அமுது செய்யப்பெற்றிலேன் - 917, 918 பார்க்க.
வரிவடு
- நிறமுடைய மாவடு. "மன்னு பைந்துணர் மாவடு" (908)
என்றது காண்க.
வன்கழுத்து
- அரிந்தும் அரியுண்ணாமலும், பின்னர் அருளால்
ஊறுநீங்கியும், இறைவனதுகழுத்துப்போல என்று நிலைத்த வாழ்வுபெற்றும்
விளங்கிய தன்மை குறிக்க வன்மை என்ற அடைமொழி தந்தோதினார்.
நாமம்
- தாயன் என்பது அவரது பெயர். அர் -
உயர்வு குறித்த
பன்மை விகுதி. மாறர் - மாறனார் - (440) என்புழிப்போல.
தூய
நாமம் அரிவாட்டாயர் ஆயினார் என்க. தூய
- தூய்மையைத்
தரத்தக்க. திருதொண்டத்தொகையுள் ஆளுடைய நம்பிகள்
இக்கருத்துப்பற்றியே "எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்" என்று
துதிக்க நின்றமையும், அதனைத் துதித்து உலகம் தீமை நீங்கித் தூய்மை
பெற்று உய்கின்றமையும் குறிக்கத் தூய என்றார். அடியார் திருநாமங்கள்
தூய்மை செய்வனவாம் என, "அடியிணைகள், சிந்தனைசெய் திந்தத்
திருநாமக் கோவையினை, மந்திரமாக் கொண்டு மயிர் சிலிர்த்து -
நைந்துருகி, மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள், கைதவமும்
புல்லறிவுங் கற்பனையும் - மையலுந் தீர்ந்,
தத்துவிதா னந்த வகண்டபரி்
பூரணத்தில், நித்தியமாய் வாழ்வார் நிசம்" என்று திருத்தொண்டர் திருநாமக்
கோவையினுள் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் போற்றி அருளியிருப்பது
காண்க. "திருஞான சம்பந்தர்" என்ற நாமமந்திரம் சொல்லக்
கேட்டலும்
பாண்டியர் அயர்ச்சியை நீங்கினார் (திருஞான - புரா - 721) என்ற வரலாறும்
இங்கு நினைவு கூர்க. 22
925. |
முன்னிலை
கமரே யாக முதல்வனா ரமுது செய்யச்
செந்நெலி னரிசி சிந்தச் செவியுற வடுவி னோசை
யந்நிலை கேட்ட தொண்ட ரடியிணை தொழுது
வாழ்த்தி
மன்னுமா னாயர் செய்கை யறிந்தவா வழுத்த
லுற்றேன். |
23 |
(இ-ள்.)
செந்நெலின் அரிசி சிந்த - செந்நெல்லரிசி முதலியவை
சிந்தியிட; கமரே முன்னிலையாக - அவை சிந்திய அந்தக் கமரே
முன்னிலையாக; முதல்வனார் அமுதுசெய்ய - இறைவர்
திருஅமுது
செய்தருள; அந்நிலை - அந்நிலையில்; வடுவின் ஓசை செவியுறக்கேட்ட
தொண்டர் - மாவடுவினது "விடேல்" என்ற ஓசையைத் தம் காதுகள்
பொருந்தக்கேட்டதாகிய பேறுபெற்ற தொண்டராகிய தாயனாரது;
அடியிணை ... வாழ்த்தி - திருவடியிணையைத் தொழுது துதித்து,
அத்துணையானே; மன்னும் ... உற்றாம் - நிலைபெற்ற ஆயனாரது
செய்கையினைத் தெரிந்தபடி துதிக்கத் தொடங்குகின்றேன்.
(வி-ரை.)
முன்னிலை - இறைவர் அமுது செய்தருளுதற்கு
முன்னலையாயுற்றது. கமரே முன்னிலையாக என்க.
இதன் முன்னர்த்
தாயனாரது அமுதுகொள்வதற்கு முன்னிலையாயுற்றது சிவலிங்கத் திருமேனி;
இங்கு அந்த முன்னிலை கமரேயாயிற்று. முன்னிலை
- வெளிப்படும் இடம்.
அபிவியத்தி ஸ்தானமென்பர் வடவர். இறைவர் அமுது செய்தருள உற்ற
முன்னிலைகள் இரண்டேயென்பர்; அவை சிவலிங்கத் திருமேனியும் சங்கமத்
திருமேனியும் என்பன. "தாவர சங்க மங்க ளென்றிரண் டுருவினின்று,
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்" (சிவஞானசித்தி
2, 28) என்றதனாலறிக. இங்கு இறைவர் பூசை கொண்டது தாவரமாகிய
சிவலிங்கத் திருமேனியாம். இந்தக் கமரே சிவலிங்கமாயிற்று என்க.
முன்னிலை என்பது இங்குச் சிவலிங்கம் என்ற பொருளில் வந்தது என்பது
ஸ்ரீமத் செப்பறைச் சிதம்பர சுவாமிகள் கண்ட உரைக்குறிப்பு. முன்னிலை
-
காரணம் என்பர் ஆலாலசுந்தரம்பிள்ளை.
|