பக்கம் எண் :


1042 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

உடல் மெலிந்து கைவளை கழலுதலும் அவனைக் கூடியவழி உடல்
பூரித்துக் கைவளை உடைதலும் முதலியனவாக அகப்பொருணூல்களிற்
பேசப்படும் நிலைகளி னியல்பை இங்குக் குறிக்க.

     கூத்தும் ஆடி - தம்மை மறந்து கூத்தாடுதல் மிக்க மகிழ்ச்சியின்
விளைவு. "கும்பிடுதலும், தட்டமிடுதலும், கூத்தாடுதலும் உவகை மிகுதியில்
நிகழும் மெய்ப்பாடு" (சித்தியார் - 12 - 2) என்ற பொழிப்புரையும் காண்க.
"ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச்
செய்து" என்ற ஞானசாத்திரத் (12 - 2) திருவாக்கிற் கண்டவாறு இங்குத்
திண்ணனார் அரனையே யணைந்தனர்; அரனை ஆசையொடும் அடைந்தார்;
அவர் கருமந் தன் கருமமாகச் செய்தார்; அவர் பிரேரணையாகிய
அருண்ஞானக் குறியின்நின்று தம்மை மறந்து அவரையே கும்பிட்டு
அருச்சித்தார்; இங்கு அவரது நோய்தீரக் கண்டபோது உவகையினாற்
கூத்தும் ஆடினர்; சீவன் முத்த நிலையாகிய பரம உபசாந்தத்தை
அடைந்தனர் - என்பது க. சதாசிவ செட்டியார் உரைக் குறிப்பு.

     நான் செய்த இத்தமதி நன்று- என மாற்றுக. மதி - எண்ணம் -
ஆலோசனை. மதித்தற்கருவியின் றொழிற்பாடு. செய்தமதி - மதி - உள்ள
நிகழ்ச்சி; செய்தல் - உட்கருவியின்றொழில். மதி - மதியாற்றூண்டப்பட்ட
செயலுக்கு ஆகு பெயரென்றலுமாம்.

     ஒன்றியகளிப்பினாலே உன்மத்தர் போல - ஒன்றிய - பொருந்திய
முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது வந்து சேர்ந்த.
களிப்பினாலே உன்மத்தர் போலாகுதல் மதமிகுந்தபோது உளதாம் உட்கரண
புறக்கரணநிலை. உன்மத்தர் - மதம்மிக்கவர். உத் - மேல். உற்பாதம்,
உற்பவம், உற்பீசம் என்பவை காண்க. மத்தம் - மதத்தாலாகும் நிலை.

     மிக்கார் - இந்நிலையின் மெய்ப்பாடுகளின் மிகுதியுடையராயினார்.

     குன்றெனவளரும் - என்பதும் பாடம். 174

824.



வலத்திருக் கண்ணிற் றங்க ணப்பிய வள்ள லார்தந்
நலத்தினைப் பின்னுங் காட்ட நாயனார் மற்றைக் கண்ணி
லுலப்பில்செங் குருதி பாயக் கண்டன ருலகில் வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்த கொள்கையி னும்பர்
                                       மேலார்,




175
825.




கண்டபின் "கெட்டே! னெங்கள் காளத்தி யார்க ணொன்று
புண்டரு குருதி நிற்க, மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டுமற் றிதனுக் கஞ்சேன் மருந்துகை கண்டே; னின்னு
முண்டொரு கண்; ணக் கண்ணை யிடந்தப்பி யொழிப்பே"
                                        னென்று




176
826.



கண்ணுதல் கண்ணிற் றங்க ணிடந்தப்பிற் காணு நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்றன் றிருக்கண்ணி லிடக்கா
                                        லூன்றி
யுண்ணிறை விருப்பி னோடு மொருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ தேவர்,



177
827.




செங்கண்வெள் விடையின் பாகர், திண்ணனார்                                   தம்மையாண்ட
வங்கணர், திருக்காளத்தி யற்புதர் திருக்கை யம்பாற்
றங்கண்மு னிடக்குங் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கண ரமுத வாக்கு "கண்ணப்ப நிற்க" வென்ற.




178