824.
(இ-ள்.) நாயனார் தலைவராகிய காளத்தியப்பர்;
வலத்திருக்
கண்ணில்.......காட்ட - தமது வலது திருக்கண்ணிலே தம் வலக்கண்ணைத்
தோண்டி அப்பிய வள்ளலாராகிய கண்ணப்ப நாயனராது நன்றாந்தன்மையை
மேலுங்காட்டுதற்பொருட்டு; மற்றைக் கண்ணில்..........கண்டனர் - தமது
மற்றைக்கண்ணாகிய இடது கண்ணில் இடையறாது செங்குருதி
பாய்ந்திழியும்படி செய்தனர்; உலகில்.....மேலோர் - இவ்வுலகிலே வேடர்குலம்
செய்த பெருந்தவங் காரணமாக அதனில் வந்தவதரித்த, கொள்கையினால்
தேவரினும் மேலவராயின திண்ணனார் (அதனைக்கண்டு), 175
825.
(இ-ள்.) கண்டபின் - கண்டவுடன்; "கெட்டேன்........நிற்க
- ஓ!
கெட்டேன்! எமது காளத்தியப்பருடைய கண்களில் ஒன்றில் வந்த
புண்ணினின்று பாய்ந்த குருதிவராமல் நின்றுவிட; மற்றைக்கண்.......மண்டும் -
மற்றைக் கண்ணில் குருதி பொங்கி மிகுகின்றது; மருந்து கைகண்டேன் -
இந்நோய்தீர்க்கும் மருந்தினை அனுபவத்திற் கண்டு கொண்டேன்;
மற்றிதனுக்கு அஞ்சேன் - வரத்தகாத இது வந்ததனுக்கு அஞ்சமாட்டேன்;
இன்னும்........கண் - எனக்கு இன்னும் ஒரு கண் எஞ்சியுள்ளது;
அக்கண்ணை........என்று - அந்தக் கண்ணைத் தோண்டித் தேவர் கண்ணில்
அப்பி இந்நோயினைத் தீர்ப்பேன்" எனத்துணிந்து; 176
826.
(இ-ள்.) தங்கண் இடந்து - தமது கண்ணைத் தோண்டி;
கண்ணுதல் கண்ணில் அப்பின் - நுதற் கண்ணினையுடைய தேவரது
கண்ணிலே அப்பினால்; காணும் நேர்பாடு எண்ணுவார் - காணும்
நேர்பாட்டினை எண்ணுவாராய்; தம்பிரான்.........ஊன்ற - திண்ணனார் தமது
பெருமானுடைய அத்திருக்கண்ணிலே தமது இடக்காலினை எடுத்து
ஊன்றிக்கொண்டு, மனதில் நிறைந்தெழுந்த விருப்பத்தோடும் ஒப்பற்ற ஒரு
அம்பினை எடுத்து அதனைத் தமது கண்ணில் ஊன்றவே; தேவதேவர்
தரித்திலர் - தேவ தேவராகிய காளத்திநாதர் தரித்திலராதலின், 177
827.
(இ-ள்.) செங்கண்.......பாகர் -
சிவந்த கண்ணையுடைய
வெள்ளை விடையினை ஊர்தியாகவுடையவரும்; திண்ணனார்......அங்கணர் -
திண்ணனாரை ஆட்கொண்ட அங்கண்மையுடையவரும் ஆகிய;
திருக்காளத்தி.......திருக்கை - அத்திருக்காளத்தி யற்புதரது திருக்கை
(தோன்றி); அம்பால்........கையை - அம்பு கொண்டு கண்ணைத்தோண்ட
முயற்சித்த அவரது கையினை; தடுக்க - தடுக்கா நிற்க; நாககங்கணர்
அமுதவாக்கு - பாம்பைக் கங்கணமாகத் தரித்த இறைவரது அமுதமாகிய
திருவாக்கு; மூன்றடுக்கு - மூன்றுமுறை; "கண்ணப்ப நிற்க" என்ற -
"கண்ணப்பனே நில்!" என்றன. 178
இந்நான்கு
திருப்பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
824.
(வி-ரை.) கண் அப்பிய
வள்ளலார்- கண்ணை இடந்து
அப்பியதனால் வள்ளலாந்தன்மை வெளிப்படக் காண நின்றவர். அப்பிய
-
காரணப்பொருளில் வந்த பெயரெச்சம். வள்ளலார்
- முன்னர் ஒரு கண்
அப்பியதோடு பின்னும் மற்றைக் கண்ணையும் இடந்து அப்ப ஒருப்படுபவர்
என்ற குறிப்புப்பெற இங்கு வள்ளலார் என்றார்.
முன்னர் "வள்ளலார்
மலையை நோக்கி" (751) எனக் காளத்திநாதரை வள்ளலார் என்றார்.
"உள்ளதே தோற்ற" என்ற சிவஞான போத உதாரண வெண்பாவில்
(2சூ - 2அ) வள்ளலவன் என்றவிடத்து "வள்ளல் என்றார் தற்பயன் குறியாது
வேண்டுவார் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி" என்று
சிற்றுரையிற் கூறியது காண்க. இங்கு அவ்வள்ளலாருக்கும் வேண்டுவதை
வேண்டியவாறே கொடுக்கும் வள்ளன்மை பூண்டதனாற் கண்ணப்ப
நாயனாரையும் அவ்வாறே வள்ளலார் என்ற சுவை
காண்க. ஏனை
வள்ளல்கள் எனப்படுவோர் புகழ் முதலியவற்றை விரும்பித் தமது
புறப்பற்றாயுள்ளவற்றைத் தருவர். "யாதனின் யாதனி னீங்கிய னோத, லதனி
னதனி னிலன்" என்றபடி கொடைப்பொருள்களா லுளதாகும் உபாதி
நீங்குதலாகிய
|