| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 81 |
Periya Puranam
போலல்லாமல் ஒரு
நாடும் ஒரு நலமும் என்று பொருள் கொள்ளப்பெற்றது.
அவ்வாறன்றி ஏனையவற்றைப்போலவே கொண்டால், சில நாடு சில
நலங்களால் ஒவ்வுமென்று தருக்க முறையிற் பொருள் பெற்று இழுக்காகுமாறு
உணர்க.
நீர்நாடு
- சோழநாடு (காவிரி நீர் பொய்க்காது பெருகிப் பாய்தலால்).
நாட்டின் அணியை ஏற்றவாறு இப்பாட்டிலே சொல்லணியாலும் நாட்டியவாறு
காண்க. "நாடென்ப நாடா வளத்தன" என்ற குறட்கருத்தை இங்கு பொருத்திக்
காண்க. 17
| 68.
|
ஆலை
பாய்பவ ரார்ப்புறு மோலமுஞ் |
|
| |
சோலை
வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞால மோங்கிய நான்மறை யோதையும்
வேலை யோசையின் மிக்கு விரவுமால். |
18 |
(இ-ள்.)
ஆலை...ஓலமும் - ஆலை பாய்ச்சுவர் கூவும் சத்தமும்;
சோலை...சும்மையும் - சோலைகளிலே வண்டுகள் பல சேர்ந்து செய்யும்
சத்தமும்; ஞாலம்... ஓதையும் - உலகத்தை ஒங்கச் செய்யும் வேதச் சத்தமும்;
வேலை...விரவு மால் - கடற் சத்தத்தினும் பெரிது முழங்கிக் கலந்தன.
ஓலமும் - சும்மையும் - ஓதையும் - ஓசையின் மிக்கு
விரவும் என்க.
(வி-ரை.)
பாய்பவர் - பாய்ச்சுபவர், பிறவினை தன்வினையாக
வந்தது.
ஆலை பாய்பவர் - அலையிற் பாய்ச்சுபவர்.
அஃதாவது, ஆலையிற்
கரும்பினையும், பிழிந்த சாற்றைக் காய்ச்சு கலன்களிலும், காய்ச்சிய
சாற்றினைத் தட்டுகளிலும், கட்டிகளைக் கொள் கலன்களிலும் பாய்ச்சுபவர்;
செல்ல வைப்பவர்கள். ஆர்ப்புறும் - ஆரவாரம்
செய்யும்.
ஓலம் - சும்மை -
ஓதை - ஓசை - சத்தத்தின் பற்பல பெயர்கள்,
பல்வேறு வகைச் சத்தங்களைப் பல்வேறு பெயர்களாற் குறித்தனர். பின்னரும்
இவ்வாறே காண்க. இஃது ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளின் கவித் தனி
மான்புகளில் ஒன்று. கண்ணப்பர் புராணம் - 34; திருக்குறிப்பு - புராணம்
- 98 முதலியவை காண்க.
சோலைவாய்
- சோலையினிடத்து. வாய் ஏழாம் வேற்றுமையுருபு.
சோலை (யிலே) வண்டு வாயினால் இரைத்தும் எழுந்தும் உண்டாக்கும்
சும்மை எனினும் ஆம். வண்டு ஊதுதலினாலும் பறத்தலினாலும் சத்தம்
உளதாம்; ஆதலின் இரைத்து எழும் - உம்மைத் தொகையாக்கி இரைத்தும்
- எழுந்தும் என்க.
ஞாலம் ஓங்கிய நான்மறை
- உலகத்தை மேன்மை பெறச்செய்யும்
வேதங்கள். ஓங்கிய - ஓங்கச் செய்த எனப் பிறவினைப் பொருளில் வந்தது.
மேலே [திருமலைச் சிறப்பு - 4] “மேன்மை நான்மறை நாதமும்” என்ற
இடத்துக் காண்க. உலகத்தார் ஒதி யுணர்ந் தொழுகி யுய்யும் பொருட்டு
இறைவர் வேதங்களை அருளிச்செய்தனர் என்ற உண்மை உணர்த்தப்பட்டது
காண்க. வேதம் பயிலிடங்களும் வேள்விச் சாலைகளும் அமையும் இடமும்
குறித்தபடி.
வேலை ஓசையின் மிக்கு
விரவும் - மருதநில ஒழுக்கம் நெய்தல்
நிலத்து எல்லை வரை பரவுகின்றது. எனவே, மருதத் தொழிலாகிய கரும்பு
அடுகின்ற துழனியும், மருதச்சோலைகளின் ஓசையும், மருதநிலத்து ஊர்களை
அடுத்து வெளிப்புறத்து அமைந்த வேதம்பயி லிடங்களினின்று போந்த
மறையோசையும் பயின்று விரவின. இம்மூன்றும் ஒன்று சேரவே, பக்கத்திருந்த
கடல் ஓசையினும் (நெய்தல்) மிகுந்திருந்தது என நயம் பெறக் கூறினவாறு.
விரவும்
- சும்மை ஒசை பொருளற்ற சத்தங்கள்; ஓலம்
- ஓதை
பொருள் உள்ள சத்தங்கள். இரண்டு (தனித்தனி பொருள்உள்ளன ஆயினும்)
சேர்ந்தபோது அத்தன்மைபோய்ச் சந்தை இரைச்சல்போல் ஒரேசத்தமாகக்
கேட்பனவாயின
|
|
|
|