பக்கம் எண் :


1182 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே", "முட்டிலேன் தலைகீறேன்" என்பன
வாதிய திருவாசகங்களும், "உயிர்நீப்பர் மானம் வரின்" என்ற திருக்குறளும்,
பிறவும் காண்க. நாயகனைப் பிரிந்த கற்புடை மடவார் உயிர் துறத்தலும்,
துணை பிரிந்த அன்றில்கள் இறத்தலும் போன்றவை விரவும் அன்பு
காட்டிய நெறியேயாவன
என்பதனை இங்கு நினைவு கூர்க. "பேசாத
நாளெல்லாம் பிறவாநாளே" (திருத்தாண்டகம்), "சொல்லாதன கொழுநாவல்ல
சோதியுட் சோதிதன்பேர், செல்லாச் செவிமரந் தேறித் தொழாதகை
மண்டிணிந்த, கல்லாநினையா மனம் வணங்காத் தலையும் பொறையா,
மல்லா வவயவந் தானு மனிதர்க்கசேதனமே" (பொன்வண்ணத்தந்தாதி - 42)
என்றபடி இறைவனுக் காட்படாத உடலும் அவயங்களும் தள்ளத் தகுந்தன
என்பது ஞானநூற் றணிபாம். இறைவனது "தூய நாணமலர்ப் பாதந்
தொடர்ந்துளா" ராகிய (907) தாயனார் அத்தொடர்பாலாகிய ஆட்செய்யப்
பெறுந் தன்மையின் நீங்கியதாக எண்ணிய போது, தலைமகனது
பிரிவாற்றாமையால் தலைமகள் அடையும் கையறு நிலையை அடைந்தவராகி,
அவ்வாறு பொருந்திய அன்பு காட்டிய நெறியாலே இப்படித் துணிந்தனர்
என்று ஆசிரியர் அமைதி காட்டியது காண்க.

     உள்ளத் தண்டு அற - கழுத்தினுள்ளேயுள்ள அழகிய தண்டு
அறும்படி. அன்பு நெறியினின்றும் மனது விலகாதபடி என்றுரைப்பாரு
முண்டு.

     ஊட்டியும் கழுத்தினோடே என மாற்றுக. மிடறும் - பின் கழுத்தும்.
கழுத்து முழுமையும்.

     அரியா நின்றார் - தம் கழுத்தைத் தாமே அரிதல் வலிந்தசெய
லாதலானும், அதற்கு இங்குக் கொண்ட கருவி, போர் வாள் முதலிய வலிய
கருவியல்லாது அரிவாளே யாதலானும், அச்செயல் ஒரு வீச்சில் நிகழாது
பின்னும் முன்னுமாக பன்முறை அரிவாளை வலிந்து ஊன்றி ஈர்த்தலால்
நிகழும் கால நீட்டிப்புக்குறிக்க இவ்வாறு ஆநின்று என்ற நிகழ்கால
இடைநிலை தந்து கூறினார். அரியா நின்றார் - அரிந்து கொண்டு நின்றார்
என்றலுமாம்; நிற்றல் - அச்செயலிற் பிழையாது தொடர்தல்.

     உறு பிறப்பு அரிவார் ஒத்தார் - "பாசப் பழிமுதல் பறிப்பார்போல"
(460) என்றவிடத் துரைத்தவை பார்க்க. பிறப்பு உறுகின்ற நிலையை
அறக்களைந்து வீடு பெறுவார் போன்றார் என்க. இச்செயலின் பின்விளைவும்
குறித்தது.

     அரியா நின்றார் - அரிகின்றாராகிய அவர். வினையாலணையும்
பெயர். அரியா நின்றார் - ஒத்தார் என முடிந்தது. 17

920. மாசறு சிந்தை யன்பர் கழுத்தரி யரிவாட் பற்று
மாசில்வண் கையை மாற்ற வம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையு, மாவடு "விடேல்வி டே"லென்
னோசையுங், கமரி னின்று மொக்கவே யெழுந்த
                                 வன்றே.
18

     (இ-ள்.) வெளிப்படை. குற்றமறுக்கும் சிந்தையுடைய அன்பர் தமது
கழுத்தை அரிகின்ற அரிவாளைப் பிடிக்கும், குற்றமில்லாத வண்மையுடைய
கையின் செயலைத் தடுக்க அம்பலத்தாடும் ஐயரது வீசிய செய்ய இடது
திருக்கையும், மாவடுவினது "விடேல் விடேல்" என்ற ஓசையும் கமரிலிருந்து
அப்போதே ஒருசேர எழுந்தன.

     (வி-ரை.) மாசறுசிந்தை - மாசு அறுக்கும் சிந்தை என்க.
மேற்பாட்டிற் "புரைஅற" என்றார். மாசு - முன் குறித்த புரை - தீமை -
(919) என்ற அவை. தமது தீமையினாலே இறைவர் செய்திலர் என்றும்,
இறைவருக் காட்படாது இருக்கும் பிறப்புத் தள்ளத்தக்கது என்றும் உறுதி
பெற்றாராதலின் அதனை அறுக்கச் சிந்தையுள் எண்ணினார் என்பார் மாசு
அறு சிந்தை
என்றார்.