பக்கம் எண் :


80 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
பெயலால் விளையும் தாவரக் கூட்டமே காடு எனப் பெறுவன, இதனையே
ஆங்கிலத்திலும் Wild growth - Wild cane - Wild paddy - காட்டு நெல்
- முதலான பெயர்களாற் கூறுவர். இங்ஙனமின்றி வயல்களையே வளத்தின்
மிகுதியாற் காடு என்றார் என்றலுமாம். “வயற்காடு” என்ற வழக்கும் காண்க.

     ஆனால் இங்கே, கரும்பு, மனிதர் விளைவிக்க விளையினும், வளத்தின்
மிகுதியால் காட்டுப் பயிர்போன்றன என்றலும் ஆம். காடு எல்லாம் -
ஒழுங்கின்றிக் காடுபோலத் தூரத்தே காணப்படுவன எல்லாம். “செந்தாமரைக்
காடனைய மேனி” என்ற திருவாசகமும். “காய்ந்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாடு” என்ற திருநீலநக்கநாயனார் புராணமும்காண்க. “கடிகமழ்
கமலக் காடு பூத்தது” என்ற கம்பன் பாட்டும் நோக்குக.

     கழை - கரும்புத் தண்டு. கழை - மூங்கில் எனக் கொண்டு
மூங்கில்போற் பருத்து உயர்ந்த கரும்பு என்பதுமாம். மேலே “கமுகல்ல
கரும்பென்ன” என்று கூறியதும் காண்க. கரும்பின் (நாணற் கரும்பு) ஒருவகை
என்பதுமாம்.

     குழை - சிறு கிளை - சிறு இலை (தளிர்). கிளைதோறும்
தளிர்தோறும் அரும்பு வைத்தல் செழுமையின் அறிகுறி என்க.

     மாடு - பக்கம். வயற் பக்கங்கள். வயல் நடுநிலைத் தீவகமாய்க்
கொண்டு வயல் மாடு எல்லாம் என்க. கருங் குவளை - நீலோற்பலம்.

     வயலெல்லாம் நெருங்கு வளை - நெருங்கு வயல் என மாற்றி
யுரைத்தலுமாம். நெருங்கும் (செறியும்) பயிருடைய வயல் என்க. வளை -
சங்குகள். முன் (63) “தண்டரளம் சொரி பணிலம் இடறி” என்றும்,
“வெள்வளைத் தரளம்” என்றும், கூறினமையும் காண்க.

     கோடு - வாவிக் கரை. வாவிகள், தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நீர்ப்
பறவைகளுக்கிடமாகி, மாக்களும் மக்களும் அருந்துதற்கும் ஆடுதற்குமிடமாய்
உள்ள சிறிய நீர்நிலைகள். சிறுபான்மை பயிருக்கும் உதவும். குளம் -
நீர்ப்பாய்ச்சற் கேதுவாய பெரு நீர்நிலைகள்.

     கடல் அன்ன - நீர் நிறைந்த பரப்பினாலும் உதவியினாலும் குளங்கள்
கடல் போன்றன என்க. கடல், மழையை உதவிப் பயிர் வளர்க்கின்றது
போலக் குளங்களும் பயிர் வளர்க்கின்றன.

“பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் பயிர்வளர்க்கும்
                                        துளியவன்
காண் துளியில் நின்ற, நீரவன்காண்..”

                      (திருத்தாண்டகம் - சிவபுரம் - 6)

     “....ஏரிநிறைந்தனைய செல்வன் கண்டாய்..” என்பன அப்பர் சுவாமிகள்
திருவாக்கு.

     வெளித் தூரத்தே நின்று கரும்பு என்று நினைத்தவன், பக்கத்தே வந்து
கரும்பு அல்ல நெல் என்று உணர்ந்தது முதலிய காட்சியும் உணர்ச்சியும்
முன் 65-வது பாட்டிற் கண்டோம். இனி அவ்வாறு வெளியே யிருந்து கண்டு,
வயலுள் வந்த ஒருவன், இங்கிருந்து வெளியே தூரத்தே பார்க்கும்போது,
காடெனக் கண்டது, பின்னர்ச் சென்று காடன்றிக் கரும்பாகக் கண்டான்;
பின்னரும் அணித்தாகச் சென்று சோலையின் அரும்பும் செழுமை கண்டான்;
வயலினின்று வெளிச் செல்லும் வரம்பு வழியில் குவளையும் சங்கும் கண்டான்;
வெளிப்போந்த அணிமையில் வாவியும் கரையில் அன்னமும் கண்டான்;
பின்னரும் வெளிப்போகக் கடல் போன்ற குளங்கண்டான்; அதன் அப்புறம்
பிறநாடு கண்டு அவை எவையும் இந்நாட்டுக்கு ஒவ்வா என்று தெளிந்து
கொண்டான்; எனத் தொடர்பாய் ஒருகதைபோல வரும் உருசியான இயற்கை
வருணனையின் அழகு காண்க.

     நாடு எல்லாம் - நலம் எல்லாம் - எந்த நாடும் எந்த நலத்தாலும்
என்க. மேல் மூன்றடிகளிற் குறித்த காரணங்களாற் எந்நாடும் எந்நலத்தினும்
நீர்நாட்டினை ஒவ்வாது என்பது. இங்கு எல்லாம் என்பதற்கு மேல்
மூன்றடிகளிற் கொண்டது