|
மணப்பருவம்
- பனிரண்டாண்டு நிரம்பும்பருவம். மங்கைப்பருவம்
என்பர். இதுவே மணஞ்செய் பருவ மென்பது முந்து நூல்களுட்கண்ட முறை.
இது போலவே ஆண் மக்களுக்கும் மணப்பருவம் 16வது வயதிற் பேசப்படும்
152 பார்க்க.
குலக்கொழுந்து
- குலமாகிய கொடியின் உச்சியில் விளங்கும்
மேன்மையும், வயதின் இளமையும்பற்றிக் கொழுந்து
என்றார்.
கொழுந்தினுக்கு மணப்பருவம் - கொழுந்து பருவம்பெற்று
முற்ற
மணம்பெறும். உவமைக்கேற்றபடி பொருந்த உரைக்க நின்றது காண்க.
சுருளும்
- என்பதும் பாடம். 15
881.
(வி-ரை.) திருமகட்கு.......தீபம்
- உருவாலும் திருவாலும்
ஒளியாலும் அருளாலும் இலக்குமியினும் இவ்வம்மையார் மிக்கிருப்பர்;
திருமகள் தரும் செல்வம் போல அழிந்துபடாது இவ்வம்மை காரணமாக
வரும் செல்வம் இருகுடிக்கும் நித்தியமாகிய அருட்செல்வமாய் விளங்கிற்று;
திருமகள் சிவனடியார் பணி கேட்டுத்திரியா நிற்க, இவ்வம்மையார்
அருணிறைந்த அடியார்க்குத் துணைவியாராயினர்; மேலும் இவ்வம்மையாரது
கற்பின்றிறம் மழைக்குதவும் தன்மையுடையது என்றிவை முதலிய
காரணங்களால் திருமகட்கு மேல் விளங்கும் என்றார்.
செம்மணியின்
தீபம் - இயற்கையாலும் தீட்டுதல் முதலிய
செயற்கையாலும் மங்காத ஒளியுடையது என்க.
மகட்குமேல்
விளங்கும் மணி என்பதற்கு இவ்வாறன்றி
நான்கனுருபை ஏழனுருபாக்கி மகளின்மேல் - மகளிடத்து - என்றுகொண்டு
மகளிடத்து அணியாக விளங்கும் மணி என்று உரைப்பாருமுண்டு.
தீபம்
- அன்பின் பெருமையினையும் அருளின் பெருமையினையும்
எடுத்துக் காட்டாக உலகில் விளக்கும் பொருளென்பார்
இவ்வம்மையாரை
விளக்கு என்றுவமித்தார்.
ஒரு
மகளை - ஒரு - ஒப்பற்ற. மகள் - இங்குப் பெண் என்ற
மாத்திரையாய் நின்றது. நாயனாரின் என்று வருவித்து அவரது மகளாரை
என்றுரைப்பாருமுண்டு.
மகளை
- மகற்கு - மகட்பேச என்று கூட்டி உரைக்க. மகற்கு
-
மணமகனுக்கு. மகட்பேச - மணம்பேச - மணமகளாகக்
கொள்வது பற்றிப்
பேச. இதுமரபுவழக்கு.
ஓங்குகுல
மரபினராய் - குலத்தாலும் மரபாலும்ஓங்கி ஒத்து
உள்ளாராய். மரபு - பெரும்பிரிவு. குலம்
- அதனுட் சிறுபிரிவு. குடி -
கோத்திரம் - என்பர். நாயனாரை அரசர் சேனாதிபதியாம் குடி (872)
என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. சைவ சமய பரமாசாரியராலும்
பாடப்பெற்ற பெருமை பற்றியும் ஓங்கு (குலம்) என்றார்.
கருமிடற்று..........தமர்
- தமர் - சுற்றத்தாரைக் குறித்துப்
பெரும்பாலும் வழங்கும் இச்சொல் இங்கு அன்புபூண்ட அடிமைத் திறத்தின்
தொடர்பு என்ற அதன் உண்மைப் பொருள் குறித்தது. தம்மவர் எனற்பாலது
தமர் என வழங்குவதாம். தமர் - இது கிளைப்
பொருட்பெயர்ப் பகுபதம்.
தாம் என்னும் பகுதியும் அர்
என்னும் விகுதியும் பெற்றுத் "தான்றாநா முதல்
குறுகும்" என்பதனாற் பகுதி முதல் குறுகி உடன்மே லுயிர் ஏறி முடிந்தது.
"எம்பிரான்றமரேயோ?" (318), "நங்கள்பிரான் றமர் ஒருவர் என" (அப்பூதி -
புரா - 9) முதலியவை காண்க. தமர் - இங்கு,
வழி வழி யடிமைச்சார்பு
குறித்தது. தமராதலின் நம்பிகள் தூது விட்டமைபற்றிச் சினந்தனர் என்பதும்
குறிப்பு.
மரபினராய்.......தமராய்
- ஒத்த குடியும், மரபும், இவற்றிற்கு
மேலாய்ச் சிவனடிமைத்திறமுடைமையும் என்றித்திறங்களை மகட்பேச வந்த
பெருமுதியோர் எடுத்துரைத்தனர் என்றதாம்.
வரும்பாட்டில் இதனை
மொழிந்த மணத்திறம் என்றது காண்க. 153
- ல் உரைத்தவையும் பிறவும்
பார்க்க.
|