பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்643

Periya Puranam
முண்டம் நெற்றி என்றலுமாம். “செஞ்செவேயாண்டு கொண்டான்
றிருமுண்டம்“ - திருவாசகம் - அச்சப்பத்து. ஒளித்தழைப்பு - ஒளியின்
மிகுதி. திருநீற்று முண்டம் எல்லா ஆச்சிரமங்களுக்குமுரியதாய் வேதம்
விதித்தது. நூலுடன் விளங்குமான்றோல் - மான்றோலைப் பூணூலுடன்
தரித்தல் பிரமசரியக் கோலத்திற்குரிய அடையாளங்களுள் ஒன்று. பூணூலுடன்
ஓரங்குல நீளம் மான்றோல் தரிப்பது வழக்கு. 152 உரை பார்க்க.

     கையில்
- வலது கையில் அதற்குரிய அனாமிகைவிரலில்,
இச்சிறப்புரிமை நோக்கி இதனைப் பவித்திர விரல் என்பர்.

     கை - அதன்விரல்களுக்காகி, அவற்றில் உரிய ஒரு விரலுக்காயிற்று.

     மரகதக் கதிர்ப் பவித்திரமும் என மாற்றுக. உலராத பச்சைத்
தருப்பையாற் புதிதின் முடிந்து புனைந்ததாதலின் மரகதக் கதிர்போன்ற ஒளி
விடுவது என்றார். பவித்திரத்தின் முடிப்பு மரகத மணியும், அதன்
நீண்டபாகம் பாகம் மணியின் கதிருமா மென்க.

     ஒண்சடை - என்பதும் பாடம். 7

     509. (வி-ரை.) முஞ்சி.....அரையில் - முஞ்சி என்ற தருப்பைப்
புல்லை அரை நாணாகத் திரித்துச் சாத்திய இடையிலே. முஞ்சியரைஞாணும்
பிரமசரியத்துக் குரியது. முஞ்சி - வைதிக வழக்கிற் கொள்ளப் பெற்ற
ஏழுவகைத் தருப்பைகளில் ஒன்று. நூல் பட்டு முதலிய கயிறுகளைப் பிரமசாரி
அரைஞாணாகக்கட்டக்கூடாது என்பது விதி.

     தஞ்சம் ஆம் மறைக் கோவணம் - தம்மையே ஓலமிட்டுத்
தஞ்சமாகி யடைந்த வேதம். “மயக்கறு மறையோ லிட்டு மாலயன் றேட
நின்றான்“ (432). யாவர்க்குந் தஞ்சமாகிய மறை என்றலுமாம். இச் சரித
நிகழ்ச்சிக்குத் தஞ்சமாகியது கோவணம் என்ற குறிப்புமாம்.
மறைக்கோவணம்
- 515 உரை பார்க்க.

     வஞ்ச வல்வினைக் கறுப்பு - வஞ்சனையால் விளைகின்ற வலிய
வினையாகிய கறை. வஞ்சம் - வஞ்சனை. இது ஐம்புலன்களின் சேட்டையால்
விளைவது “புலனைந்தும் வஞ்சனையைச், செய்ய“, (சிவபுராணம்); “மாறி
நின்றெனை மயக்கிடும் வஞ்சப் புலனைந் தின்வழி“ (கோயிற்றிருப்பதிகம்)
முதலிய திருவாசகங்கள் காண்க. “வஞ்ச மாக்கடம் வல்வினையும்“ (305).
திருவடியிலே மனம் வைத்திருத்தலால் வினைக்கறுப்பு அறப்பெற்றவர்கள்.
அறும் மனம் - அறப்பெற்ற மனம்.

     நெஞ்சில் நீங்கிடா அடிமலர் - அவர்களது நெஞ்சிலிருந்து
அகலாது நிலைத்திருக்கின்ற திருவடிக் கமலங்கள். “யானெனதென் றற்ற
விடமே திருவடியா“ என்றபடி தன்னை வணங்கிய இடத்து நிலைபேறுபெற்றது
இறைவன் திருவருள் வியாபகம் என்க. “துஞ்சிடைக் கண்டு கனவின்
றலைத்தொழு தேற்கவன்றான், நெஞ்சிடை நின்றக லான்பல காலமு
நின்றனனே“ (4) “கண்ணுளு நெஞ்சத்தகத்து முளகழற் சேவடியே“ (5) என்ற
இத்தலத் திருவிருத்தங்களுங் காண்க. வல்வினை - வலிமை விலக்கற்கருமை
குறித்தது.

     நிலம் பொலிய - நிலத்தின்மேல் விளங்க. நிலத்தைப் பொலிவிக்க
எனப் பிற வினையாக்கி யுரைப்பினுமாம். பொலிய - வந்து என முடிக்க.

     ஆடையின் அசைவும் - என்பதும் பாடம். 8

     510. (வி-ரை.) கண்டவர்க்கு உறு காதலின் -
பார்த்தவர்களுக்கெல்லாம் உற்ற காதலினாலே. கண்டவர் - மேற்சொல்லிய
திருக்கோலம் முழுதும் கண்ட