| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 79 |
Periya Puranam
வளை...பெய்து
- சங்குகள் ஈன்ற முத்துக்களைப் பூத்தேனை நீராக ஊற்றிய
உலையிலே இட்டு; அயல் ஆமை...ஊதும் - பக்கங்களிற்
கிடைக்கும்
ஆமை ஓடுகளாகிய அடுப்பிலே ஏற்றிச் செவ்வாம்பல் மலர்களைத் தீயாக
வைத்து அடுப்பூதுகின்ற செய்கையாகிய; வயன் மாதர்..விளையாட்டு அங்கு
வரம் பெல்லாம் - கடைசியர்களது சிறு பெண்கள் விளையாடும் செயலே
அங்கு வயல் வரம்புகளிலெங்கும் (உண்டு).
(வி-ரை.)
அங்கங்கும் உள்ள சிறுவர் சிறுமியர் ஆங்காங்கே
கிடைக்கும் பொருள்களிலிருந்தே தமது விளையாட்டுப் பண்டங்களைத் தேடி
அமைத்துக் கொள்வது இயல்பு. இவ்வாறே. இங்கும், கடைசியர்கள் களை
களைதல் முதலிய உழவுத் தொழிலும் பிறவும் செய்யும் காலங்களிலெல்லாம்,
அவரது சிறுமியர் வரம்புகளிலே இவ்வாறு விளையாடுவர் என்க. இங்குச்
சொன்ன பொருள்கள் பலவும் வயல் வரம்புகளிலே களையாகக் கழித்து
ஒதுக்கப்பட்டுக் கிடக்குமாதலின் இவற்றையே சிறுமியர் விளையாட்டுப்
பொருள்களாகக்கொண்டனர். ஆமையோடும், ஊன்கழி நந்துஓடும், அயலிலும்
தடாகத்தின் கரையிலும் உள்ளன. முன்(63) தண்தரளம்
சொரிபணிலங்களையும், செங்குவளை கமலம் இவற்றையும் குறித்தமை காண்க.
ஊட்டி வளர்த்தல் பெண்ணின் கடமையாதலின் இவ்வாறு சிறு சோறு
சமைத்தல் சிறு மகளிர்க்கு இயற்கையின் அமையும் விளையாட்டாகும். நந்து
- சங்கு என்றலுமாம்.
இவ்வாறே அவ்வத் திணைகளிலும் கூறிப்போகும் நிகழ்ச்சிகளையும்
மேலே கண்டுகொள்க. திருநாளைப் போவார் நாயனார் புராணம் - கண்ணப்ப
நாயனார் புராணம் - அதிபத்த நாயனார் புராணம் - இவைகளில் முறையே
மருதம் - குறிஞ்சி - நெய்தல் - திணைகளின் நிகழ்ச்சிகளைக் கூறுதல்
காண்க.
பைந்தடம்
- பசிய தடாகம். கருங்குழிசி - ஊன் கழிந்த நத்தை ஒடு
ஆகிய கரிய பானை; நந்து ஓடு நீர்ப்பாசி ஏறிப் பசுமை பொருந்தியதாதலின்
கருங்குழிசி போலும் என்க. குழியாக அமைக்கப் பெறுவது குழிசியாம்.
வியல்வாய்
- அகன்ற வாய். வெள்வளை - (முத்து ஈனும்) வெள்ளிய
சங்குகள். இப்பாட்டினாலே அந்நிலத்துச் சிறு மகளிர் கருப்பொருளும்
கூறியவாறு. 16
67.
|
காடெல்லாங்
கழைக்கரும்பு காவெல்லாங்
குழைக்கரும்பு |
|
| |
மாடெல்லாங்
கருங்குவளை வயலெல்லாம்
நெருங்குவளை
கோடெல்லா மடவன்னங் குளமெல்லாங் கடலன்ன
நாடெல்லா நீர்நாடு தனையொவ்வா நலமெல்லாம். |
17 |
(இ-ள்.)
காடு எல்லாம் கழை கரும்பு - கழையாகிய கரும்பு எல்லாக்
காடுகளிலுமுள்ளன; கா எல்லாம் குழைக்கு அரும்பு - சோலைகளில் எங்கும்
சிறுகிளை சிறுதளிர்தோறும் மலர் அரும்புகள் தோன்றும்; மாடு எல்லாம்
கருங்குவளை - பக்கங்களில் எங்கும் கரிய குவளை
மலர்கள் அலரும்; வயல்
எல்லாம் நெருங்கு வளை - வயல்களில் எங்கும் நெருங்கிய சங்குகள்
கிடக்கும்; கோடு எல்லாம் மட அன்னம் - (வாவிக்) கரை எங்கும்
இளமையுடைய அன்னங்கள் உண்டு; குளம் எல்லாம் கடல் அன்ன -
குளங்கள் எல்லாம் கடல்போன்ற பரப்பையுடையன; (ஆதலின்) நாடு
எல்லாம்...ஒவ்வா நலமெல்லாம் - எந்த நாடும் எந்த நலத்தாலும்
சோழநாட்டிற்கு ஒப்பாகாது. வாவி - ஆதலின் என்பனவும், வினைச்
சொற்களும் வருவித்துரைக்கப்பட்டன.
(வி-ரை.)
காடு எல்லாம் கழை கரும்பு - காடுகளில் எங்கும்
கரும்பு விளைந்துள்ளன. மனிதர் நீர்மிக்க வயல்களில் விளைப்பன அன்றி நீர்
பாயாது மழைப்
|
|
|
|