கொண்டு வினைச்சொல்
வருவித்து உரைப்பினுமமையும். பணைகள் பல
என்று பல என்பதைப் பின்னுங் கூட்டி உரைத்தலுமாம்.
பணைகள்
கதிர் காட்டுதல் - நெற்கதிர்கள் விளைந்ததனை மேலே
விளங்கக் காட்டி நிற்றல். பணை - பண்ணை, இடைக்குறை.
பண்ணைகளிற்
கதிர்முற்றி விளங்கின; அவற்றை அறுக்கப்
பள்ளப்பெண்கள் கூட்டமாகச் சென்று உலவினர். அப்பண்ணைகளில் பல
தடங்கள் இருந்தன. நெல் விளைந்த பருவகாலமாதலின் நீரிறைக்கும்
செலவின்றித் தடங்களில் நீர்தேங்கி நிறைந்திருந்தது. கயல்களும் கொழுத்துத்
துள்ளின. அத்தடங்களின் கரையினில் பள்ளப்பெண்கள் சென்றும் நின்று
மிருந்தபோது அவர்கள் முகங்களின் நிழல்கள் நீரினுட் காணப்பட்டன.
அதுகண்டு கயல்கள் பிறழ்ந்து துள்ள, அத்தோற்றம் "நமது கண்கள்
இத்தன்மையன" என்று தம்மிடத்துள்ள கயல்களை எடுத்து அத்தடங்கள்
காட்டுவதுபோன்றிருந்தது. அவர்களது முகம் மதிபோலவும், இடையசைதல்
மயிலின் சாயல்போலவும், கூந்தல் மேகம் போலவும் விளங்கின என்று
தொடர்ந்து பொருள் கொள்க.
வானிற்றவழும்
மேகத்தையும், அங்குப் பறக்கும் மயிலையும், அங்கே
விளங்கும் மதியையும் இக்கடைசியர்கள் தம்மில் இனங்காட்டி மேல்
விளங்கவும், இவர்களுடைய கண்களை இந்நிலத்தின்கீழ் விளங்கும் தடங்கள்
காட்டின என்ற குறிப்பினால் இந்நாட்டுக் குடிச் சிறப்பும் அதனின் மேம்பட்ட
நிலச்சிறப்பும் கூறியபடி.
மேற்பாட்டில்
நெல்லின் களைகட்டலும், நெல்வளர்ந்து கதிர்முற்றிச்
சாய்ந்ததனையும் கூறிய ஆசிரியர், இங்கு அவை முற்றியபின் அறுக்கத்தக்க
நிலையினை அம்முறையிற் கூறுதலும், வரும் பாட்டில் அரிவாள் கொண்டு
அறுக்கும் குறிப்பினைக் கூறுகின்ற அழகும் உழவுபற்றிய உள்ளுறையும்
வைப்பு முறையும் காணத்தக்கன.
இச்சரிதமுடைய
நாயனார் உழவராதலின் அத்தொடர்பு காட்ட உழவுத்
தொழிற் பகுதிகளைக் குறித்துச் சிறப்புக் கூறி உள்ளுறை உவமம்,
தற்குறிப்பேற்றம் முதலிய பல அணிநலன்களும் சிறக்க வைத்ததனை உன்னி
மகிழ்க. 3
869. |
சேறணிதண்
பழனவயற் செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர்
தாறரியு நெடுங்கொடுவா ளனையவுள தனியிடங்கள். 4 |
(இ-ள்.)
வெளிப்படை. சேற்றினையுடைய அழகிய குளிர்ந்த
மருதத்தைச் சார்ந்த வயலில்விளைந்த செழிப்பையுடைய நெல்லினது
கொழுத்த கதிர் மேலே போய், அவ்வயலின் அயலில் வேறாக அடுத்துள்ள
நெருங்கிய வேலிப் பக்கம் பசிய கமுக மரங்களின் கழுத்துவரை வளர்ந்து,
மாறாக எழுந்த அவற்றின் திண்ணிய குலையை வளைப்பவை, வண்டுகள்
வாழும் சோலையில் வாழ்கின்ற உழவர்கள் குலைகளை அரிகின்ற நீண்ட
வளைந்த அரிவாள்களை ஒத்தனவாயுள்ளன ஒரோவோரிடங்களில்.
(வி-ரை.)
சேறுஅணி - வேற்றுமையில் நகரவொற்றிரட்டாது
வந்தது.
காடக மிறந்தோர் என்புழிப்போல.
சேறு
- அணி - தண் - பழனம் என்ற நான்கு
அடைமொழிகளையும் வயல் என்ற பெயருடன் தனித்தனிக்
கூட்டுக.
சேற்றின் அணியையுடைய என்று சேர்த்துரைப்பினுமமையும். வயலுக்குச்
சேறுடைமையும், அதனால் அணியுடைமையும் சிறப்பு. எரு - தழை - முதலிய
கழிபொருள்கள் பலவும் சேர்ந்து அழுகிய மண் குழம்பேயாயினும் பயிர்க்குப்
பயன் தருதலும்; அப்பயிர் தாமே உயிர்க்கு ஆதரவாதலும் நோக்கி அணி
எனப்பட்டது. அன்னல் - கருஞ்சேறும், அளறு - உவர்
|