருத்தும்“ - திருஞான
- புரா 270, “சாம்பற் பூச்சுங்கீ
ளுடையுங் கொண்ட வுருவம்“ - திருக்கோலக்காத்
தேவாரம் - 1. உடை
- இடையில் உடுக்கும் துகில். ஐகாரம் - செயப்படுபொருளில் வந்த விகுதி;
உடுக்கப்படுவது.
கோவணம்
- அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக் கட்டுவது.
இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும் கொள்ளப்படும். “நால்விரற்
கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“ என்பன தேவாரம். இச்சரிதம்
கோவணத்தினின்று விளைவதாகலின், பலவகை உடைகளிலும், இதனைத்
தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.
கருத்தறிந்து உதவி
- அடியார்கள் வேண்டுதலிலராதலால்,
அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் சரிதங் காண்க.
வந்த செல்வம்
- “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“ என்றபடி பல
நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம் இறைவனைப் பூசித்ததன்
பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம் என்றலுமாம்.
வளத்தினால் -
அவற்றின் வாணிபத்தின் விளையும் வளங்களைக் கொண்டு, ஆல்
-
மூன்றாம் வேற்றுமை உருபு; கருவிப் பொருளில் வந்தது.
|
|
|
|