பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்677

Periya Puranam

தலையின்மேற் கொள்ளப்படும்; திருவடி தோன்றவே தான் அடிமை என்பதும்
தோன்றிற்று. ஆதலின் இங்குத் தலைவ என்றார்.

     யானும் - “எனது“ என்ற தொழிந்தேனாக, “யான்“ என்றது எஞ்சியது;
அதனையும் என்க. அவ்வாறு எஞ்சியதாகிய - எச்சமாகிய - என உம்மை
எச்சவும்மை.

     என்மனைவியும் - சிறுவனும் - மனைவி முன்னரும் அவர் மூலம்
சிறுவனும் வருதலின் அம்முறை வைத்தார். மனைவி தமது உயிர்ச்
சார்பாதலின் என் மனைவி என்று குறித்த ஆசிரியர் சிறுவன் - இருவர்
சார்புமாதலின் வாளா கூறினார். சிறிய மகார்க்குத் தாயின் சார்பு மிகுதலின்
முன்னர் வைக்காது மனைவியாரின் பின்னர் அவரைச் சாரவைத்தனர்.

     தகும் மேல் - தகுவதாயின் - தகுமென்று நீர் எண்ணினால்.
கோவணத்திற்கு நேர்பெறத் தம்மைக் கொடுக்கத் தமக்குத் தகுதியில்லை
என்று எண்ணிய நாயனார் மறையவர் தக்கதென்று இசைந்தால் ஏற
நிற்பதாகக் குறிப்பிட்டார். கோவணத்தின் பெருமையும் தமது சிறுமையும்
குறிக்கொண்டு சொன்னபடி. இதனானே முன்னர் நோக்கிய என்றார்.

     தகுமேற்றுலையில் - என்று கூட்டி யுரைத்தலுமாம். இதுவரை
அத்தகுதி பெறாது இனி நேர் நிற்கும் தகுதி பெறுவதாகிய மேற்றுலை என்ற
குறிப்பும் பெற இருபொருள் குறித்து வழங்கிய சொற்சுவை காண்க.

     ஏறிடப் பெறுவது உன் அருள் - இட ஏறப்பெறுவது என மாற்றுக.
இட - “இட்டார்“ - 533. “இடஇட“ 534, “இடஇட“ 535, “இடுந்தட்டு“ - 536,
“இடப்பெற“ 537, “இடஇட“ 539 என்றவை போலத் தங்களையும் கோவண
நேர் பெறும் பொருட்டுத் தட்டிலே இடும் - பொருளாக வைக்கத் துணிந்தார்.
ஆதலின் இட - என்றார். இடும் பொருட்டு நாங்கள் ஏற நீர் கோவணநேராக
எங்களை ஏற்றுப்பெற்றுக்கொள்வது என்பதாம். உமது அருள் இருப்பதாக!
என்பது தொக்கி நின்றது.

     சிறுவனும் - நாயனார்க்கு அக்காலத்து ஒரு சிறு மைந்தர் இருந்தனர்.
அவரும் துலைத்தட்டிலே இவருடன் ஒக்க ஏறி அழிவில் வான்பதம்
பெற்றனர் (548) என்று ஆசிரியர் கூறியவாறாம். சிறுத்தொண்ட நாயனார்
சரிதமும் இங்கு நினைவு கூர்க. மைந்தர் இருந்தமை முதனூல் வகைநூல்களிற்
பெறாதிருப்ப ஆசிரியர் கூறுவதென்னை? யெனின்,

“நாட்கொண்ட தாமரைப் பூந்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட கண்ணி மனைவி யொடங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோ? விவ் வகலிடமே“

என்ற அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்தான் அறியக்கிடக்கின்றபடி இச்சரிதம்
பண்டைக்காலம்தொட்டு வழங்கிய வழக்கினானும் திருவருளானும்
கண்டுரைத்தனர் ஆசிரியர் என்க. 40

542. பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்  
  றச்ச முன்புற வுரைத்தலு, மங்கண ரருளா
னிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ்
                                 சலத்தா
லிச்ச ழக்கினின் றேற்றுவா ரேறுதற் கிசைந்தார்.
41

     (இ-ள்.) வெளிப்படை. குற்றமில்லாத அடிமைத் திறத்தினையே புரிந்த
நாயனார் எதிரே நின்று தம்முன்பு அச்சம் உற இவ்வாறு சொல்லலும்,
அங்கணராகிய மறையவர் அருளினாலே அவரது நிலையினை நிச்சயித்து,
துலை என்கின்ற