|
அந்தமுறை யாலவர்க்கே
யுரியதுநா னாதலினால், இந்தவுயி ரவருயிரோ
டிசைவிப்பன்" (திருநா - புரா - 32) என்று திலகவதியம்மையார் துணிந்ததும்,
பின்னர் வேறெவரையும் மணஞ்செய்ய விசையாது வாழ்ந்ததும் ஆகிய சில
சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. உலகவழக்கு நிலையிலும் ஒரு பயன்
கருதி ஒருவர் ஒரு பொருளைக் கேட்டலும் கேட்கப் பட்டார் அதற்கு
இசைந்து நேர்தலும், இசைவு என்ற வழக்கு மூலத்தை முற்றுப்
பெறுவிப்பனவாகும் என்ற சட்டமுறையும் காண்க. இதனை
Offer
and
Acceptance என்பர் நவீனர்.
செலவிட்டார்
- இருக்க வைத்துத் தாமதியாது, சென்று மணத்துடன்
திரும்பும் வகை விடுத்தனர். மணநேர்ந்த பின் அப்பொருள் காரியத்தில்
விரைவின் நிறைவேற்றுதலின் தீவிரம் குறித்தது. இதனையே "சுபம் சீக்கிரம்"
என்ற பழமொழி உணர்த்தும். 17
| 883.
|
சென்றவருங்
கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர் கோனாரு மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கு நேர்வாய
மன்றல்வினை மங்கலநாண் மதிநூல்வல் லவர்வகுத்தார். 18
|
(இ-ள்.) வெளிப்படை. சென்றவர்களாகிய முதியோரும்
மானக்கஞ்சாறனார் மணம் இசைந்தனர் என்ற செய்தியைச் சொல்ல,
மலைபோன்ற தோள்களையுடைய ஏயர்கோனாரும், அதுகேட்டு மிக்க
விருப்பத்தினைக் கொண்டு நின்றனராக, இந்நிலையில் இருதிறத்தவர்க்கும்
பொருந்துவதாகிய கல்யாணஞ் செய்தற்குரிய மங்கல நாளை அதற்குரிய
சோதிட முதலிய நூல்களிற் கூர்ந்த மதிவல்லவர்கள் வகுத்தனர்.
(வி-ரை.)
குன்றனைய புயத்து என்றது அவர் அரசர்
சேனாபதிக்குடியில் வந்த உடல் வல்லமை குறித்தது. மலைமலிந்ததோள்
என்றவிடத் துரைத்தவை பார்க்க.
விரும்பி
நின்ற நிலைமையின் - நாயனார் மணநேர்ந்த செய்தியைக்
கேட்டு மிக விருப்பத்தோடும் அதனை மகிழ்ந்து உளங்கொண்டனர்;
ஆதலின் அந்நிலைமையில்,
இரண்டு............நாள்
- இருதிறத்தார்க்கும் பொருந்துதலாவது
நாட்பொருத்தம், கோட்பொருத்தம், பலப்பொருத்தம், செய்தொழிற்
பொருத்தம் முதலிய பகுதிகள் யாவும் சோதிட நூல்களில் விதித்தவாறு
இருதிறத்தவர்க்கும் நன்மை தருவனவா யிருத்தல். மங்கல
நாள் - மணநாள்.
மணத்திருநாள் (158), திருமணஞ்செய் கலியாணத் திருநாள் (திருஞான - புரா
- 1169), நன்னிலைமைத் திருநாள் (மேற்படி 1172), மணமீக் கூறுநாள் (மேற்படி
1182) என்பன காண்க.
இத்தொடரே
இரண்டு திறத்து ஆர்க்கும் நேர்வு ஆய என்று
பிரித்து, இவ்வாறு மன்றல் வினை மங்கல நாளினை மதிநூல் வல்லவர்கள்
வகுத்ததனில், அந்நாள் நாயனாரது திருமகளார்க்கு மன்றல்
வினை
நாளாகவும், நாயனாருக்கு நித்திய மங்கலமாகிய சிவபோகப் பெருவாழ்வு
தரும் மங்கல நாளாகவும், இருதிறத்தன்மையில்
நிகழ்வது என்று குறிப்பாற்
பொருள் தருமாறு நிற்பதும் காண்க. மங்கலமென்பன ஏனையவெல்லாம்
உபசார வழக்கேயா யொழிவன வென்பதும், சிவப்பேறு ஒன்றே
பெருமங்கலமாமென்பதும் உண்மைநூற் றுணிபு. "தொண்டர்க்கு, மங்கலமாம்
பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத், தெங்கள்பிரான் கணம்புல்ல
ரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்" (கணம்புல் - புரா - 8) என்றதுகாண்க.
நேர்வாய
- உடன்பாடாகிய என்றுரைப்பாரு முண்டு.
மதிநூல்
வல்லவர் - இவர்கள் ஒரு மங்கலங் கருதி வகுத்தநாளே,
அந்த மங்கலத்தோடு யாவரும் போற்றும் மற்றொரு பெருமங்கலத்துக்கும்
ஏதுவாகியது
|