பக்கம் எண் :


672 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     537. (வி-ரை.) ஆன தன்மை - ஆள - ஆயின - இடஇட அத்தட்டு
எழுந்தே நிற்பதாயின; தன்மை - கோவணத்தின் றன்மை. துகில் முதலியன
இட்டு ஆயின - முடிந்த தன்மை - நிலை - என்றலுமாம்.

     அஞ்சி - தாம் மறையவர்பாற் பட்ட பிழை மாற்றப்படாமலே நின்று
விடுமோ என்று அஞ்சி. அந்தணர் - நாயனார்பால் வெளிப்படச்
செந்தண்மை செய்யும் எல்லை அணுகியதாதலின் அந்தணர் என்றார்.

     தூநறும் துகில் - மென்றுகில் - “பூந்துகில்“ - (535), என்றதற்கேற்ப
இங்குத் தூ - நறும் என்று சிறப்பித்தார். தூய்மை - கலப்பில்லாமை; நறுமை
- மெல்லிய பரிசு முடைமை. துகில் வருக்கம் - துகிலின் பல வகைகள்.
நூல்வருக்கம் - இவற்றால் துகில்கள் உண்டாகக் காரணமாகும்
தொடர்புபற்றி இவற்றையும் இட்டார். நூல்களும் மென்மை நிறம் முதலிய
பாகுபாடுகளாற் பலவகையாவன. ஆதலின் நூல்வருக்கம் என்றார். மென்றுகில்
பட்டுடன் இடஇட உயரவே துகிற்பொதிகளையிட்டார் என்றபின், “துகில்
அனேக கோடிகளிடும்“ என்றதனால் அந்த வருக்கமாக அங்குள்ளன
யாவையும் இட்டாயினதைக் கூறிவிட்டார். ஆதலின் குவிக்கவும் தட்டின்
மட்டிதுவால்
- என முற்றும்மை தந்து முடித்துக் கூறியபடியாம்.

     ஏனை என் தனம் - முன் இட்டனவும் தனமேயாம்; ஆயின் (அவை)
தனத்தினைக் கொண்டு பெற்றனவும் பொன் முதலியவற்றின் பயனுமாம்.
இத்தனங்களோ எனின் இவை கோவணமாகா; துகில் முதலியனபோல
அக்கோவணத்திற்கு இனமுமாகா; ஏனைப் போகங்களுக்கு ஒருவகையாற்
காரணமாயிருத்தலன்றி வேறு பயன் பெறா. இவற்றை முன்னரே வேதியர்
“மணியும் பொன்னும் என் செய்ய“ (530) என்றொதுக்கினர்; ஆதலின்
இவற்றை ஏனை என் தனம் என்ற இலேசினாற் கூறினார்.

     இடப்பெற வேண்டும் - நேர்பெற இடுதற்கு இசையப் பெறுதல்
வேண்டும்.

     இறைஞ்ச - இதற்கிசைவது மறையோர் தம்பாற் செய்யுங்
கருணையாமாதலின், அது பெறுதற்கு இறைஞ்சினார். 36

     538. (வி-ரை.) மங்கைபாகராம் மறையவர் - இதுவரை சடையையும்
பிறையையும் மறைத்த பிரமசாரியாகிய மறையவர் என்று குறித்த ஆசிரியர்
இங்கு மங்கை பாகராம் என்றார். பிரமசாரியாகியவர் தாம் மறைத்த மங்கை
பாகத்தை இனி விரைவில் மேற்கொண்டு இல்வாழ்வாராகிய நிலையில்
வெளிப்படுகின்றார் என்பதும். தனங்களை இடப்பெற இசைந்ததனால்
இவர்பாற் கருணை வெளிப்படும் காலம் விரைவில் அணுகியதென்பதும்,
மங்கைபாகமே அருட்சத்தி பதிந்தநிலை என்பதும் குறிப்பாம். மற்றதற்கு -
மற்று
- இனமல்லாத தனங்களை இடப்பெறுதற்கு என்ற பொருளில்
வினைமாற்றுக் குறித்தது. அதற்கும் எச்சவும்மை தொக்கதெனக் கொண்டு
முன் இசைந்த பலவற்றின் மேலும் என்றலுமாம்.

     நாம் - எங்கள் - முன்னர் நான் (514 - 515 - 520 - 526) என்றவர்
இப்போது அருட்சத்தியும் தாமுங் கூடிய நிலையின் அணிமை குறிக்கப்
பன்மையாற் கூறியவாறு. இவ்வாறே வந்தனம் - 512, நாம் - 532 - என்பன
திரோதான சத்தியும் தாமுமாகிய பன்மையில் வந்ததும் காண்க. இவ்வாறே
உங்கள்தனம் என்ற பன்மை நாயனார் - மனைவியார் - புதல்வர் என
இவர்கள் மூவரும் அணிமையில் அருள்பெறும் நிலையினைக்
குறிப்பாலுணர்த்துவதும் காணப்பெறும். எங்கள் கோவணம் - எங்கள்
என்றபன்மை என் போன்ற பிரமசாரிகளுக்குரியது என்றது வெளிப்பட்ட
பொருளாம்.

     சொல்லுவ தென்கொல் - “உமக்கு ஈங்கு நான்
சொல்லவேண்டுவதில்லை“ - 515 என்று முன்னமே கூறினேன்; இப்போது
நான் சொல்லாமல் நீரே அறிந்து