குடிவிளங்க
- இவர் அவதரித்த குடி இவரால் விளக்கமடைய,
குலவிளக்கு, குலதனம் முதலிய வழக்குக்கள் காண்க. ஒரு குலத்தில் வந்த
வொருபெரியாரைச் சுட்டி அக்குலம் பெருமையடைதல் வழக்கிற் காண்க.
ஆசிரியர் சேக்கிழாரைக் குடிப்பெயராலே வழங்குவது இதனை விளக்கும்;
"இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" என்ற திரு முருகாற்றுப்படையும்
சிந்திக்க. "கானவர்குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட" (662) என்றது
காண்க.
விழுமிய
வேளாண் குடிமை வைப்பு - வேளாண் குடியின்
விழுப்பமாவது வாய்மை திறம்பாமையும், நினைப்பினாலும் தீமையில்லாமையும்,
தொழிலாற்றூய்மையும், கரவா வள்ளண்மையும் ஆம். "தீயவென்பன கனவிலு
நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்" (திருக்குறிப்பு - புரா 47), "தம்முரையும்
வணிகனுக்கொருகாற், சொற்ற மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப்,
பெற்ற மேன்மை" (மேற்படி 3), "நம்பு வாய்மையினீடு" (இளையான் குடி -
புரா - 1), "அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடி" - (திருநா
- மரபு - 15) என்பன முதலாக ஆசிரியர் ஆங்காங்கும் காட்டிப் போந்தவை
காண்க. "வேளாளரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந், தாளாளர்",
"இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையெனா தீந்துவக்குந் தன்மையார்", என்ற
ஆளுடைய பிள்ளையார் (திருவாக்கூர்) தேவாரமுங் காண்க. விழுமம்
-
நன்மை (விழுமியார் - நல்லோர்). குடிமை வைப்பு அனைய
- குடிக்குச்
சேம நிதிபோல. முயற்சியின்றி யாவரும் பயன்பெறக் கூடியதும் எடுக்கக்
குறையாததும் சேம நிதியாம். இது இவரது கரவாத வள்ளன்மை குறித்தது.
மேன்மையினார்
மானக்கஞ்சாறனார் - மானம் - மேன்மை -
பெருமை, நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை. மேன்மையினாராதலின்
இப்பேர் பெற்றார் என்று பேர்ப்பொருள் விளக்கம் செய்தவாறு. 7
873. |
பணிவுடைய
வடிவுடையார்; பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்; தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே யேவல்செயுந் தொழில்பூண்டார். 8
|
(இ-ள்.)
பணிவுடைய வடிவுடையார் - (அவர்) பணிவை
வெளிப்படுக்கும் வடிவினையுடையவர்; பணியினொடும் ..... பேறுடையார் -
பாம்பினோடு குளிர்ந்த சந்திரனை அணிந்த சடைமுடியுடைய
சிவபெருமானுக்கு ஆளாகின்ற தகுதி பெற்ற குறைவில்லாத பெரும்
பேற்றினையுடையவர்; தம்பெருமான்......பூண்டார் - தமது பெருமான்
றிருவடிகளைச் சார்வாகவுடைய துணிவுகொண்ட தொண்டர்களுக்கே ஏவல்
செய்யும் தொழிலை மேற்கொண்டவர்;
(வி-ரை.)
பணிவுடைய வடிவு - திருவடிவின் றோற்றமே அவரது
உள்ளத்தின் பணிவை ஏற்றவாறு வெளிப்படுக்கும் என்பது. இங்குப் பணிவு
என்பது பெரியார் முன் தம்மை மிகச் சிறியாராய்க் கொண்டு ஒழுகும்
ஒழுக்கம். "தாழ்வெனுந்தன்மையொடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு, மூழ்பெற
லரிது" (சிவஞா - சித் - 2 - 91), "மேதகையா ரவர்முன்பு மிகச்சிறிய
ராயடைந்தார்" (சிறுத் - புரா - 15) என்பன காண்க. "குலம்பொல்லேன்
குணம்பொல்லேன்" என்பன முதலாக அப்பர் சுவாமிகள் திருவாக்கிற் கண்ட
இலக்கிய அமைதியின்படி தமது வாழ்வுகளையும் குறைபாடுகளையுமே
எண்ணி ஏங்கிப் பெரியாரது முன்பில் நிற்பதே சைவத்தின்
அடிப்படையாதலின் இவ்வாறு கூறினார். "சீரடியார் கூடி, யெண்ணிலா ரிருந்த
போதி லிவர்க்கியா னடியே னாகப், பண்ணுநா ளெந்நா ளென்று பரமர்தான்
பரவி"யும், அவர்கள் "எல்லார்க்குந் தனித்தனிவே றடியேனென்றார்வத்தாற்"
|