குறிப்பே யன்றிப் புறநோக்கும் கண்ட வுணர்வு துறந்தார்போல்" என்ற
தண்டியடிகள் புராணக் கருத்தினை இங்குச் சிந்திக்க. தம் முன் பணிந்து
ஐந்தங்கமுந்தோயத் தாழ்ந்தெழுந்தவரது கூந்தலின் புறமே
தோற்றப்படுமாதலின் புறநோக்கி என்றார்
எனவும், புறம்கூந்தல் எனக்
கொண்டு முதுகினிற் கிடந்த கூந்தல் எனவும் உரைப்பாருமுண்டு.
அஞ்சலி
மெய்த்தொண்டர் - மகளாரைக் கொணர்ந்து பணிவித்த
நாயனார் மாவிரதியரைத் தாமும் அஞ்சலி செய்தபடியே நின்றனர் என்பதாம்.
மெய் - இயற்கை யடைமொழி.
அணங்கு
இவள் - அணங்கு போன்ற இவள் என உவமவுருபு
விரிக்க. அணங்கு - தெய்வப் பெண்.
மயிர்
- எவ்வகை உயர்வான கூந்தலேயாயினும் தலையினின்று
களையப்பட்ட பின் "தலையினிழிந்த மயிர்" என்று இகழ்ந்தொதுக்கப்
படுவதோர் அசுத்தப் பொருளாமாதலின் இங்கு மயிர்
என்று இலேசுபடக்
கூறினார். மஞ்சுதழைத்தது போலும் என்பது முதலிய பெருமைகளுடையது
என்று எண்ணாது நாம் இதனை மயிர் என்ற மட்டிலே
கருதுவோம்
என்பதும், அரிந்த பின்னர் அதனை மீள அவ்வாறே வளரக்
கொடுத்துவிடுவோம் என்பதும், இவ்வாறு இழிந்ததாகக் கருதும்
மயிரேயாயினும் நாம் தரிக்கும் உயர்ந்த மயிர்க்கயிற்றுப் பூணூலுக்கு ஆகும்
என்பதும், உயர்ந்த பயன்தருவதாம் என்பதும் ஆகிய இவை குறிக்கவே
மயிர் - பஞ்சவடிக்கு - ஆம் என்றார்.
பஞ்சவடி
- மயிர்க்கயிற்றாலியன்ற பூணூல் வடம். (பஞ்சம்
- விரிவு;
வடி - வடம்) மயிரினால் அகலமாகப் பின்னல்
செய்த மயிர்க்கயிற்றுப்
பூணூல் வடம். "மயிர்க் கயிறு தரித்தான் றன்னை" , "பஞ்சவடி மார்பினானை"
முதலிய தேவாரங்கள் காண்க.
அடித்தலங்
கொடுப்பார் பஞ்சவடிக்கு ஆம் என்றார் - என்று
கூட்டுக. கொடுப்பார் - வினையாலணையும் பெயர்.
பரவ அடித்தலம்
கொடுக்கு மியல்புடையார் ஆதலின் மயிர் பஞ்சவடிக்காம் என்றார் என்க.
பரவுதல் - மன மொழி மெய்களால் வழிபடுதல்.
பஞ்சவடிக்காக மயிரை
அரிந்து நீட்டிய நாயனார் பரவ அவர்க்குத்தம் அடித்தலமாகிய முத்தி
கொடுப்பாராகி - என்றார் என்ற கூட்டிக்
கொடுப்பார் என்றதனை வினை
முற்றெச்சமாகக் கொண்டுரைப்பினுமமையும். அடித்தலம் கொடுத்தனை 898-ல்
கூறுகின்றார்.
அலர்ந்தமலர்க்
கூந்தல் - என்பதும் பாடம். 29
895.
|
அருள்செய்த
மொழிகேளா வடற்சுரிகை தனையுருவிப்,
"பொருள்செய்தா மெனப்பெற்றே" னெனக்கொண்டு,
பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்த லடியிலரிந்,
தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட, |
30
|
|
|
|
896. |
வாங்குவார்
போனின்ற மறைப்பொருளா மவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி
யோங்கியவிண் மிசைவந்தா; ரொளிவிசும்பு நிலநெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி; தொழும்பர்தொழு
தெதிர்விழுந்தார்.
|
31 |
895.
(இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு அருளிச் செய்த
மொழிகளைக்கேட்டு மானக்கஞ்சாறனார் வலிமையுடைய உடைவாளை
உருவிப், "பொருட்படுத்தி (இது பஞ்சவடிக்கு) ஆம் என்று சொல்லப்
பெற்றேன்" என்று மனத்துட்கொண்டு, பூங்கொடி போன்ற மகளாரது
இருள்செய்த கரிய கூந்தலை அடியில் அரிந்து, எதிரே நின்ற, மயக்கம்
செய்யும் பிறப்பை யறுப்பாருடைய மலர்க்கையில் நீட்ட, 30
|