இறைவனது
கண்ணினின்றும் போந்த முருகவேளினது அருளாற்
போந்தவர் திண்ணனாராதலின் கண்கொடுத்தல் முறையேயாம் என்ற
குறிப்பும் பெற என்கண் - என்றார் எனலுமாம்.
புண்நீர்
- புண்ணிலிருந்து வடியும் குருதியாகிய செந்நீர்.
நிற்கவும்
அடுக்கும் - வடியாமல் நிற்கவும் கூடும். உம்மை ஐயம்பற்றி
வந்தது. "அப்பியும் காண்பன்" என்ற திருமறமும் காண்க.
மதர்த்து
எழும் - களிப்புற்றதனால் எழுகின்ற. மதர்த்தல் - மகிழ்தல்
- களிப்புறுதல். எழுதல் - பூரித்தல். காரியம் - கைகூடுமுன்பே இவ்வாறு
மருந்தாகவுதவும் பேறு பெற்றதற்கு மகிழ்ந்தனர்.
முன்
இருந்து - திருமுன் வீற்றிருந்து - மருந்துகள் பிழிந்து
வார்க்கும்போது நின்ற திண்ணனார் இப்போது கண்ணைத்தோண்டி
வாங்கும்போது அசைவின்றியிருப்பதாக இருந்தனர் என்க. உடற்பகுதிகளை
மருத்துவர் அறுக்கும்போது அசைவற்றிருத்தல் வேண்டுமென்பது முறை.
மடுத்து - வைத்து - ஊன்றி. வாங்கி - கண்ணைத்
தோண்டிப் பிரித்து .
வேறாக எடுத்து.
தங்கண்
முதல் - என்க. கண்முதல் - கண்ணின் வேர். முதல் -
வேர். அடிப்பாகம். "நின்முதல் வழிபடத் தன்மகற் றடிந்த தொண்டர்"
(கோயினான் - 40), "வெஞ்சின மாசுணந் தன்முதல் முருக்க, நென்முதற்
சூழ்ந்த நீர்ச்சிறு பாம்பு" (மேற்படி 8) என்பன காண்க. முதற்சரம்
என்று
கூட்டி முதன்மையான அம்பு என்றுரைத்தலுமாம். முதன்மையாவது
திண்ணப்பனாரைக் கண்ணப்பனாராக ஆக்குதற் குரியபடி வலது கண்ணைத்
தோண்டியும், இடது கண்ணைத் தோண்ட ஊன்றியும் உதவிய சிறப்பு.
பின்னரும் "ஒருதனிப்பகழி" (826) என்றது
காண்க. இச்சிறப்புப்பற்றிக்
"கணைகொள் கண்ணப்பர்" (தக்கேசி - திருநின்றியூர் - 2) என்று நம்பிகள்
அருளிய குறிப்பும் காண்க. இடக்கண்ணுக்கு இரண்டாமுறை அம்பு
எடுத்தலின் இதனை முதற்சரம் என்றார் என்றுரைப்பாருமுண்டு.
சரம்
மடுத்தல் - அம்பினை ஊன்றுதல். "கணையது மடுத்து",
"மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன்"
என்பன திருமறத்
திருவாக்கு. வாங்கி - தோண்டியெடுத்த கண்ணினைக்
கையில்வாங்கி.
"கையில் வாங்கி" என்பது திருமறம்.
சரம்
எடுத்து - என்பதும் பாடம். 173
823.
(வி-ரை.) நின்ற செங்குருதி
கண்டார் - குருதி வெளிவராத
நிலைமையைக் கண்டாராதலின் செங்குருதி நின்றது கண்டார் எனமாற்றிப்
பொருள் கொள்க. "வென்ற வைம் புலனான் மிக்கீர்" (401) என்றதுபோலக்
காண்க. "நீங்கிய நாணொடு" என்றாற்போல இவ்வாறு வருதல் பொருத்தமில்
புணர்ச்சி என்பது சுப்பராய செட்டியாருரை.
நிலத்தினின்று
ஏறப்பாய்ந்தார் - இங்குக் கூறிய ஏறப்பாய்தல்,
தோள்கொட்டுதல், கூத்தாடுதல், நகை தோன்றுதல், உன்மத்தர் போலாதல்
எனுமிவை பெருமகிழ்ச்சியால் வெளிப்படக்காணும் உடற்செயல்கள். முன்
குருதி கண்டபோது மனமும் மெய்யும் மொழியும் முடங்கி மயங்கிச் சோர்ந்து
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார் (814). குருதி நிற்கக்கண்ட இப்போது அவை
தழைக்கத் தாமும் நின்று ஏறப்பாய்ந்தார். ஏறப்பாய்தல்
- நின்ற
இடத்தினின்றும் உயரக் கிளம்பிக் குதித்தல்.
குன்றென
வளர்ந்த தோள்கள் கொட்டினார் - வளர்ந்த - குருதி
கண்டபோது கையிற் சிலையுடன் ஊனும் சிதறிவீழ்த்தித் (814) தோள்கள்
மெலிந்தன; குருதி நிற்கக் காணலும் அம்மகிழ்ச்சி மிகவே அவை குன்று
போல வளர்ச்சிபெற்றன என்க. குன்றென - முன்னர்க் குன்றுபோல
வளர்ச்சிபெற்றும் இப்போது மெலிந்த தோள்கள் தமது முன்னை நிலையாகிய
குன்றுபோல. "செவ்வரை போற்புய மிரண்டும்" (701) என்றதுகாண்க.
நாயகனைப் பிரிந்த சோகத்தால் நாயகிக்கு
|