அன்பர் - ஞானி என்ற பொருளில் வந்தது.
"இருஞ்சுரபிக் கெங்கும்,
உருக்காண ஒண்ணாத பான்முலைப்பால் விம்மி யொழுகுவது போல்
வெளிப்பட்டருளுவன் அன்பர்க்கே" என்ற (சிவஞானசித்தி
- 12, 4) விடத்து
"அன்பரென்றது ஈண்டு ஞானிகண்மேற்று, ‘அன்பரொடு மரீஇ'
என்புழிப்போல" என்றுரைத்ததும், சிவஞானபோதம்12-ம் சூத்திரம்,
அன்பரொடு, என்றதற்கு "அங்ஙனம் அயரா அன்பு செய்யும்
மெய்ஞ்ஞானிகளோடு" என்றுரைத்ததும் காண்க.
அன்பர்
கழுத்து அரி அரிவாள் - கழுத்தரியும் வன்செயல்
அன்பினால் ஆகியது என "அன்பு காட்டிய நெறி" என்று மேற்பாட்டிற்
கூறியதனை அனுவதித்து இங்கு அன்பர் என்றார்.
ஆசில்
வன்கையை - ஆசு - குற்றம். கையினுக்குக் குற்றமாவது
கைகளாற் செய்யத்தக்கவற்றைச் செய்யாமையும், செயத்தகாதவற்றைச்
செய்தலுமாம். செய்த்தக்கவை "கைகாள் கூப்பித் தொழீர் கடி மாமலர்
தூவிநின்று" (அப்பர் சுவாமிகள் - திருவங்கமாலை) என்ற தமிழ்மறையால்
விதிக்கப்பட்டன. அவை இறைவனது வழிபாடும், அதற்காவன செய்யும்
சரியை கிரியை என்றவற்றிற்பட்டனவுமாம். தாயனாரது கைகள்
தமக்குணவில்லாத போதும் கூலிசெய்தும் திருப்பணி முட்டாது செய்தும்
வந்தனவாதலின் இவ்வாறு கூறினார். இங்குக் கழுத்தரிதலாகிய வலிந்த செயல்
செய்யினும் அக்கையினுக்குக் குற்றம் சாராதென வற்புறுத்துவார் ஆசில்
என்றார். குற்றமாகாமை மேலுரைக்கப்பட்டது. வண்மை - திருப்பணி
முட்டுப்படக் காணும் காலத்து உயிரையும் ஈடாகத் தரும் வள்ளன்மை.
கையை - கைசெய்யும் செயல் முயற்சியினை. கை - என்பது அது செய்யும்
செயல் முயற்சிக்காகி வந்தது ஆகுபெயர்.
மாற்ற
- இங்குத் தடுக்க என்ற பொருளில் வந்தது.
அம்பலத்து
ஆடும் ஐயர் - அருட் கூத்தர். வீசிய செய்ய
கை -
இடது கை. வீசுகரம் என்ப. "சிக்கன வா வீசுகரம்", "பொருந்தி லிமைப்பிலி
யவ்வென்ற பொற்கை" முதலிய திருவாக்குக்கள் காண்க. ஐயரது இடதுபாகம்
அருளாகிய அம்மையாருடையதாதலின், அத்திருக்கை அருளுடையதென்பார்
வீசிய செய்ய கை என்றார். கந்தைபுடைத்
திடவெற்றுங் கற்பாறையில்
திருக்குறிப்புத் தொண்டர் தமது தலையை மோதப் புக்கபோது, அங்கு
"வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை" (திருக்குறி - புரா
- 125) என்ற வரலாறு இங்குச் சிந்திக்கத்தக்கது.
கமரினின்றும்
கையும் ஓசையும் ஒக்கவே எழுந்த என்க.
கண்ணப்ப நாயனார் இடது கண்ணைத்தோண்ட அம்பு ஊன்றிய கையினை
இறைவரது வளையலணிந்த இடது கை சிவலிங்கத்திலிருந்து முளைத்துத்
தடுத்ததுவும், ‘கண்ணப்ப நிற்க' என்ற வாக்கும் உடன் எழுந்ததுவும் இங்கு
நினைவு கூர்க. 827 பார்க்க.
மாவடு
விடேல் விடேல் என்னோசை - மாவடுவினைக் கடித்தலால்
உளதாகும் விடேல் என்ற ஓசை. மாவடுவின் ஓசை என்க. செயப்படு
பொருட் காரகத்தின் வந்த ஆறனுருபும் பயனும் உடன் றொக்கு நின்றன.
"வடுவின் ஓசை" (924, 925) என்பவற்றை நோக்குக. 902 பார்க்க. அடுக்கு
உறுதியும் மிகுதியும் குறித்தது. "சிலம்பி னோசைமிகவு மிசைப்பித்தார்"
(கழறிற் - புரா - 42) என்ற வரலாற்றை நினைவு கூர்க.
எழுந்ததன்றே
என்பது பாடமாயின் தனித்தனி கூட்டுக்கொள்க.
அன்றே - அப்போதே.
இவ்விடத்து
"ஆண்டவன் கோயிலில் மட்டும் வீற்றிருக்கின்றானில்லை
என்பதும், அன்பர்கட்கு அவன் எங்கிருந்தும் அருள்செய்வான் என்பதும்,
அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒருவன் என்பதும் விளங்குவது
காண்க" என விசேடவுரை காண்பாருமுண்டு. இறைவனைத்
திருக்கோயிலுள்ளிருக்கும் திரு
|