அவற்றைப் பழமொழிகளாக
வழங்கும் வழக்கம் உதவிபுரிகின்றது.
அவ்வழக்கம் இங்கு அரிய பெரிய செயலுக்கும், செயலின் விளக்கத்துக்கும்
பயன்பட்ட வரலாறு இச்சரிதத்தினாற் காணலாம்.
முன்
கண்டார் - மனக்கண்ணின் முன்னே வரக்கண்டனர் -
நினைவுக்கு வர அறிந்தனர். முன்உரை என்று
கூட்டிப் பழமொழி என்று
கொள்ளலுமாம்.
இழியக்
கண்டும் - என்பதும் பாடம். 172
822.
|
"இதற்கினி
யென்க ணம்பா லிடந்தப்பி னெந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவு மடுக்கு" மென்று
மதர்த்தெழு முள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து
தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணி லப்ப,
173 |
|
|
823.
|
1நின்றசெங்
குருதி கண்டார்; நிலத்தினின் றேறப்
பாய்ந்தார்;
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார்; கூத்து மாடி
"நன்றுநான் செய்த விந்த மதி"யென நகையுந் தோன்ற
வொன்றிய களிப்பி னாலே யுன்மத்தர் போல மிக்கார்.
174 |
822.
(இ-ள்.) வெளிப்படை "இனி இம்மருந்து செய்தற்காக, எனது
கண்ணை அம்பினாலே தோண்டி அப்பினால் எமது பெருமானாரது
கண்ணில்நேர்ந்த நோயினுக்கு இதுவே மருந்தாகி, அதனாற் புண்ணினின்று
போதுகின்ற குருதிநீர் வராமல் நிற்கவும் கூடும்"
என்று எண்ணிக், களித்து
எழுகின்ற உள்ளத்தோடும் மகிழ்ந்து திருமுன்பு இருந்துகொண்டு, தமது
கண்முதலைச் சரத்தினால் ஊன்றித் தோண்டி எடுத்துக் கையில் வாங்கி
முதல்வனாரது கண்ணில் அப்ப, 173
823.
(இ-ள்.) வெளிப்படை குருதிநின்றதைக் கண்டார்; அந்தப்பெரு
மகிழ்ச்சியினாலே நிலத்தினின்று உயரப்பாய்ந்து குதித்தார்; மலை போல
வளர்ந்த தமது தோள்களைக் கொட்டினார்; கூத்தும் ஆடி "நான் செய்த
இந்த மதி - யோசனை - மிக நன்று" என்று சிரிப்புத் தோன்றப்
பொருந்தியகளிப்பினாலே உன்மத்தர் போன்ற நிலையில் மிக்கவராயினர். 174
இவ்விரண்டு
பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
822.
(வி-ரை.) இதற்கு -
"ஊனுக்குஊன்" என முன்கண்ட
உரையாற்றெரிந்த மருந்து பெறுதற்கு முதல்வனாரது புண்ணாகிய ஊனில்
அப்புதற்கு அது போன்ற கண்ணாகிய ஊன்பெற வேண்டிய அதனுக்கு.
இதற்கு - இந்நோய்க்கு என்றலுமாம்.
என்கண் இடந்து அப்பின் - கண்ணாகிய ஊன்
வேண்டும் அதற்கு
மான் முதலியவற்றைக் கொன்று அவற்றின் கண்ணைத் தோண்டி
அப்பலாகுமே யெனின் அது தாமதப்படுதலோடு இறந்த பிராணியின்
அங்கமாதலின் சூடுதணிந்து ஒவ்வாமலும், கொடுக்கத்தக்க கண்ணையுடைய
தாம் பக்கத்திலிருப்ப வேறெங்கும் இதனைத் தேடவேண்டுவதில்லை எனத்
துணிந்தனர். யாக்கைதன் பரிசு அற்ற (803) நிலையிலிருந்தனராதலின்
அவ்வியாக்கையினின்று கண்ணை நினைத்தனரன்றி அதனை யிடக்கும்
போதும் இடந்த பின்னும் உளதாகும் துன்பமுதலாயினவற்றை நினைந்தாரிலர்.
என்கண் - ஞானேந்திரியங்கள் ஐந்தும் இருக்குமாதலின் தலையே
எண் சாணுடம்பில் முதன்மை பெற்றதாம். அவ்வைந்தனுள்ளும்,
சேய்மையிலுஞ் சென்றியைந்தறிதலாற் கண் சிறந்தது என்ற குறிப்பால் என்
கண் என்று விதந்து கூறினார்.
|