|
கழல்
ஏயர் பெருமகன் - கழல் - வீரக்கழல். அரசர் சேனாதிபதிக்
குடியின் அடையாளம் குறித்தது. ஏயர் பெருமகன்
- ஏயர்கோன் என்பது
வழக்கு. பெருமகன் - இங்குக் கோன்
- தலைவன் - என்ற பொருளில்
வந்தது. ஏயர்கோனார் - (883), ஏயர்குல
மன்னவனார் (900) என்பனவும்,
பின்னர் அவர் தம் புராணத்தில் வருவனவும் காண்க.
ஏயர்
- இவரது குடிப்பெயராம். கேகயம் - ஒரு நாடு;
கேகயர்
என்பது ஏயர் என்று மருவி வழங்குவதாயிற்றென்பர் ஆராய்ச்சியாளர். இது
குடிப் பெயர் என்பது "ஏயர்குலப் பெருமான்" (885), "ஏயர் கோக்குடிதான்,
மன்னி நீடிய வளவர் சேனாபதிக்குடியாம்" (ஏயர்கோன் - புரா - 5)
என்பவற்றானறிக. இவ்வாறன்றி இதற்குக் கழலேயர் என்பவரது
பெருமகனாராகிய கலிக்காமர் என்ற உரைகள் தவறு.
பெருமுதியோர்
- வயது நிறைந்த அனுபவத்தாலும், அறிவாலும்
முதிர்ந்தவர். இவர்களே இருதிறத்தார்க்கும் பொருந்துவனவற்றைத் தக்கபடி
எடுத்துரைத்து மணம் பொருந்தவைக்க வல்லவர்களாதலின் இன்னோரை
அனுப்பி மணம் பேசுதல் முன்னாள் வழக்கு. 153 - 154 பார்க்க. இவர்கள்
வயதால் மட்டுமன்றி அறிவாலும் முதிர்ந்தோர் என்பதனை வந்த
முதறிவோரை என வரும்பாட்டிற் கூறுவது காண்க.
மன்னுலகில்
- என்பதும் பாடம். 16
882.
|
வந்தமூ
தறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின் விரும்பி மொழிந்தமணத்
திறங்கேட்டே
"எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயு" மெனச்
சிந்தைமகிழ் வுறவுரைத்து மணநேர்ந்து செலவிட்டார். 17 |
(இ-ள்.)
வெளிப்படை. (இவ்வாறு மணம் பேச) வந்த முதிர்ந்த
அறிவுடையவர்களை மானக்கஞ்சாறனார் முந்தையோர்களது முறைமைப்படி
விரும்பி வரவேற்று, அவர்கள் சொல்லிய மணத்திறம் பற்றிய பேச்சுக்களைக்
கேட்டு, "எமது மரபுக்குத் தகும் தன்மையினால் இது பொருந்துவதாகும்"
என்று மன மகிழ்வுறச் சொல்லித்தமது மகளாரை மணஞ் செய்து கொடுக்க
இசைந்து, அவர்களைச் செல்ல விடுத்தனர்.
(வி-ரை.)
முந்தை முறைமையின் - பழைய உறவினரென்று அறிந்து
அம்முறையினால் என்ற உரை பொருந்தாதென்க.
எந்தமது........ஏயும்
- இது நாயனார் கேட்டுத்துணிந்தவாறு அவரது
மனத்தின் செய்கை. மரபு - வேளாண் மரபும்
அரசர் சேனாபதிக் குடியும்
என்ற உலக உடலின் நிலைவழக்கும், அரன்பால் அன்புரிமையுடைய
தமராகிய உயிரின் நிலை வழக்கும் எள்ற இருவகையும் குறித்தது.
உள்ளத்தின் குண நிலை நோக்காது உடலைப்பற்றிய குலம் முதலியவற்றையே
நோக்கி மணந்துணிதல் சிறப்புடைத்தன்று. அதனையும் நோக்காது பண நிலை
முதலிய கீழ் நோக்கங்களையே கொண்டு மண நிகழ்த்தும் இந்நாள் வழக்கு
அறிஞரால் வெறுத்துக் கடியப்படுவதென்க.
சிந்தை
மகிழ்வுற - தமது சிந்தை மகிழ்ச்சி பொருந்த என்றும், வந்த
மூதறிவோரது சிந்தை மகிழ்வுற என்றும், இருதிறமும் பொருந்த உரைக்க
நின்றஅழகு காண்க. மணமிசைந்த
மகிழ்ச்சியின் இருதிறத்தோர் மனமும்
கலந்து ஒன்றாதலின் இவ்வாறு ஒரு தொடரால் இருதிறமும் பெறவுரைத்த
குறிப்பும் காண்க.
மணநேர்ந்து
- மணமகன்றிறத்தோர் மணம் பேசவந்து பெண்
கேட்டலும், அதற்கு மகட்பெற்றோர் இசைந்து செலவிடுத்தலும் மண
நிகழ்ச்சியின் இன்றியமையாத முற்பகுதிகள். இவையே மணத்தின் தொடக்கம்
என்க. உண்மைத் தன்மையில் இந்நேர்ச்சியே மணம் நிகழ்ந்து முற்றிய
செயலாகக் கொள்வதும் அறிவோர் செயலாம். "எந்தையும் எம்மனையுமவர்க்
கெனைக்கொடுக்க விசைந்தார்கள்,
|