அடிநீடும்
மனத்து - திருவடியினை எஞ்ஞான்றும்நீங்காது
நிலைபெறக்கொண்ட மனத்தினையுடைய. "இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும்", "வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும்", "நனவிலும்
கனவிலும்", "தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்", "கையது வீழினுங்
கழிவுறினும்", "வெந்துயர் தோன்றியோர் வெருவுரினும்", வெப்பொடு
விரவியோர் வினைவரினும்", "பேரிடர் பெருகியோர் பிணிவரினும்",
"உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்", "பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்"
என்று பற்பல வகையாலும் திருவாவடுதுறைத் தேவாரத்தில் "திருவடி மறவாப்
பான்மையோ " ராகிய ஆளுடையபிள்ளையார் அருளியபடி, இங்கு உலகர்
மறக்கக்கூடியனவாகிய எக்காலங்களிலும் நாயனாரது மனத்தில்,
மறக்கப்பெறாது திருவடி நிலைபெற்று நீடிற்று என்பதாம். உள்ளநிலைப்
பொருள் (886), ஆளாகும் பதம் பெற்ற தணிவில் பெரும் பேறுடையார் (873)
என்றவை காண்க.
மனையின்
அகம்புகுந்தார் - மனையில் வந்து அன்பரது
மனத்தினுட்புக்கருளினார் என்ற குறிப்பும் காண்க. 25
891.
|
வந்தணைந்த
மாவிரத முனிவரைக்கண், டெதிரெழுந்து,
சிந்தைகளி கூர்ந்து, மகிழ் சிறந்தபெருந் தொண்டனார்
"எந்தைபிரான் புரிதவத்தோ ரிவ்விடத்தே யெழுந்தருள
வுய்ந்தொழிந்தே னடியே" னென் றுருகியவன்
பொடுபணிந்தார். |
26 |
(இ-ள்.) வெளிப்படை. வந்து அணைந்த மாவிரதராகிய முனிவரைக்
கண்டு, அவர் முன்பு எழுந்து நின்று, மனமிகக் களித்து, மகிழ்ச்சிகூர்ந்த
பெரியதொண்டராகிய நாயனார், "எந்தைபிரானாகிய புரிகின்ற
தவத்தினையுடைய பெருமான் இவ்விடத்தே வருதலினால் அடியேன்
உய்ந்துவிட்டேன்" என்று மனம் உருகிய அன்புடன் அவரைப் பணிந்தனர்.
(வி-ரை.)
மாவிரத முனிவர் - மாவிரதம்
என்னும் அகப்புறச்
சமயத்தின் கொள்கைப்படி கொண்ட முனிவர் வேடமுடையவர்.
களிகூர்ந்து
- மகிழ்சிறந்து - ஒரு பொருட் பன்மொழி என்பர்.
களிகூர்தல் அக நிகழ்ச்சியும், மகிழ்சிறத்தல் அது காரணமாகப் புறத்து
நிகழும் மெய்ப்பாட்டுக்கு மூலமா யிருப்பதும் குறித்தன காண்க.
எந்தைபிரான்
புரிதவத்தோர் - எந்தை பிரானிடத்து அன்புபுரிதவம்
என்றும், பிரானைப்புரி (இடைவிடாது போற்றுகின்ற) தவம் என்றும்
உரைப்பாருமுண்டு. எந்தைபிரானாகிய இறைவனீரே தவத்தோராய் வந்தீர்
என்ற உண்மைக் குறிப்பும் காண்க. இதனைத் தொடர்ந்தே, வரும்பாட்டில்
"நற்றவராம் பெருமானார்" என்றதும் கருதுக.
எழுந்தருள
உய்ந்தொழிந்தேன் - எழுந்தருள்வதனால் உறுதியாக
உய்திபெறுவேன் என்பதாம். பின் சரித நிகழ்ச்சிக் குறிப்புமாம். துணிபுபற்றி
எதிர்காலம் இறந்த காலமாய் வந்தது. வருதலால் உய்தி பெற்றேன் என்று
இறந்தகாலப் பொருளே கொண்டுரைப்பாருமுண்டு.
இதனாற்
பெரியாரைக் கண்டு களித்துப் பணியும் முறை காட்டப்பட்டது.
892.
|
நற்றவராம்
பெருமானார் நலமிகுமன் பரைநோக்கி
"யுற்றசெயன் மங்கலமிங் கொழுகுவதென்" னென,
"வடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன் வதுவை"யெனப்,
பெருந்தவரும்
"மற்றுமக்குச் சோபனமா குவ"தென்று வாய்மொழிந்தார்.
|
27 |
(இ-ள்.)
வெளிப்படை. நல்ல தவராக வந்த இறைவனார், நன்மை
மிகும்அன்பராகிய மானக்கஞ்சாறரைப் பார்த்து, "இங்கு மங்கலம் பொருந்த
நிகழ்வதாகிய
|