பக்கம் எண் :


1178 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
917. போதரா நின்ற போது புலர்ந்துகா றளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடு கையாற்
காதலா லணைத்து மெல்லாங் கமரிடைச் சிந்தக்
                                    கண்டு
பூதநா யகர்தந் தொண்டர் "போவதங் கினியே"
                                   னென்று,
15
   
918. நல்லசெங் கீரை தூய மாவடு வரிசி சிந்த,
"அல்லறீர்த் தாள வல்லா ரமுதுசெய் தருளு மப்பே
றெல்லையி றீமை யேனிங் கெய்திடப் பெற்றி லே"
                                    னென்
றொல்லையி லரிவாட் பூட்டி யூட்டியை யரியலுற்றார்;
16
   
919. "ஆட்கொளு மையர் தாமிங் கமுதுசெய் திலர்கொ"
                                 லென்னாப்
பூட்டிய வரிவாள் பற்றிப் புரையற விரவு மன்பு
காட்டிய நெறியி னுள்ளந் தண்டறக் கழுத்தி னோடே
யூட்டியு மரியா நின்றா ருறுபிறப் பரிவா ரொத்தார்.
17

    917. (இ-ள்.) போதரா நின்ற ... தப்பி - (இவ்வாறு) போகின்ற போது
உடல் வாடியிருந்ததனால் கால் தளர்ந்து தப்பி; வருந்தி வீழ்வார் - வருந்தி
வீழ்கின்றவரை; மட்கல மூடுகையால் காதலால் மாதரார் அணைத்தும் -
ஆனைந்து கொண்ட மட்கலத்தை மூடும் கையினால், விழாமற் காக்கும்
ஆசையினால் மனைவியார் அவரை அணைத்தும்; எல்லாம் ... கண்டு -
செந்நெல்லரிசி, மாவடு, செங்கீரை என்ற எல்லாம் நிலப்பிளப்பிலே சிந்த,
அதுகண்டு; பூத நாயகர் தம்தொண்டர் - பூதநாயகராகிய
சிவபெருமானுடையதொண்டராம் தாயனார்; "இனிஏன் அங்குப் போவது"
என்று - "இனி ஏன் அங்குப் போதல் வேண்டும்" என்று, 15

     918. (இ-ள்.) வெளிப்படை. "நல்லசெங்கீரையும், தூயமாவடுவும்,
அரிசியும் சிந்தியிட்டதனால் துன்பநீக்கி ஆடகொள்ளவல்லாராகிய
சிவபெருமான் அவற்றை அமுது செய்து அதற்கருள்கின்ற அந்தப் பேற்றினை
அளவில்லாத தீமையையுடையேன் இங்குக் கிடைக்கப்பெற்றேனில்லையே"
என்று விரைவில் அரிவாளைப் பூட்டித் தமது ஊட்டியை அரியலுற்றாராய், 16

     919. (இ-ள்.) வெளிப்படை. "என்னை ஆட்கொள்ளும்
பெருமானார்தாம் இங்கு அமுது செய்தா ரிலர்கொல்!" என்று கழுத்தினிற்
பூட்டிய அரிவாளைப் பிடித்துக்கொண்டு, குற்றநீங்கப் பொருந்தும்
அன்புகாட்டிய வழியில் நெஞ்சங்குழல்


நெ. 66. P. 34. S. 10. இது இராசேந்திர சோழர் I உடைய 19-வது ஆண்டுக்
கல்வெட்டு. கி.பி. 1030. கல்வெட்டுத் துறை ஆராய்ச்சியாளர் திரு. K. V.
சுப்பிரமணிய ஐயர் "கொங்குமலர்" பத்திரிகைக்கு எடுத்து எழுதியுதவியது iv.
p/ 72.)

     இந்தக் கல்வெட்டில் இவ்வைந்தும் இன்னின்னவாம் என்றுகூறி
அவற்றின் சேர்க்கையளவு முதலியனவும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனைந்து -
ஆன்பெற்ற அஞ்சு - என்றற்றொடக்கத்த திருவாக்குகளால் இவையைந்தும்
ஆனிடத்தினின்று தோன்றும் வெவ்வேறான பொருள்கள் என்பதறியப்படும்.
பால்திரிந்து வேறு பொருளாகிய தயிராதலும், தயிரைக் கடைந்து அல்லது
பாலைத்திரட்டி எடுக்கப்படும் வெண்ணெயை உருக்க நெய் என்றதோர் வேறு
பொருள் பெறுதலும் உணரப்படும். மோரும் வெண்ணெயும் அங்ஙனம் வேறு
தனிப்பொருள்களாகாமையும் கண்டு கொள்க. மருத்து நூல் முறையில்
பஞ்சகவ்விய நெய் முதலிய மருந்துகளுக்குக் கூட்டும் பொருள்கள்
இவ்வைந்துமே யாதலும், இவ்வாறல்லாது மோரும் வெண்ணெயும் சேர்ப்பின்
அவை பயன்றராமையும் பிறவும் காண்க.