|
கொண்ட நாளிலே
அவ்வெலும்பைக் கடைந்தெடுத்த வெண்முத்துக்கள்போல
விளங்கும், காதின்.......குண்டலமும் - காதின்கண் அசைகின்ற குண்டலமும், 22
888.
(இ-ள்.) அவ்வென்பின்..........தாழ்வடமும்
- அந்த
எலும்பினாலாகிய ஒளியுடைய மணிகளைக் கோத்து
அணிந்துகொண்ட
திருத்தாழ்வடமும்; பைவன்பேர்..........பட்டிகையும்
- படத்தினையுடைய
வலிய பெரிய பாம்பு நீங்கத் தோளில் இடுகின்ற யோகப்பட்டையாகிய
உத்தரியமும்; மைவந்த..........நூலும் -
கரிய மயிரினால் வடமாக
முறுக்கப்பட்ட பூணூலும்; மனச் செவ்வன்பர்...............பொக்கணமும்
செம்மையாகிய மனத்தினையுடைய அன்பர்களது பிறவியை மாற்றுகின்ற
திருநீற்றுப்பையும்,
889.
(இ-ள்.) ஒரு முன்கை.........சூத்திரமும்
- ஒரு - முன்கையினிடத்து
ஓரெலும்பு மணியைக் கோத்து அணிந்த விளக்கமாகிய
கயிறும்;
அருமறை..........உடையும் - அரிய வேத நூல்களாகிய கோவணத்தின்மேல்
கட்டிய திருவுடையும்; திருவடியில்......முத்திரையும்
- திருவடியில்
திருப்பஞ்சமுத்திரைகளும்; திகழ்ந்து இலங்க - மிகவிளங்க,
890.
(இ-ள்.) பொடிமூடு.......பான்மையராய்
- நெருப்பின்மேல் மூடிய
சாம்பல் போலத் திருமேனியின்மேல் விளங்கிய அழிவில்லாத தன்மையுடைய
திருநீற்றை நிறையப் பூசிய தன்மையுடையராய்; கொடிநீடும் மறுகணைந்து -
கொடிகள் மிக விளங்கிய திருவீதியை யடைந்து; தம்முடைய.......புகுந்தார் -
தம்முடைய குளிர்ந்த தாமரைபோன்ற திருவடிகள் நிலைத்துத்
தங்குதற்கிடமாகிய மணத்தினையுடைய அன்பராகிய மானக்கஞ்சாற
நாயனாரது திருமனையினுள் புகுந்தருளினர். 25
இந்த
ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
885.
(வி-ரை.) மகட்கொடுப்ப
- தமது மகளை அவர்க்கு
மணமகளாகக் கொடுக்க.
கைப்பிடிக்க
- மணவாட்டியாக - மனைக்கிழத்தியாக -
ஏற்றுக்கொண்டது குறித்துக் கையைப் பிடித்துக்கொள்ள. இதனைப்
பாணிக்கிரகணம் என்பர் வடவர். (பாணி - கை; கிரகணம் - பற்றுதல்). இது
மணத்தில் இன்றியமையாததொரு சடங்கு.
தாம்
சால்புநிறை சுற்றம் - சால்பு - "அன்புநா ணொப்புரவு
கண்ணோட்டம் வாய்மையோ, டைந்துசால் பூன்றிய தூண்"
என்பது குறள்.
பிறர் தீமை சொல்லாராய்ப், பணிதலுடைமையின் யாவரையும் கூட்டிக்கொண்டு
எக்கருமத்தையும் முடிக்க வல்லாராய், இன்னா செய்தார்க்கு மினியவே
செய்வாராய், ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரா உறுதிப்பாடுடையவராய்
உள்ளாரே சால்புடையார் எனப்படுவர். இத்தகைய மேன்மைக் குணங்கள்
படைத்தோர்களாகிப் பின்னர், இச்சரித நிகழ்சசியில் இச்சுற்றத்தார்
இறைவனால் நாயனாரது அன்பின் பெருமையைப் புவனங்களில் ஏறச்
செய்யப் பெற்றதனைக் கண்டனர்; கலிக்காமனாரது திருமணத்தை
"உலகெலாந் தலைசிறப்ப" நிகழ்வித்துக் கண்டு களித்த பெருமையினர்;
ஆதலின் இவர்களை இவ்வாறு விதந்து கூறினார். மேற்பாட்டில் நாயனார்
சுற்றத்தாரையும் இவ்வாறே "தங்குலநீள் சுற்றமெலாம்" என்றதும்
இக்கருத்துப்பற்றியாம். அங்குரைத்ததுபோல ஈண்டும் சால்பிற் சுற்றம் -
நிறைசுற்றம் என்று தனித்தனி கூட்டியுரைக்க நின்றது காண்க. மேலும்
இச்சுற்றத்தார் பலரும் எயர்கோனார்க்கும் ஆளுடைய நம்பிகளுக்கும்
இறைவர் செய்யும் அருள் வெளிப்பாட்டினைக் காணும் பேறு பெறுவர்
என்பதனையும் இங்குச் சிந்திக்க.
தலைநிறைதல்
- கூட்டமாகச் சேர்தல். மஞ்சுஆலும் - ஆலுதல்
-
அசைதல். ஆலுதல் - ஒலித்தல் என்றலுமாம்.
"ஆலுமறை சூழ்கயிலை" (174)
என்றது காண்க.
886.
(வி-ரை.) வள்ளலார்
இங்கு ஏயர்கோன் கலிக்காமரைக்
குறித்தது. இவரது வள்ளன்மையின் பெருமை இவர்தம் புராணத்துட்
கண்டுகொள்க. இவர், தம்கீழ் வாழும் நாடு மழைபெய்து பஞ்சநீங்கிச்
செழிக்கும்பொருட்டு பன்னிரு வேலி நிலமும், பெருமழை நிற்கப் பெயர்த்தும்
அவ்வாறே பன்னிருவேலி
|