பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு85

Periya Puranam
     தந்நிகரின்றி மிகுதல் - சாலி - ஒப்பற்றுத் தூறுபடர்ந்து எழுதல்.
அன்பர் சிந்தை - ஒப்புயர்வற்ற மேன்மை செறிதல்; அன்பினால்
“மெய்தழைத்து விதிர்ப்புறு சிந்தையார்” முதலியன காண்க.

     வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தன ஆதல் - சாலி
= வாலிது, தூய்மை, வெண்மை - வெள்ளிய நிறம்; உண்மை -
உட்பதடியில்லாமை; கரு - நெல் ஊறுகின்ற பால். அன்பர் சிந்தை = வாலிது
- கலப்பில்லாமை; வெண்மை - புகழ்; உண்மை - மெய்யுடைமை; கரு -
உண்மையிலே விளையும் வளம்.

     “வாலிதாம் நிலைமை காட்ட”, “மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
சிந்தை” என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     “அன்பர்க்குச் சொல்லுங்கால்: நிகரற்ற சுத்தமாகிய வெள்ளிய உண்மை
ஞானத்திற்கேதுவாயுள்ள சிவத்தைப் பெற்றமையால் வந்த வளமுடையதாகிச்
சத்தி பதிதலைப் பெற்றுச் சிவோகம்பாவனையினாலே குவிதலின்றி விரிந்த
அன்பர்களது மனதைப் போல. (சூன்முதிர் பயலை கொண்டு -
சர்வான்மாக்களையும் பெறுங் கருப்பங் கொண்ட பசிய நிறத்தையுடைய சத்தி
பதிதலைப் பெற்று)”, இது, தில்லை - நடராச ஓதுவார் அவர்கள் பாடங்
கேட்ட குறிப்பிற் கண்டது.

     வெண்மை யுண்மைக் கரு என்புழி வெண்மை என்றதே
அந்நிறத்தையுடைய பாலுக் காயிற்று என்றும், பாலையுடைய கரு - என்றும்;
வாலிதாம் வெண்மை - மாசகன்ற சாத்துவிக குணம் என்றும் கூறுவதும்
உண்டு.

     சூல்முதிர் பயலை கொள்ளுதல் - சாலி - கரு - முதிர்ந்து
பசுமையுடைத்தாதல். அன்பர் சிந்தை - அன்பு முதிரமுதிரச் சிவபெருமான்
திறத்திலே ஈடுபட்டுத் திருமேனி நிறம் வேறுபடுதல். “பயலை
மெய்ப்போர்ப்ப”, “மெய்ப்பயலை...விளம்பாயே” முதலியவை காண்க.

     சுருள் விரிதல் சாலி - கருவிற்றங்கிச் சுருண்டு பிணைந்திருந்தவை
அதினின்றும் வெளிப்பட்டு விரிதல். சிந்தை - தொக்கிருந்த அறிவு வளர்ந்து
விரிந்து வெளிப்படுதல். ”மனமுகிழ்த்த சுருணீக்கி மலர்விக்கும் கலைபயிலத்
தொடங்கு வித்தார்” (திருநா - புராணம்); “முகைத்த மலரின் வாசம் போல்
சிந்தைமலர உடன்மலரும் செவ்வி யுணர்வு...” (சண்டேசுர நாயனார் புராணம்)
முதலியவை காண்க.

     நீள் வயல்
- சாலி நீளுதற்கிடமாகிய வயல்.

     ஆலின அன்பர் சிந்தை - ஆலுதல் - விரிதல்; ஆலின - நீர்மை
பொருந்திய - என்றலுமாம். இவ்விரண்டு பொருளும் சாலிக்கும் பொருந்துவன.

     கருவினால் - என்றும் பாடம்.                          21

72. பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா மன்பர்  
  தத்தமிற் கூடி னார்கள் தலையினால் வணங்கு
                                மாபோன்
மொய்த்துநீள் பத்தி யின்பான் முதிர்தலை
                          வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி
                               யெல்லாம்.
22

     (இ-ள்.) பத்தியின்...போல் - அன்பின் வசப்பட்டவர்களாகி
இறைவனுக்கு ஆட் செய்யும் அன்பர்கள் கூடியபோது ஒருவருக்கொருவர்
தலை வணங்கி இறைஞ்சுவதுபோல; மொய்த்துநீள்...வணங்கி - செறிந்து நீண்ட
எதிர் எதிராகக் கூடிய வரிசைகளிலே கதிர்களிற் பால் ஊறி முதிர்ந்த
வகையினால் தலை வணங்கியவைகளாய்; மற்றை...எல்லாம் - அந்த
அன்பர்களுக்குச் சிவபோகம் விளைவது போல நெல் முதிர்ந்து போகம்
விளைந்தது.

     (வி-ரை.) மொய்த்து - கதிர்களில் இடமின்றி மணிகள் செறிந்து
நிறைந்து இருத்தல். நீள் - அவ்வாறு மணி நிறைந்ததே யன்றிக் கதிர்கள்
நீண்டு மிருத்தல்; பத்தி - வரிசை - மொய்த்தும் நீண்டும் உள்ள கதிர்கள்
வரிசையாகிப் பலவா