மேனியில் வழிபடுவோர்
அவர் திருக்கோயிலினுள் மட்டும் வீற்றிருக்கின்றார்
என்றும் ஏனையிடங்களில் அவனது நிறைவு இல்லை என்றும்
கொள்கின்றார்கள். என்றகுறிப்புடன் இவ்வுரை காணப்படுகின்றது.
திருக்கோயிலினுட் சிவலிங்கத் திருமேனியிலும், அடியார் திருவேடத்திலும்
இறைவன் தயிரின் நெய்போல வெளிப்பட்டும், ஏனையிடங்களிற் பாலின்
நெய்போல மறைந்தும் விளங்குவன் என்பது உண்மைநூற் றுணிபு.
"கண்டதொரு மந்திரத்தால்" என்ற சிவஞானபோதம் (2ம் சூத்)
உதாரண வெண்பாவில் "விறகிற் கடைகோலாற்றீ கடைந்துழி விளங்கும்
அல்லுழி விளங்குவதன்றானாற் போல, உயிர்கட்குப் புத்திமுத்தி யளித்தற்
பொருட்டுக் காணப்பட்ட தாவர வடிவின்கட் கலப்பினால் அதுவே தானாய்,
அதுவன்றி வேறு பொருளுமாமியல் புடைய முதல்வன், அதுவே தானாகக்
காணாதார்க்குத் தம்மாலறியப்பட்ட தொரு மந்திர சாந்நித்திய மில் வழி
அவ்வடிவின்கண் விளங்காது நின்று, அஃதுள்வழி விளங்கித்தோன்றும்
பொருளாய், அவ்வாறன்றி அவ்வடிவே அவனாகக் காணப்பெறும் உண்மைத்
தவமுடையார்க்கும் அப்பெற்றியனேயாய் விளங்கித் தோன்றான் கொல்லோ?"
என்று எமது மாதவச் சிவஞான முனிவர் உரைத்தனவும், இவ்வாறே
"திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனி தன்னை" என்ற சிவஞான சித்தியாரின்
(12 - 4) கீழ் உரைத்தனவும் இங்குச் சிந்திக்கத்தக்கன.
விறகிற்றீப்
போலவும், பாலின் நெய்போலவும், மணியிற் கதிர்
போலவும் எங்கும் நிறைந்து மறைந்து நிற்கும் இறைவன் இம்மூன்றிலும்
"முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே"என்றபடி தீவிரதர முடைய
அன்பர்க்கே அவர்களது பக்குவ முதிர்ச்சியால் அவர் நினைத்தவிடத்தில்
வெளிப்படுவன் என்பதும், ஏனையோர்க்கு அவ்வாறு வெளிப்பட விளங்கான்
என்பதும் துணிபு. திருக்கோயிலினுள் இறைவனது வெளிப்பாடும், ஈண்டுத்
தாயனார்க்குக் கமரே முன்னிலையாக வெளிப்பாடும் அன்பின் தீவிர பேதம்
குறித்தன வாதலின் எல்லார்க்கும் இவ்வாறு கூடாமையின் இங்கு
இவ்விசேடவுரையின் பொருத்தம் ஆராயகத் தக்ககது. அன்றியும் அற்றை
நாளைக்கு முன் வரை தாயனாரும் திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியிலே
இறைவனை வழிபட்டனர் என்பதும், அன்றைக்கும் "அங்குப் போவதேன்"
என்றதும் காண்க. 18
921.
|
"திருக்கைசென்
றரிவாட் பற்றுந் திண்கையைப் பிடித்த
போது
வெருக்கொடங் கூறு நீங்க வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத், தம்பிரான் பேணித் தந்த
வருட்பெருங் கருணை நோக்கி யஞ்சலி கூப்பி நின்று, |
19
|
|
|
|
922. |
"அடியனே
னறிவி லாமை கண்டுமென் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி!
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி!
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி!" |
20 |
|
|
|
923.
|
என்றவர்
போற்றி செய்ய விடபவா கனனாய்த் தோன்றி,
"நன்றுநீ புரிந்த செய்கை; நன்னுத லுடனேகூட
என்றுநம் முலகின் வாழ்வா" யென்றவ ருடனே நண்ண
மன்றுளே யாடு மையர் மழவிடை யுகைத்துச் சென்றார். |
21
|
921.
(இ-ள்.) வெளிப்படை. (இறைவருடைய அவ்வாரெழுந்த)
திருக்கைசென்று, அரிவாளினைப் பற்றும் (தாயனாரது) வலிய கையைப்
பிடித்தபோது, அவர் வெருக்கொண்டு, அப்போதே அரிவாளினால்
உளதாகிய புண் நீங்க
|