பக்கம் எண் :


1038 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

சரிதம் காண்க. ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள் "தொடர்ந்தபிரி
வுணர் வொருகாற், கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போலழுவர்
குறிப்பயலாய்" (55) என இவ்வாறே கூறுதல் காண்க. "எத்தனைநாள்
பிரிந்திருக்கே னென்னாருர் இறைவனையே", "எவ்வண நான்
பிரிந்திருக்கேன்", "எங்குலக்கப் பிரிந்திருக்கேன்", "எங்ஙன நான்
பிரிந்திருக்கேன்", "எப்பரிசு பிரிந்திருக்கேன்", "என்னாகப் பிரிந்திருக்கேன்",
"எற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்", என்று ஆளுடைய நம்பிகள் (திருவாரூர் -
பழம்பஞ்சுரம்) பாசுரந்தோறும் பலப்பலவாறு பரிந்து இரங்கியதும் காண்க.

     நினைத்தனர் - பறித்து - இவையிரண்டற்கும் செயப்படுபொருள்
வருவிக்க.

     பூதநாயகன் - சிவபூதங்கள் முதலிய கணங்களுக்கெல்லாம் தலைவன்.
கோடி கோடி குறட்சிறு பூதங்கள் (16) சுற்றி ஆடவும், பாடவும், ஏவல்
செய்யவும் அவைகட்கெல்லாம் தலைவராய்ச் சிவபெருமான் வீற்றிருப்பர்
என்பது வேத சிவாகமங்களா னறியப்படும் உண்மை. "பொன்றீ மணிவிளக்குப்
பூதம் பற்ற", "பாரிடங்கள் பணிசெய்ய" (தேவாரம்), "ஓவா வணுக்கச் சேவகத்தி
லுள்ளோர் பூத கணநாதர்..." (ஏயர்கோன் - புரா - 332) முதலிய எண்ணிறந்த
திருவாக்குக்களும், "பூதபதயேநம" என்ற சிவாஷ்டோத்தரமும் காண்க. பூதம்
- உயிர்கள் என்று கொண்டு உயிர்க்குயிராய் நின்று இயக்கும் தலைவன்
என்றலுமாம். "பூதம்யாவையி னுள்ளவர் போதென", "பூதபரம்பரை" என்பன
காண்க.

     பூதநாயகன்பால் வைத்த மனத்தினும் கடிது - மனவேகம் மிகக்
கடிதிற் செல்வது. "வாயுவேகம் மனோவேகம்" என்ற வழக்கும் காண்க.
திண்ணனாரது மனம் வேறெங்கும் செல்லாது பூதநாயகனிடமே செல்லுதலால்
அவர் பால் வைத்த என்றார். மருந்து தேடிப் பறித்தபின் மிக வேகமாய்
நாயகனிடம் சென்ற குறிப்புப் பெற மனத்தினும் கடிது என்றார். முன்னே
"நாணனு மன்பு முன்பு நளிர்வரை யேற" (752) என்றபடி அன்பு முன்போய்த்
திண்ணனாரை இழுத்துச் செல்ல அவர் அதனைப் பின்பற்றிப் போயினர்.
இங்கு அந்த மனத்தினும் மருந்து பிழிந்துவார்த்துப் புண்தீர்க்கும் ஆர்வம்
மிக்கதால் அவர் சென்ற செல்கையின் வேகம் மிக்கது. மனம் வருதற்குமுன்
இவர் வந்தனர் என்பது. எண்ணம் முற்றுவதற்கு முன் அதனாற்
றூண்டப்பட்ட செயல் முற்றியதெனச் செயலின் விரைவு குறித்தபடியாம்.

     மனத்தினும் - இன் - உறழ்பொருளில் வந்த ஐந்தனுருபு. உம்மை
உயர்வு சிறப்பு.

     அம்மருந்துகள் பிழிந்து வார்த்தார் - தேடி - நினைத்து - பறித்து
- கொண்டு - கடிது வந்த - அந்த என அகரம் முன்னறி சுட்டு. பிழிதல் -
வார்த்தல்
- மருந்து மூலிகைகளாகிய பச்சிலைகளை ஏற்றவாறு பிழிதலும்
குருதிபொங்கும் புண் உள்ள இடம் தெரிந்து வார்த்தலும் மருத்துவம்
செய்யும் முறைகள் குறித்தன. "நோய்நாடி நோய் முதனாடி யதுதணிக்கும்,
வாய்நாடி வாயப்பச் செயல்" என்ற திருக்குறளும் அதன் கீழ் ஆசிரியர்
பரிமேலழகருரைத்தனவும் இங்கு நினைவு கூர்க. இம்மருத்துவ முறை
திண்ணனார்க்கு முன் அனுபவ வாசனையால் நேர்ந்த அறிவு. இம்மருந்து
இலைகளைச் சல்லியகரணி
என்பர் வடநூலார். (சல்லியம் - அம்பு, ஈட்டி).
இத்தகைய சல்லியகரணி முதலிய பல மூலிகைகள் மலைகளில் உள்ளன
என்று இராமாயணம் கூறும்.

     பிசைந்து வார்த்தார் - என்பதும் பாடம். 171

821.




மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினாற் றிருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா தொழுகக்
                                       கண்டே
"யிற்றையி னிலைமைக் கென்னோ வினிச்செய "லென்று
                                       பார்ப்பா
"ருற்றநோய் தீர்ப்ப தூனுக் கூ"னெனு முரைமுன் கண்டார்.




172

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு மற்றுப் பிழிந்து வார்த்த மருந்தினால்
திருக்காளத்தி யப்பருடைய கண்ணின் புண்ணினின்று வரும் குருதிநீர்
குறைவுபடாமல்