மற்ற
இதனுக்கு என்றது மற்றிதனுக்கு என வந்தது.
மற்ற - வரத்தகாத
- வேறுபாடாகிய. இதனுக்கு மற்று அஞ்சேன் என்று
கூட்டியுரைத்தலுமாம்.
மருந்து
கை கண்டேன் - "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை" யாதலின்
அஞ்சேன் என்றதற்குக் காரணங் கூறியவாறு. கைகண்டேனாதலின் அஞ்சேன்
என்க. கைகூடும் என்புழிப்போலக் கை உறுதிப் பொருள்தரும் (உபசர்க்கம்)
இடைச்சொல். முன்னர் "நிற்கவும் அடுக்கும்" (822) என்ற ஐயப்பாட்டினிற்
கண்ணைத் தோண்டினர். இப்போது அந்த ஐயம் நீங்கியதனால்
உறுதிப்பெற்றெழுந்த துணிவு குறித்தது.
ஒழிப்பேன்
- குருதி பெருகும் நோயினைத் தீர்ப்பேன். செயப்படு
பொருள் வருவிக்க.
என்று
- என மனத்திற் றுணிந்து.
கெட்டேன்!
- ஒன்று நிற்க - மற்றைக்கண் குருதிமண்டும் - அஞ்சேன்
- கை கண்டேன் - உண்டு - அப்பி ஒழிப்பேன் என இவ்வாறு விரைவில்
ஒன்றன்பின் ஒன்று வரக் கூறியது மிக்க விரைவில் அவரது உள்ளத்தில்
தொடர்ந்து நிகழ்ந்த பல்வேறு மன நிகழ்ச்சிகளை அவ்வாறே
குறித்தற்காமென்க. முன்னர் 815 - லும் இவ்வாறுரைத்தது காண்க. 176
826.
(வி-ரை.) கண்ணுதல் - இறைவர் காட்டிய
அருட்கண்
காரணமாக நிகழ்ந்த இச்சரிதம் முடியுமிடமாதலின் இங்கு இப்பெயராற்
கூறினார். கண்ணுதல் - நுதலில் - நெற்றியில்
- கண்ணுடையவர்.
சிவபெருமான். "வல்லிருளாயெல்லா வுலகுடன்றான் மூடவிரு ளோடும்வகை
நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்" (தக்கராகம் - கலையநல்லூர்
- 4) என்று ஆளுடைய நம்பிகள் அருளியபடி உலகுக்கு ஒளி நெறியாகிய
அன்புநெறியினைக் காட்டி உதவும் திருக்கண் என்பது குறிப்பு.
சிவக்கண்ணனாகிய வலக்கண்ணாற் பாசநீக்கமும், அருட் கண்ணாகிய
இடக்கண்ணாற் சிவமயமாக்கலும், ஞானக்கண்ணாகிய நெற்றிக்கண்ணால்
சிவானந்தானுபவ முறுவித்தலும் செய்கின்றாராதலின் கண்ணப்பரைத் தம்
வலப்பக்கத்தே என்றும்மாறாது நிற்கவைக்கும் இப்போது இப்பெயராற்
கூறினார் என்று ஆலாலசுந்தரம் பிள்ளை இங்கு விசேடவுரை காண்பர்.
காணும்
நேர்பாடு எண்ணுவார் - நேர்பாடு - கண்ணுக்குக் கண்
நேர்பட்டு அமையும் பொருத்தம். காணும் -
காணவேண்டிய. காணத்தக்க.
தெரியத்தக்க. காணுதல் இங்குப் பரிசத்தாலுணர்தல் குறித்தது.
கண்ணில்
இடக்கால் ஊன்றி - கண்ணில் - கண்ணின் பக்கத்தில்.
தமது எஞ்சிய ஒரு கண்ணையும் இடந்துவிடின் அதனை அப்புதற்குரிய
இறைவனது இடதுகண் இருக்குமிடம் தெரியாதாகையால், அந்த இடத்தை
அடையாளம் கண்டுகொள்ள ஊன்றினர் என்க. கண் தோண்டியவுடன்
அதன் சூடு தணியாமலும் இரத்தம் குளிராமலும் உடனே அப்பினால்மட்டுமே
ஊனொடுஊன் ஒட்டிச்சேரும். ஆதலின், இதற்காக வறிதே தடவி முயன்று
தாமதப்படாதபடி இவ்வாறு முன்எச்சரிக்கை செய்தனர்.
ஒரு
தனிப்பகழி - ஒப்பற்ற பெருமையுடைய அம்பு.
கண்ணில்
ஊன்ற - தேவரது கண்ணிற் காலூன்றலும், பின்னர்த் தம்
கண்ணில் அம்பு ஊன்றலும் தேவரது புண்தீர்க்கும் தீவிரத்தால் விரைவில்
ஒன்று போல நிகழ்ந்தன என்பதனை ஊன்றி - ஊன்ற என்றதனாற் குறித்தார்.
தரித்திலர்
- தரித்திலராதலின். வலக்கண்ணை இடந்தப்பியதனைத்
தரித்த இறைவர், அம்பினை இடதுகண்ணி லூன்றலும் தரித்திலர் என்றார்.
வலதுகண் தமதுபாகமும் இடதுகண் அம்மையாரது கருணைப் பாகமுமாதலின்
அப்பாகத்திற்குரிய இடது கண்ணைத் தோண்டப்பார்த்தலைத் தமது பேரருள்
தரியாதாயிற்று. அதனால் கையைப் பிடித்துக்கொண்டு "வலத்தில் நிற்க"
என்று பேரருள் புரிந்தார் என வரும்பாட்டிற்
குறித்தல் கருதுக.
|