பொன்செய்
- பொன்விளையும் நிலத்தின் விளைவனவும், பொதுவாய்
மலையின் விளைவனவும் ஆகிய மருந்து மூலிகைகள் மிக்க வீரியமுள்ளன
என்பர். பொன்முகலி பெருகுதற்கிடமாதலின் பொன்செய்
வரை என்றார்.
முகலி இம்மலையினின்று பொன்கொழித்து வருதல் மேல் 747 - ல்
உரைக்கப்பட்டது. பொன் - அழகு எனக்கொண்
டுரைப்பாருமுண்டு.
கொண்டு
வருவன் நான் என்று போனார் - தேடி எடுத்துக்
கொண்டு நான் வருவேன் என்று சொல்லிப்போயினர். சொல்லுதல்
-
தேவர்க்கு அறிவித்து அவரைத் தேற்றுதல் கருதியது.
வருவன்
என்று போனார் - செய்கை போதலேயாயினும், திண்ணனார்
முன் கருதியது வருதலேயாம். வரும் ஆவலே அவர் கருத்தின் மிக்கிருந்தது
என்பது குறிப்பு. உலக வழக்கிலும் போகின்றவர்கள் போகின்றேனென
அமங்கலமாகக் கூறாமல் வருகின்றேன் என்று சொல்லிப்போகும் மரபும்
இதுபோன்ற கருத்துடையதாம்.
மருந்து
நாடி - என்பதும் பாடம். 170
820.
|
நினைத்தார்
வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கு
மினத்திடைப் பிரிந்த செங்க ணேறென வெருக்கொண்
டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார். |
171 |
(இ-ள்.)
வெளிப்படை.
(திண்ணனார் மருந்து மூலிகைகளையும்
அவையிருக்குமிடங்களையும்) எண்ணியவராய் வேறுவேறு நெருங்கிய
காடுகளில் எங்கும், தன்னினத்தினின்றும் பிரிந்த செங்கண்ணுடைய
இடபத்தினைப்போல, வெருட்சியுடன் போய்ப் புனங்களில் மருந்து
மூலிகைகளைப் பறித்துக்கொண்டு, பூதநாதனாகிய காளத்தியப்பரிடம்
தாம்வைத்த மனத்தின் வேகத்தினும் மிக்க விரைவாகத் திரும்பிவந்து அந்த
மருந்துகளைப் பிழிந்து அவருடைய கண்ணில் வார்த்தனர்.
(வி-ரை.)
நினைத்தனர் -
நினைத்தனராகி. முற்றெச்சம். நினைத்தனர்
பறித்து எனக்கூட்டுக.
வேறுவேறு
வனங்கள் - வெவ்வேறாகிய - வெவ்வேறு வகைப்பட்ட
காடுகள். நெருங்கிய - மரஞ் செடி கொடிகளடர்ந்த;
எங்கும் -
எங்கெங்கும் - முழுதும்.
இனத்திடைப்
பிரிந்த செங்கண்ஏறு என - செங்கண் ஏறு -
இங்கு இடபஏற்றினைக் குறித்தது. வெருக் கொள்ளுதல் -
எதிர்பாராது
சடுதியில் நேர்ந்த பயத்தால் வெருண்டு மருட்சியடைதல். வெருவுதல்
-
பயப்படுதல். உலகவழக்கில் இதனை விருக்கென்று பயந்து என மருவி
வழங்குவர். தன் இனத்தினின்று பிரிந்த இடபம் இவ்வாறு வெருண்டு கண்
சிவந்தும் காது கூப்பியும் இனம் இருந்த திசை நோக்கித் தேடியும் அலறியும்
ஓடுதல் கண்கூடாதலின் அதனை உவமித்தார். ஏறு - வீரத்தினைவிடாத
தன்மையும் குறிப்பதாம். இது மெய்யும் தொழிலும் பற்றிய உவமை.
இனத்தினைப்
பிரிந்த - என்ற உவமைமுகத்தாற் காளத்தியப்பரைத்
திண்ணனாருக்கு இனம் என்பதும், ஏறு - பக்குவான்மா
என்பதும் குறிப்பாம்.
இனம் - அவ்வர்க்கம் கூடி அமைதி பெறுதற்குரியதாய்,
அதற்குச்
சுகந்தருவதாய், அதன் தலைமையதாய்ச், சித்தாயுள்ள பசுபதியைக் குறிக்கும்.
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தாம் சேர்ந்திருந்த பதியினைப் பிரிந்தால்
இவ்வாறு வெருக்கொண்டு அலைவர் என்ற உண்மை நூற்கருத்தும் இங்குப்
புலப்படுதல் காண்க. செங்கண் என்பதும் உயிரின் செம்மையாகிய பக்குவக்
குறிப்பு. இதன் விரிவு சிவஞானபோதம் 8 - ம் சூத்திரத்துள்ளும், பிறாண்டும்
கண்டுகொள்க. மாணிக்கவாசக சுவாமிகள் "ஐயனே நினைப்பிரிந்து
மாற்றகில்லேன்" (வாத - உப - பட, 55), என்று அலறிய
|