பக்கம் எண் :


646 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
காலம் -அளவு - தகைமை - விருப்பு - முதலியன அறிந்து அன்போடு
உண்ணச் செய்து என்பதாம். “பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து“
என்ற திருவாசகங் காண்க. உண்பது அடியவர் செயல் என்று காண
இயலாதபடி அவர் உண்பது இவர் ஊட்டுவதாகிய செயலேயாய் நின்றது எனக்
குறிக்கும் பிறவினைக் கூற்றிற் கூறிய சுவை காண்க.

     கந்தை முதலியன 504 பார்க்க. கந்தையாவது கிழிந்த துணிகள் பல
சேர்த்துத் தைத்த பொந்தையேயாயினும் பற்றற்ற அடியார்கள் இதனையே
வேண்டுவா ராதாலானும், வேண்டுவார் வேண்டியது தருதலே சிறந்த
கொடையாதலானும், அதனையே உதவினர் என்ப.

     யாணர்வெண்கிழிக் கோவணம்
- இச்சரித நிகழ்ச்சிக்குக் கோவணம்
காரணமாதலின் இதனை உடை வகைகளினின்று வேறு பிரித்து, யாணர் -
வெண் - கிழி
- என மூன்று அடைமொழிகள் தந்து சிறப்பித்துக் கூறினார்.
யாணர் - புதிய - அழகிய - நல்ல என்றலுமாம். கிழி - கிழி போன்ற. கிழி
- பொன் முடிப்பு. எழுது படம் என்றலுமாம்.

     உம்மைக்
காண - உம்முடைய தொண்டின் விளக்கங் கண்டு
உலகிற்குக் காட்டும்பொருட்டு என்க. “விளக்கங் காண“ - 369 பார்க்க.
ஒன்றை வாங்கவாவது,கொண்டு போகவாவது அன்று; காணமட்டும் என்ற
குறிப்புமாம். “சும்மா உங்களைப் பார்க்க வந்தேன்“ என்னும் உலக வழக்கும்
காண்க.

     காண - கண்ணுதற் கரந்தோன் - காண வந்தவன் கண்ணைத்
திறந்து வராமல் அதனைக் கரந்து வந்தான் என்ற நயமுங் காண்க. அக் கண்
அடியாரிடத்துக் காட்டாது மறைத்தருளுங் கண் என்ற குறிப்புமாம்.

     ஈவது கேட்டு - பேணிய அடியார்க்கு - என்பனவும் பாடங்கள். 11

513. என்று தம்பிரா னருள்செய “வித்திரு மடத்தே  
  நன்று நான்மறை நற்றவ ரமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையி னமைப்பது முளதா
லின்று நீருமிங் கமுதுசெய் தருளு“ மென்
                               றிறைஞ்ச,
12

514. வணங்கு மன்பரை நோக்கியம் மறையவரிசைந்தே  
  “யணங்கு நீர்ப்பொன்னி யாடிநான் வரமழை
                                 வரினு
முணங்கு கோவணம் வைத்துநீர் தாரு“ மென்
                            றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினி லவிழ்த்தது
                            கொடுப்பார்,
13

515. “ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா
                               றுமக்கே
 
  யீங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீரிதனை
வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே
யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்
                       கையிற்கொடுத்தார்.
14

     513. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு தமது பெருமானாகிய இறைவர்
அருளிச்செய்ய, “இந்தத் திருமடத்திலே நன்றாகப் பெரிய நான்மறைத்
தவசீலர்கள் அமுது செய்தருளத் தக்கபடி, நிறைந்த வேதியர்கள் தூயதாக
அமைப்பதும் உண்டு; ஆதலால் இன்று நீரும் இங்கு அமுது செய்தருளல்
வேண்டும்“ என்று சொல்லி நாயனார் அவரை வணங்க, 12

     514. (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வணங்கிய அன்பரைப்
பிரமசாரியாக வந்தஅந்த வேதியர் நோக்கி அவர்
வேண்டுதலுக்கிசைந்தவராய், “அணங்கு நீரையுடைய காவிரியில் நீராடி நான்
வரும்போது மழைவர நேர்ந்தாலும், (அப்போதுஉதவ) உலர்ந்த
இக்கோவணத்தை உம்மிடத்தில் வைத்து நீர் தருவீராக!