பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு87

Periya Puranam
அமைதியின் அழகும் கண்டு களிகூரத்தக்கது. சிறு நாற்றுக்கேற்றச் சிறு
நாற்சீர்ச் செய்யுளமைதியும் காண்க. 22

73. அரிதரு செந்நெற் சூட்டி னடுக்கிய வடுக்கல்
                               சேர்ப்பார்;
 
  பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று
                               செய்வார்;
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும்
                       பொருப்பு யர்ப்பார்;
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு
                               வைப்பார்.
23

     (இ-ள்.) அரிதரு.....சேர்ப்பார் - அரிகளாற் றரப்பெற்ற செந்நெல்லினது
சூடு அடுக்கிய பெரும்போர் சேர்ப்பார்கள்; பரிவுற.....செய்வார் - பரிவுபடப்
பிடித்த பல வகை மீன்களையும் நீண்ட குன்றுபோலக் கூட்டுவர்;
சுரிவளை......உயர்ப்பார் - புரியாகச் சுரிந்த சங்குகள் ஈன்ற முத்துக்களையும்
ஒளிவீசும் குன்றம் போல உயர்த்துக் கூட்டுவார்கள்; விரிமலர்...வைப்பார் -
விரிந்த மலர்த் தொகுதிகளைத் தேன்வடியச் சேர்த்தி ஒரு புறம்
இட்டுவைப்பார்.

     (வி-ரை.) அரி - சூடு - நெல் விளைந்த பின்னர்ச் செய்யப்படுந்
தொழில்கள் அரிதல், சூடு அடுக்குதல் முதலியன. இவை, - நெற்குவை
சேர்த்தல் புற்போர் சேர்த்தல் வரை - இது முதல் மூன்று பாட்டாலும்
கூறப்பெற்றன. பெரும் பான்மை பற்றி நாற்றுநடுதல் முதல் குவை
சேர்த்தல்வரை நெல்லையே விரித்துச் சொன்னார். பிற, கரும்பு - வாழை -
முதலியவையும் இவ்வாறே அவ்வவற்றிற்குப் பொருந்துமாறு அமைத்துக்
கொள்க. “சோழ வளநாடு சோறுடைத்து” எனச்சோற்றுச் சிறப்பே மிகுதியாம்.
அதுவே மக்கட்கு இன்றியமையாதது. அதற்குப் பெரும்பான்மையும் நெல்லே
வேண்டப்படுவதாம். ஆதலின் இதன் சிறப்பு இப்பகுதியில் விதந்தோதப்
பெற்றதென்க. ஆயினும் சோற்றுக்கு வேண்டிய இனிப்புத் தரும் கரும்பு
முதலியவும், கனிகளும், பூவும், பிறவும் உடன்சேர்த்துக் கூறுதலும் காண்க.

     அரி - நெற்கற்றை; அரி - அரியப்பட்டது. செயப்படு
பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. இது உழவர் இந்நாளிலும்
வழங்கும் உயர்ந்த தனித் தமிழ்ச் சொற்களில் ஒன்று, நெல் முதல்களைக்
கையாற் சேர்த்து அரிதலால் பெறும் கற்றையை, அரி என்பர்.

     சூட்டின் அடுக்கல் - பன்மீன் குன்று - முத்தின் பொருப்பு
- மலர்க் கற்றை வெற்பு
- இவை பலவகைப் பொருள்களையும் பெரு
வளம்பெறச் சேர்த்துக் குவிக்கும் மிகுதிப்பாட்டைக் குறிக்கும். அடுக்கல்
- குன்று - பொருப்பு - வெற்பு - இவை யாவும் மலையின் பல பெயர்கள்.
அளவின் மிகுதியைக் காட்டுதற்கு உவமமாகக் கூறுவது மலையேயாம்.
ஆயினும் இங்குக் குறித்த வெவ்வேறு பொருள்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு
பெயர்களாற் கூறினமை கூர்ந்து நோக்குக.

     அடுக்கல் - மேன்மேல் அடுக்குதலால் உயர்ந்த தென்னும் நயமும்,
மற்றவற்றை விட அளவிற் பெருமையும் தோன்றச் சூட்டின் அடுக்கல்
என்றார். அடுக்கல் - போர்மலை. அடுக்கல் போன்றதை அடுக்கல் என்ற
தாகுபெயர்.

     சூட்டின் அடுக்கல் = சூடு - உழவு தொழிற் பொருள்களின் வழக்கப்
பெயர்களில் ஒன்று. அரிகளைப் பெருங்கற்றைகளாகச் சேர்த்துக் கூட்டித்
தட்டிய போது முதிர்ந்த பெருமணி நெற்கள் பெரும்பாலும் உதிர்ந்துவிடும்.
இதற்குத்தலை உதிரி நெல் என்றுபெயர். உதிராது சிலமணிகள் பசுமை
முதலிய காரணங்களால் பின்னும் கதிர்களில் ஒட்டி எஞ்சி நிற்கும். ஆதலின்
இவ்வாறு உதிர்த்த கற்றைகளைப் போர் செய்து குவிப்பர். இதற்குச் சூடு
அடுக்குதல் என்பது வழக்கப்பெயராம். இவற்றைச் சிலநாட்கழித்து மேதிகளால்
மிதிக்கச்செய்து எஞ்சிய நெல்மணிகளை உதிர்த்துச்சேர்ப்பர். இந்நெல்லுக்குச்
சூட்டடி நெல் - சூட்டு நெல் என்று பெயர். இவை நிறம் - குணம் - உரு -
முதலியவற்றால் தலைப்பில் உதிர்ந்த