பக்கம் எண் :


92 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     மிகுதி கொண்டு - அரசிறைக் கடன்கள் செலுத்தியபின் எஞ்சிய
விளை பொருட்பகுதி, மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன்
காவலின்றித் தங்கா ஆதலினாலும், அரசன் காவலே குடிகட்கு ஐவகைப்
பயமும் தீர்த்து அறங்காத்தலுக்குக் காரணமாதலாலும், அதனையன்றி
இவ்விளைவு உண்டாமாறு இல்லையாதலாலும், அரசிறை செலுத்தலே
குடிகளின் முதற்கடமை என்றும், அது செலுத்திய மிகுதியே பிற எல்லா
வற்றிற்கும் உதவல்வேண்டும் என்றும் கூறுவார், அதனை முதலில் வைத்தது
மன்றி மிகுதிகொண்டு என்றும் வற்புறுத்திக் கூறினார். முன்னைய தமிழ்
ஆசிரியர்களுக்கும் இதுவே கருத்தாகுமாறும் காண்க. வரிகொடா இயக்கம்,
சட்டமறுப்பு முதலிய பின்னாள் நிகழ்ச்சிகளை இதனோடு ஒப்பிட்டு உயர்வு
தாழ்வு கண்டுகொள்க.

     கடன்கள் - இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது. பின்வரும்
பிறவும் இவ்வாறே காண்க.

     கடவுள்
- நாயனார். தெய்வம் என்றதும் இது. தெய்வத்தை ஓம்பும்
முறை நூல்களில் விதிப்படி போற்றுதலேயாம். ஆதலின் போற்றி என்றார்.

     குரவர் - தாய் தந்தை முதலிய முன்னோரும், அவர்க்குப் “பிரதிநிதி”
களாகிய தென்புலத்தாரும் ஆம். தென்புலத்தாரைப், “படைப்புக் காலத்தில்
அயனார் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி” என்பர் பரிமேலழகியார்.

     குரவரும் - விருந்தும் - கிளையும் - தன்னொடு சேர்ந்து தொடர்பு
பற்றி வருதலின் இம்மூவகையையும் [தென்புலத்தார் - விருந்து - ஒக்கல் -
(குறள்)] ஒன்று சேர்த்துத் தாங்கி என்று ஒரே வினையெச்சத்தாற் கூறினார்.

     அறஞ் செய்தற்கும் இக் குறித்த ஏனைய வினைகளைச் செய்தற்கும்
தான் உளனாக வேண்டுவது இன்றியமையாதாகலின் தன்னைப் பேணுதல்
அறச் செய்கையின் பாற்படும். அன்றியும் விருந்தோம்பலும் சுற்றந்தழுவலும்
கூறவே தன்னை ஓம்புதலும் சார்புபற்றிக் கொள்ளநிற்கும். ஆதலின் அதனை
வேறு பிரித்துக் கூறினாரில்லை என்க. அறநூலார் “தான்” என்று காட்டியது
அறவகையை அளவுபடுத்திக் காட்டி இலக்கணம் வகுத்தற் பொருட்டாமென்க.

     பண்பின் விரவிய - நல் ஒழுக்கம் பொருந்திய கிளையே தாங்குதற்
குரியது ஆதலின் பண்பின் விரவிய என்றார்.

     வரைபுரை மாடம் - மலைகளை ஒத்த மாடங்கள். இவை பதிகளின்
வாழ்வாரது செல்வத்திற்கு அறிகுறியாகலின் மலர்ந்துள என்றார். மலர்தல -
விளக்கம் பொருந்தி யிருத்தல். விளைவிலே “தான்” கொள்ளநின்ற பகுதி
ஆறில் ஒரு பங்கே என்க. அந்த ஆறில் ஒன்றிலே, தான், உண்டதுபோக
எஞ்சியதைக் கொண்டு செல்வ மாடங்களை அமைத்தார்கள் என்று
அவர்களது வாழ்க்கைச் சிறப்பும், அந்நாள் நாட்டுச் சிறப்பும், கூறியவாறு,
சோழநாட்டுத் தஞ்சைச் சில்லாக் குடிகள் இந்நாளில் வரிதானும் கொடுக்க
இயலாது படும் சங்கடங்களின் காரணங்களை ஒப்புநோக்கி இங்கு
உய்த்துணர்தல் நலம் தருவதாகும். அறநூல்கள் விதித்த ஒழுக்கத்தின்
வழுவிய நிலையே எல்லாக் கேடுகளுக்கும் காரணமாமென்க.

     எங்கும்
- எங்கும் மாடம் மலர்ந்துள என வினைமுடிபு கொள்க. 26

77. கரும்படு களம ராலைக் கமழ்நறும் புகையோ
                                   மாதர்
 
  சுரும்பெழ வகிலா லிட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய
                         புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமுங் காவு
                               மெங்கும்.
27

     (இ-ள்.) கரும்பு...புகையோ - மள்ளர்கள் கரும்பைக் காய்ச்சுதலால்
ஆலைகளினின்றும் எழுகின்ற நறிய புகையோ?; மாதர்...தூபமோ - பெண்கள்
தங்கள்