ஒல்லை - விரைவாக. நெல் அறுத்துக் கூலிபெற்று
வரக் காலந்
தாழ்க்கு மாதலின் அதுவரை இறைவர் பசித்திருப்பாரே எனக் கருதி
விரைவில் ஊட்டுவிக்கும் ஆர்வம் குறித்தது. ஒல்லை - பழமையாகிய -
எப்போதும் உண்பிக்கும் நியதிப்படி என்றலுமாம்.
இன்அமுதா
- அமுதா - அமுதாக - இறைவர்க்கு இனிய திருவமுது
ஆகுமாறு அமைத்துக்கொண்டு.
ஒழுகுவார்
- முற்றெச்சம். ஒழுகுவாராகி - திருஅமுதாக் கொண்டு -
என வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. 9
912. (வி-ரை.)
சாலி - இங்குச் செஞ்சாலி, செந்நெல் குறித்தது.
நேடுதல் - தேடுதல்.
அறுத்து
அவைதாம் பெறும் கூலி - அறுத்து - அறுத்ததற்காக.
அவை - அவற்றில் - அச்செந்நெல்லில்.
கூலி - கூலிநெல்.
எல்லாம்
அமுதாக் கொண்டு - அக்கூலிச் செந்நெல்லில் ஒரு
பகுதியும் தமக்கென்று ஆக்கிக் கொள்ளாமல் முழுமையும் இறைவரது
திருவமுதுக்காகவே அமைத்துக் கொண்டு என்பார் எல்லாம் என்றார்.
நீலநெல்
- கார்நெல். கூலிகொண்டு கூலியாகக் கிடைத்த கார்
நெல்லினால்.
உண்ணும்
நாள் - தமது உணவு ஆக்கிச் சீவிக்கும் நாளில்.
மால்
அயற்கு அரியார் - சிவபெருமான். அதுமாற்றுவார்
- அது
- அதனையும்; கார்நெற்கூலி கொண்டு உண்ணும் செயலையும். சிறப்பு
உம்மை தொக்கது. முன்னர்ச் செல்வம் அறியாமை மாற்றி (909) யதனோடு
அதனையும் என இறந்தது தழுவிய எச்ச உம்மை என்று கொள்ளுதலுமாம்.
மாற்றுவார் மாற்றுவாராகி. முற்றெச்சம்.
மாற்றுவார் - ஆக்கிட என வரும்
பாட்டுடன் கூட்டுக. அரியார் - அவர் களதறிவினைத்
திரோதான சத்தியால்
மறைத்துத் தாம் வெளிப்படாது நிற்பவர் "மற்றவ ரறியா மாணிக்க மலையை"
என்ற திருவிசைப்பாக் காண்க.
அரியார்
- அதுமாற்றுவார் - அரியார் என்றதனால் மறைத்தற்
றொழிலையும், மாற்றுவார் என்றதனால் முன்னர்
அதனால் ஆன்ம சிற்
சத்தியை மறைத்துக் கன்மங்களை ஊட்டிக்கழிப்பித்துப் பக்குவப்படுத்தி
இருவினை ஒப்பும் மலபரிபாகமும் வரச் செய்து பின்னர் அந்த மறைத்தற்
றொழிலை மாற்றிய அருட்டொழிலையும் குறிப்பாலுணர்த்தினார்.
இங்குக்
கார்நெல்லை மாற்றிச் செந்நெல்லாக்கியதும் இக்குறிப்புப்பட
நிற்பது உன்னுக. கார்நெல் உணவு கொண்டு இருந்த தாயனார் அவ்வனுபவம்
கழிய நின்றது கருமானுபவம் நீங்கி வீடு பெறும் பக்குவம் பெற்ற
நிலையினையும், செந்நெல்லை இறைவர்க்கு ஊட்டியது, தாமும்
செம்மையேயாகிய சிவபதத்தில் (923) என்றும் வாழும் நிலையும் குறித்தன.
இறைவர்
அது மாற்றுவாராகவே, ஆசிரியரும் இதுவரை கூறிவந்த
யாப்பினைத் தாமும் மாற்றுவாராய், மேல்வரும் சரிதப் பகுதியை அறுசீர்
விருத்தத்தாற் கூறத் தொடங்குதல் காண்க. 10
913.
(வி-ரை.) நண்ணிய -
(அதுமாற்றுவாராகிய - 912) இறைவரது
திருவுள்ள நண்ணிய. தாயனார் நண்ணிய என்று உரைப்பினுமமையும்.
வண்ணவார் கதிர் - வண்ணம் - நெற்கதிர்களின்
திரட்சியும், வார் -
அவற்றின் நீளமும் குறித்தன. கதிர்கள் அதிகம் மணிப்பிடியுள்ளனவாயும்
பெரியனவாயும் வளர்ந்தன.
சிந்தை
- மனத்தின் செய்கையும், என்று - வாக்கின் செம்மையும்,
அமுது செய்விப்பார் - மெய்யின் (உடலின்)
செய்கையும் ஆக
முக்கரணங்களும் ஒன்றிய திருத்தொண்டு குறித்தது காண்க.
சிந்தை
மகிழ்ந்து என்க. வினைச்சொல் முன்னர் வந்தது நிகழ்ச்சியின்
தீவிரங் குறித்தது.
|