பக்கம் எண் :


1154 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     முன் நின்றவராகிய மானக்கஞ்சாறனார், ஒன்றுபட்ட மனத்துடனே,
கைகளை உச்சிமேற் கூப்பிக்கொண்டு. சிவபெருமானது பெரிய கருணைத்
திறத்தை எந்நாளும் துதிக்கும் பெரும்பேற்றினை நேரே பெற்றனர்.

     (வி-ரை.) பெருங்கணநாதர் - பெரிய சிவகணத் தலைவர்கள்.

     நின்றவர்முன் நின்றவர் - சொற்பொருட்பின் வருநிலை. (விடைமிசை)
நின்றவர் என்றதற்கு வந்துநின்ற இறைவர் எனவும், (முன்) நின்றவர்
என்றதற்கு எழுந்து நின்றவர் எனவும் கொள்க

     ஒருங்கிய நெஞ்சு - "ஒன்றியிருந்து நினைமின்கள்" (கோயில்
திருவிருத்தம்), "ஒருங்கிய மனத்தோடு" (திருவெழுகூற்றிருக்கை), "ஒருவனையு
மல்லா துணரா துள்ளம்" (திருத்தாண்டகம்) என்றபடி பிறிதொன்றிலும்
செல்லாது. சிவபெருமானிடத்தில் முழுமையும் நிலைத்த மனம்.

     கரங்கள் உச்சியின்மேற் குவித்து - "தொழுது விழுந்தார்" (896)
என்றது போல இச்செயல் பயிற்சி வசத்தால் தானாகவே நிகழ்வது.

     ஐயர் - பெருமையையுடையவர் - சிவபெருமான்.

     பெருங்கருணைத்திறம் - தம்மையும் ஒரு பொருட்படுத்தி இறைவர்
தாமே மாவிரதியாராக வந்தும், மயிரினைக்கேட்டும், மறைந்தும், விடைமேல்
வெளிப்படவந்தும், பரிவு புவனங்களில் ஏறச் செய்தோம் என்றும் செய்த
அருட்டிறங்களையே பேரருள் என்று எண்ணியெண்ணிச் சிந்தைநைந்து
போற்றினாராதலின் திறம் போற்றும் என்றார்.

     நெஞ்சு - கரம் - போற்றும் - என்றவற்றால் முறையே மனம் -
மெய் - மொழி என்ற முக்கரணங்களின் செயலும் கூறினார்.

     ஒருங்கிய நெஞ்சொடு - முக்கரணங்களும் இறைவர் பாலனவாக
ஒருவழிப்பட்டுச் சென்றன என்பார் ஒருங்கிய என்றார். ஏனை,
மெய்ம்மொழிகளின் தொழில்களுக்கும் மன இயக்கமே காரணமாதற்
சிறப்புடைமை பற்றி ஒருங்கிய நெஞ்சொடு என்று அவற்றை மனத்தொடு
புணர்த்தியோதினார். பெரும்பேறு - பெறுதற் கரிய பெரிய பேறு. இங்கு
இறைவர்பாற் கூடுதலாகிய முத்திப்பேறு குறித்தது. திருவடிமறவாது போற்றி
யிருத்தல் முத்தி யிலக்கணமென்பர். "ஏகமாய் நின்றே" என்னும்
சிவஞானபோதம் நோக்குக.

     நேர்பெற்றார் - நேரே பெற்றனர் என்க. உடனே பெற்றார்
என்றலுமாம். நேராகப் பெற்றார் - அடையப்பெற்றார் என்பாரு முண்டு. 33

899. தொண்டனார் தமக்கருளிச், சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியா ரெழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க, மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக், கலிக்காம னார்புகுந்தார்.
34

     (இ-ள்.) வெளிப்படை. தொண்டனாருக்கு இவ்வாறு அருளிச்
செய்தபின், தேவர்கள் சூழ்ந்து துதிக்க இண்டை மாலையையணிந்த நீண்ட
சடையினையுடைய சிவபெருமான் மறைந்தருளினார்.வண்டுகள்
மொய்த்தற்கிடமாகிய கூந்தலினையுடைய மணமகளாரை மணஞ்
செய்துகொள்ளும் பொருட்டு, மணக்கோலத்தைக் கண்டவர்களுடைய கண்கள்
களிப்படையும்படி கலிக்காமனார் வந்தணைந்தனர்.

     (வி-ரை.) தொண்டனார் தமக்கு - மெய்யன்பர் தமக்கு (897) என்று
பார்க்க.

     இமையோர் சூழ்ந்து துதி செய்ய என்க. மானக்கஞ்சாறனார் பெற்ற
பெரும் பேறுபற்றித் தேவர்கள் துதித்தனர். இப்பேறு தமக்குப் பெறுதற்
கரியதாயினமை கருதியும் துதித்தனர் என்க.

     இண்டை - முடிக்கணியும் மாலைவகை, "தொண்ட ரஞ்சுகளிறும்
மடக்கிச் சுரும்பார். மல, ரிண்டை கட்டி வழிபாடு செய்யுமிடம்" (திருஞா -
தேவா - செவ்வழி -