விரும்பிய
இச்சரித நிகழ்ச்சியே மக்கள் துதித்து வாழ்வடையும்
பெருமையுடையதாயிற்று என்பதும் உன்னுக.
கோலாறு
(தேன்வழிந்து) பொழிவது - இச்சரிதத்தில் "முலை
நனைமுகஞ்செய் முதற்பருவ நண்ணினளப் பெண்ணமுதம் (879) என்ற
நாயனாரது மகளாரையும், கொழுங்கனியின் சாறுஒழுகி
அத்தேனொடு
கலக்கும் கால் என்றது அங்கு அவ்வம்மையாரை
மணக்க வரும்
ஏயர்கோனாரையும், வயற்கரும்பின் சாறுஆறு என்றது
அவ்விருவரின்
திருமண நிகழ்காலையில் இறைவன் நேரே வெளிப்பட்டு வந்து, "எழும்பரிவு
- புவனங்களில் ஏறச்செய்"யும் அன்பின் பெருக்கினையுடைய நாயனாரையும்
குறிப்பாலுணர்த்துவது காண்க. இவ்வம்மையாரது இன்ப அன்பின் பெருமை
எயர்கோனார் புராணத்துட் கண்டுகொள்க.
கமழ்சாறூர்
- சாறு விழாவுக்கு பெயராதலின் அக்குறிப்பினால்
மணவிழா வினையும் (884 - 885), அதில் இறைவன் தோன்றிச் செய்யும்
பேரருளினையும் உணர்த்துவதும் கருதுக. "சாறயர் களத்து வீறுபெறத்
தோன்றி" என்பது திருமுருகாற்றுப்டை.
இக்கருத்தினைத்
தொடர்ந்தே மேல்வரும் பாட்டில் "தண்ணீர்மென்
கழுநீர்" என்றது நாயனாருக்கும் (867), ஏயர்கோனார்க்கும் (900 - 901)
இறைவர் செய்த திருவருளினையும், கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்குதல்
இறைவரைப் பணிந்து போற்றிய நாயன்மா ரிருவரையும்,
குறிப்பாலுணர்த்துதலும் காண்க. கழுநீர் அருட்டிரு நோக்கத்தினை
உணர்த்துவது, "பைங்குவளைக் கார்மலரால் ... எங்கள் பிராட்டியும்
எங்கோனும் போன்றிசைந்த" என்ற திருவெம்பாவையாலுணர்க. மேலும்,
புயல்காட்டும் கூந்தல் (868) என்றது அம்மையாரின் மஞ்சுதழைத்
தெனவளர்ந்த மலர்க்கூந்தலையும் (894), நெற்கதிர் கமுகின் மிடறுரிஞ்சிக்
குலையினை வளைத்து அரிவதொக்கது (869) என்று கூறும் பொருள்
அம்மையாரின் கூந்தலை அடற்சுரிகையினால் அடியில் அரிந்து கொடுத்த
(895) இச்சரிதத்தின் அருஞ்செயலையும், நகர அணிகள் (870)
மணத்திருவிழாவின் அணிகளையும் தொடர்ந்து குறிப்பாலுணர்த்துவதும்
காண்க.
இவ்வாறே
அவ்வச்சரிதங்களின் உணர்ச்சி வயமாகிய கண் கொண்டு,
நாடு - நகர் முதலிய இயற்கைப் பொருள்களையும் பிறவற்றையும் அங்கங்கும்
கண்டு காடடிப் போதல் ஆசிரியரது சிறப்பியல்புகளிலொன்றாம்.
திருஞானசம்பந்தநாயனார் புராணம் (7), திருநாளைப்போவார் புராணம் (2),
நமிநந்தியார் புராணம் (3), திருநாவுக்கரசர் புராணம் (6), திருநீலநக்கர்
புராணம் (3) முதலிய பல விடங்களையும் சிந்திக்க.
கஞ்சாறூர்
- கஞ்சாறு என்ற பெயர் பெற்ற ஊர். தலவிசேடம் பார்க்க.
1
867. |
கண்ணீலக்
கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்க ணுறைத்துமலர்க் கண்சிவக்குந்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்க ளுளவயல்கள். 2
|
(இ-ள்.) கண் ... ஒதுங்கி - நீலமலர் போன்ற கண்களையுடைய
பள்ளப்பெண்களாற் களையப்படுகின்ற களைகளில் தப்பி ஒரு புறம் ஒதுங்கி;
உள் நீர்மை ....... உறைத்து - நீர் உள்ளே புணர்ந்ததனாற் செழித்து நின்று;
மலர்க்கண் ... கழுநீர்க்கு - பூவின்கட் சிவப்பு ஏறிக்காட்டுகின்ற தண்ணீர்ப்
பூவாகிய மெல்லிய செங்கழுநீர்ப் பூவினுக்கு; தடஞ்சாலி தலைவணங்கும் -
பெரிய நெற்கதிர்கள் சாய்ந்து வணங்குகின்ற; மண் நீர்மை ... அயல்கள் -
மண்ணும் நீரும் என்ற இருவகை வளமும் சிறந்து காட்டும் வளப்பமிகுந்த
வயல்கள் அப்பக்கங்களில் உள்ளன.
|