பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்645

Periya Puranam
     மனத்தினும் - மனம் மலர்தலைக் காட்டிலும். உம்மை உயர்வு சிறப்பு.
மிக - மலரும் செயலில் மிகும்படியாக. முகம் தன்னை மலரச்செய்த
மனத்தினைவிடத் தான் மிக்கிருக்கவேண்டுமென்று மலர்ந்தது என்க.
“அகத்தின் அழகு முகத்திற் றெரியும்“ என்பது பழமொழி.

     கடிது எதிர் வந்து வணங்கி என்று மாற்றுக. இவை மனமகிழ்ந்து
உபசாரத்தின் குறிகள். மனத்தினும் - வணங்கி என்றனர் - என்றவற்றால்
முறையே மனம்,மெய், மொழியாகிய முக்கரணங்களாலும் இறைவனாகிய
பிரமசாரியை நாயனார் வழிபட்டமை கூறப்பெற்றது காண்க.

     இம்மடத்தினில்.....செய்தது - இம்மடத்தினிற் காணும்படியிலாத நீர்
என்றது இதுவரை உம்மைப்போன்றார் ஒருவரும் இம்மடத்தினில்
வரக்கண்டதில்லை என்றதாம். தேவரீர் எழுந்தருளும் பெருமைக்கு இம்மடம்
தகுதியுள்ளதன்று என்றதுமாம். இதுவரை அடியார்களுட்கலந்து நின்று
வருதலேயன்றி இவ்வாறு வெளியாகக் காணும்படி வரவில்லை என்ற
உண்மையின் குறிப்புமாம். 443 - 444 உரை பார்க்க. அணைய -
அடியார்களுள்ளே கலந்து வந்தது போய்,வெளிப்பட்டு அணைய. அணைய
- அணைவதற்குக் காரணமாக. பயில் தவம் - பயிலத்தக்க - இதற்கென்று
பயிலுமாறு நூல்களில் விதித்த - தவம். செய்த பயில் தவம் என்னோ?
என மாற்றிக் கூட்டுக. 408 காண்க. முன்செய்த நற்றவங் காரணமாகவல்லாது
பெரியவர் வரும் பேறு கிடைக்காதென்ற நியதி குறித்தது.

     மிகமுக - என்பதும் பாடம். 10

     பிரமசாரியின் வடிவாகி - திருமுடிச் சிகையும் - நீற்றுத் தழைப்பும் -
நூலுடன் மான்றோலும் - பவித்திரமும் - கோவண ஆடையின் றசைவும்
(கொண்டு) அடிமலர் - நிலம் பொலிய - வந்து - திருமடங் குறுக. (அவ்)
வடிவு காண்டலும் - மலர்ந்து- எதிர் வந்து வணங்கி - “பயில்தவம் என்னோ
அடியனேன் செய்தது?“ என்றனர் அன்பர் - என இவ்வைந்து
பாட்டுக்களையுந் தொடர்ந்துமுடிக்க.

512. பேணு மன்பரை நோக்கி“நீர் பெருகிய அடியார்க்  
  கூணு மேன்மையி லூட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவண மீதலகேட்
                               டும்மைக்
காண வந்தன“ மென்றனன் கண்ணுதற்
                              கரந்தோன்.
11

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு வழிபடும் அன்பரை நோக்கி, “நீர்,
(அன்பினாற்)பெருகிய அடியவர்களுக்கு மேன்மையில் உணவும் ஊட்டிக்,
கந்தை - கீள் - உடை ஆகிய இவைகளையும், புதிய வெள்ளிய உயர்ந்த
கோவணங்களையும் கொடுத்தல் கேட்டு உம்மைக் காணவந்தோம்“ என்று
நெற்றிக்கண்ணை மறைத்து வந்தஇறைவர் சொன்னார்.

     (வி-ரை.) பேணும் - வழிபடுகின்ற. “பேணியநற் பிறைதவழ்செஞ்
சடையினானை“ - (திருவாவடுதுறை - திருத்தாண்டகம்), “பேணித்
தொழுமவர் பொன்னுலகாள“ - (திருவையாறு - திருவிருத்தம்) என்ற
தேவாரங்கள் காண்க. முன்னர் “அருள்பேணி“ (506) என்றதுங் குறிக்க.

     பெருகிய
- ஒரு அடியாருக்கு இடம், உணவு, உடை முதலிய எல்லாம்
உதவுதல் கேட்டுப் பல அடியார்களும் அணைவார்க ளாயினமையால்
அளவினிற் பெருகிய என்றலுமாம். “ஆளு நாயக ரன்ப ரானவ ரளவி லாருள
மகிழவே“ (444).

     மேன்மையில் ஊட்டி - மேன்மையாக ஊட்டுவித்து.

     மேன்மையில் ஊணும் என்று கூட்டி உணவின் சிறப்புரைத்ததாகக்
கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும், உணவின் சிறப்பும் 442, 443
திருப்பாட்டுக்களிற் பார்க்க. ஊட்டி - ஊண்பித்து. தாய் குழந்தையை
ஊட்டுவதுபோலக்.