| 885.
|
கஞ்சாறர்
மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்பெருமை யேயர்குலப் பெருமானுந்
தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலு மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய, 20
|
| |
|
| 886. |
வள்ளலார்
மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தந் திருமனையி லொருவழியே
தெள்ளுதிரை நீருலகு முய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய வும்பர்பிரான் றாமணைவார், 21 |
| |
|
| 887. |
முண்டநிறை
நெற்றியின்மேன் முண்டித்த திருமுடியிற்
கொண்டசிகை, முச்சியின்கட் கோத்தணிந்த வெற்புமணி,
பண்டொருவ னுடலங்கம் பரித்தநா ளதுகடைந்த
வெண்டாள மெனக்காதின் மிசையசையுங் குண்டலமும், 22 |
| |
|
| 888. |
அவ்வென்பி
னொளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும்,
பைவன்பே ராவொழியத் தோளிலிடும் பட்டிகையு,
மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலு, மனச்
செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும், 23 |
| |
|
| 889. |
ஒருமுன்கைத்
தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும்,
அருமறைநூற் கோவணத்தின் மிசையசையுந் திருவுடையும்,
இருநிலத்தின் மிசைத்தோய்ந்தவெழுதரிய திருவடியுந்,
திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க, 24 |
| |
|
| 890. |
பொடிமூடு
தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்,
கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத்
தடிநீடு மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25
|
885.
(இ-ள்.) வெளிப்படை. மானக்கஞ்சாறனார்
தமது மகளைக்
கொடுப்ப, அப்பெண்மணியை மனைவியாராக ஏற்றுக் கைப்பிடிக்க
வருகின்ற குறையாப் புகழையும் பெருமையையும் உடைய ஏயர்குலத்
தலைவராகிய கலிக்காமனாரும் தம்முடைய சால்பு நிறைந்த
சுற்றத்தாரெல்லாரும் நெருங்கி நிறைய, இன்னியங்கள் ஒலிக்க, முகில்கள்
பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த கஞ்சாறூரின் பக்கத்து
வர, 20
886.
(இ-ள்.) வெளிப்படை. வள்ளலாரது மணவெழுச்சி
அந்தக்
கஞ்சாறூரின் பக்கத்திற் சேர்வதற்கு முன்னர், மலர்போன்ற
கண்ணையுடைய ஒள்ளிய இழையணிந்த பெண்ணைப் பெற்றவருடைய
திருமனையில், ஒருவழியாக, மேற்கிளம்பும்
அலைகளையுடைய கடல்சூழ்ந்த
உலகம் உய்வதற்காக, அவருடைய உள்ளத்தின் நிலைப்பொருளாகிய
தேவர்பெருமானார் தாம் அணைவாராய், 21
887.
(இ-ள்.) முண்டநிறை நெற்றியின்மேல் -
திரிபுண்டரமாகத்
திருநீற்றினை அணிந்த நெற்றியின்மேல்; முண்டித்த.......ஏற்புமணி -
மழித்த திருமுடியில் வைத்த சிகையின் நுனியில் கோத்து அணிந்த
எலும்புமணியும்; பண்டொருவன்..........என - முன் ஒரு காலத்தில்
திருமாலின் கழியுடல் முழு எலும்பினைக்
|