பக்கம் எண் :


1048 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

உள்ளநிகழ்ச்சி யாகிய அன்பின் பெருக்கையும் கண்டார் எனச்
செயப்பபொருள் வருவிக்க. முனிவர்க்கும், இவர் மூலம் ஏனைய
ஆன்மாக்களுக்கு காட்ட இறைவர் இவ்வாறு நிகழ்த்தினாராதலின் கண்டார்
என அவற்றின் பலன் கூறினார்.

     மறைகளார்ப்ப - வேதங்களைத் தேவர்கள் சொல்லிப் பூமழை
பொழிந்தனர் என்க. வேதமந்திரங்கள் திருவருள் வெளிப்பாடுபற்றித் தாமே
நாதத்தினின்று தோன்றி ஒலித்தன என்றலுமாம். "ஒதுமறை யோர்பிறி
தொலித்திடினு மோவா, வேதமொழி யாலொளி விளங்கியெழு மெங்கும்" -
(திருஞான - புரா - 31) "இயற்றுபவரின்றியு மியம்பு, மங்கல முழக்கொலி
மலிந்த" (மேற்படி - 33) என்றவை காண்க. கற்பகப் பூமாரி பொழிதல்
முதலிய நிகழ்ச்சிகள் திருவருள் வெளிப்பாடு நேர்ந்தபோதெல்லாம் நிகழ்வன
398 முதலியவை பார்க்க. "அருளலும், விண்மிசை வானவர், மலர் மழை
பொழிந்தனர்: வளையொலி படகந், துந்துபி கறங்கின; தொல்சீர் முனிவரு
மேத்தினர்" என்றது திருமறம்.

     பிடித்தபோதும் - பூவின்மாரி - என்பனவும் பாடங்கள். 179

829.




பேறினி யிதன்மே லுண்டோ? பிரான்றிருக் கண்ணில் வந்த
ஊறுகண்ட டஞ்சித் தங்க ணிடந்தப்ப வுதவுங் கையை
யேறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக்கொண் "டென்வ
                                        லத்தின்
மாறிலாய்! நிற்க" வென்று மன்னுபே ரருள்பு ரிந்தார்.




180

     (இ-ள்.) பிரான்......அஞ்சி - தமது பெருமானது திருக்கண்ணினுக்கு
வந்த ஊற்றினைக் கண்டுபயந்து; தங்கண்.......கையை - தமது இடக்கண்ணைத்
தோண்டி அப்புதற்கு உதவநின்ற கண்ணப்பரதுகையை;
ஏறுயர்த்தவர்....பிடித்துக் கொண்டு - இடபக்கொடியை உயர்த்தியவராகிய
காளத்தியப்பர் தமது கையினாற் பிடித்துக்கொண்டு; மாறிலாய்! -
ஒப்புயர்வற்றவனே!; என்வலத்தில் - எனது வலது பக்கத்தில்; நிற்க..புரிந்தார்
- நிற்பாயாக என்று நிலைபெற்ற பெரிய திருவருளினைச் செய்தனர்.
பேறு...உண்டோ? (ஆதலால்) இனி யிதன்மேற் பெறத்தக்க பயன்
வேறுமுண்டோ? இல்லை.

     (வி-ரை) பேரருள் புரிந்தார்.....பேறு இனி இதன்மேல்
உண்டோ?
- இங்கு வலப்பக்கத்தில் நிற்க என்றருளப் பெற்ற கண்ணப்ப
நாயனாரும் அவ்வாறருளி அவரது இடப்பக்கத்தில் தாம் அமைந்து நின்ற
காளத்திநாயனாரும் பூட்டிய வில்லின் இருதலை போலப் பிரித்துணராத
நிலையிற் பிணைந்தனர் என்பது குறிக்க இவ்வாறு பூட்டுவிற் பொருள்கோள்
பெற வைத்தது குறிக்க.

     இனி இதன்மேல் பேறு உண்டோ என்க. பேறு - இங்கு இதன்மேல்
உண்டோ என்றதனால் சிவசாயுச்சியமாகிய முடிந்த பதம் குறித்தது.
அருள்ஞானக் குறியினின்று அருள் நோக்கத்தால் மலமூன்று மற்றாராய்,
அவனேதானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி செய்தனராதலின்
இவர் பெற்றது பரமுத்தியேயாம் என்றும், வேறு சிலர் கூறுவதுபோலச்
சிவபூசையாகிய கிரியைக்குரிய சாமீபமாகிய பதம் மட்டுமன்று என்றும் விசேட
உரை காண்பர் ஆலாலசுந்தரம் பிள்ளை.

     உண்டோ? - ஆன்மாக்கள் அடையத்தகும் பேறு இதற்குமேல்
வேறொன்று மி்ல்லை என்று வினா எதிர்மறை குறித்தது. "கற்றதனா லாய
பயனென் கொல்" என்புழிப்போல வேறு இல்லை என்னாது உண்டோ என
வினாச்சொல்லாற் கூறியது உறுதிப் பொருள் தருதற்பொருட்டு. "கலைமலிந்த
சீர்நம்பி கண்ணப்பரா" தலின் கற்றதனாலாய் முடிந்த பயனைப் பெற்றனர்
என்ற இத்திருக்குறட் பொருட்குறிப்பும் காண்க கண்ணப்பர் தாம் யாவரினும்
மிக்க பேறுபெற்றனர் என்பது கருத்து. இதுபற்றியே திருவாதவூரடிகள்
முதலிய பரமாசாரிய மூர்த்தி மற்றும் எல்லாப் பெரியோர்களாலும்
துதிக்கப்பெற்றனர் என்க.